ஜப்பானியப் பொருளாதாரம் தேக்க நிலைக்கு நழுவியது

பதிவு செய்த நாள் : 18 மே 2020 16:48

டோக்கியோ

ஜப்பானியப் பொருளாதாரம் 1930களில் ஏற்பட்ட பெரும் பொருளாதாரத்  தேக்கத்துக்குப்பிறகு பிறகு மிகவும் மோசமான பொருளாதார தேக்க நிலையில் இன்று வீழ்ந்தது.

ஜப்பானிய உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியை கணக்கிடுவதற்கான அலுவலகம் இந்த விவரத்தை திங்கட்கிழமையன்று வெளியிட்டது.

உலகில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு ஜப்பான் ஆகும். கரோனா வைரஸ். தொற்று காரணமாக ஜப்பானியப் பொருளாதாரம் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது .அதன் ஏற்றுமதியும் உள்நாட்டு நுகர்வு மிகவும் குறைந்து விட்டது அதனால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் மிகவும் கடுமையான சரிவை சந்தித்தது.

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு 2015ஆம் ஆண்டு ஜப்பானியப் பொருளாதாரம் தேக்க நிலைக்கு சென்றது அதன் பிறகு சற்று முன்னேறி தேக்க நிலையிலிருந்து விடுபட்டது இந்தநிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அதன் ஏற்றுமதி மீண்டும் கணிசமாக குறைந்துவிட்டது. கரோனா வைரஸ் தொற்று உள்ள எல்லா நாடுகளிலும் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது அதனால் வர்த்தக நிலையங்களும் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் குறைந்த காரணத்தினால் விற்பனை அங்கு நடைபெறவில்லை. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது இந்த பாதிப்புகள் காரணமாக ஜப்பானிய உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி 3.4 சதவீத அளவுக்கு குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வரையிலான காலத்தில் உற்பத்தி 7.3% குறைந்துவிட்டது .இதனை இப்பொழுது வெளியான அரசு புள்ளிவிவரங்கள் உறுதி செய்தன.

2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலை இந்த அளவுக்கு ஆழமானது அல்ல என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபெ ஜப்பானில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். கரோனா வைரஸ் தொற்று ஜப்பானில் பரவி வருவதைத் தொடர்ந்து அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் கடந்த வியாழனன்று ஜப்பானின் பல பகுதிகளில் நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டது ஆனால் டோக்கியோ போன்ற பல முக்கிய நகரங்களில் இன்னும் நெருக்கடி நிலை அமலில் உள்ளது.

ஜப்பானியப் பொருளாதாரம் நடப்பு காலாண்டில் 22% குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானியப் பொருளாதாரம் தேக்க நிலைக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே ஜப்பானிய அரசு 1.1 லட்சம் கோடி டாலருக்கான ஊக்குவிப்பு திட்டம் ஒன்றை மார்ச்வெளியிட்டது. இதைத்தொடர்ந்து ஜப்பானிய வங்கியில் பல சிறப்பு சலுகைகளை அறிவித்தன. ஆனாலும் ஜப்பானியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பவில்லை ஜப்பானில் உள்ள மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டயோட்டா ஜூன் மாதம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கார் அளவுக்கு உற்பத்தியை குறைத்தது. தொடர்ந்து இப்பொழுது ஜப்பானிய பொருளாதாரம் தேக்க நிலைக்கு சென்றுள்ளது.