பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

பதிவு செய்த நாள் : 18 மே 2020 18:26

சென்னை, 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆசிரியர்களுக்கு முழு கவச உடைகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோடைடயன் உறுதியளித்துள்ளார்.

10ம் வகுப்பு தேர்வுகள் வரும் ஜூன் 1 ம்தேதி முதல் 12 ம்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, கிட்டதட்ட எட்டரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர்,  தாங்கள் படித்த பள்ளியிலேயே  மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்தது இதற்கிடையில் , நான்காவது முறையாக நேற்று சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில்  ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த  நிலையில்  தேர்வுகள் தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாயின இந்த நிலையில் சென்னையில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பத்தாம் வகுப்பு  தேர்வுகள் வரும் ஜூன் 1 ம்தேதி முதல் 12 ம்தேதி வரை திட்டமிட்டபடி நடைபெறும் தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை,  

தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, தேர்வு தள்ளி வைக்கப்படாது, முதல்வரின் ஆணைப்படி தேர்வு நடைபெறும் ,

 மாணவர்கள் மற்ற மாவட்டங்களில்  இருந்தாலும்  இ.பாஸ் மூலம் தேர்வில் பங்கேற்கலாம்,  மாணவருடன் பெற்றோரும் வரலாம்,  விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே விடுதிக்கு வந்து சேர வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை குறிப்பிட்ட பள்ளி நி்ர்வாகங்கள் செய்து தரவேண்டும். 

மலைப்பகுதி மாணவர்களும் தேர்வு எழுத உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,  தேர்வு எழுத இருக்கும் எந்தவொரு மாணவருக்கும் கொரோனா நோய்த்தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது,  தொற்று உள்ள பகுதிகளில்  தனி தேர்வு மையங்கள் அமைக்கப்படும், அந்த மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முழுக்கவச உடை அளிக்கப்படும்,

தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தற்போது எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பது குறித்து பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது,  மலைப்பகுதி மாணவர்களுக்கு கல்வி சேனல் மூலம் தேர்வு அட்டவணை அறிவிக்கப்படு்ம்,  இது குறித்து தகவல்கள் கிடைத்ததும் முதல்வரிடம் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்  பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த அச்சமும் இன்றி தேர்வு எழுதலாம்,