இரண்டே வாரங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ரெடியாகும் சூட்சமம்.

பதிவு செய்த நாள் : 18 மே 2020

கொரோனா ஆதி முதல் அந்தம் வரை சென்று எல்லோரையும் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக யாருமே நினைத்து பார்க்காத அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளம் வரை சென்று விட்டது. கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் ஒன்றாம் தேதி துவங்கம் என்று அரசு அறிவித்து விட்டது. 

இது எல்லா மாணவர்களையும் ஒரே அளவில் நிலை நிறுத்தாது. கொரோனாவின் தீவிரம் இன்னும் குறைந்தபாடு இல்லை. லாக்டவுன் எப்போது முடியும் என்பதும் தெரியவில்லை. இப்படி பட்ட சூழ் நிலையில் அரசு தேர்வு தேதியை அறிவித்திருப்பது மாணவர்களையும் பெற்றோரையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்திருக்கிறது.


இது அரசு பள்ளி மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும்தான் பெரும் குழப்பதை ஏற்படுத்திருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. இம் மாணவர்களில் எத்தனை பேரின் பெற்றோர் வேலையிழந்து அசாதாரண சூழல் குடும்பத்தில் நிலவலாம். அம் மாணவர்களுக்குதான் இது மோசமான தருணமாகதான் இருக்கும். ஆனால் தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வியை கற்று தேர்வுக்கு தயாராக இருக்கின்றனர். எந்த சூழ்நிலை இருந்தாலும் பொது தேர்வுக்கான தேதி அறிவித்தாகிவிட்டது. இனி ஒண்ணும் செய்ய முடியாது. தேர்வை எதிர் நோக்கிதான் ஆக வேண்டும். ஆகையால், தேர்வுக்கு இன்னும் இரண்டே வாரங்கள்தான் இருக்கின்றன. இதனை பயன்யுள்ளதாக மாற்றும் வழிகளை சுறுகிறார் கல்வியாளர் மற்றும் ஆசிரியர் மாதவன்.

மாணவர்களுக்கு அவர் கொடுத்த ஆலோசனைகள்:

*. முதலில் தமிழ் தேர்வுதான். ஆகவே அதை எதிர்கொள்ள மாணவர்கள் ஒரு வினா மதிப்பெண், மனப்பாடப் பகுதி, படத்திற்கு ஏற்றவாறு கவிதை மற்றும் கருத்து எழுத்திப் பழகுதல், அலகிட்டு வாய்ப்பாடு, படிவம் நிரப்புதல், கடிதம் எழுதுதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சிகளை செய்து பார்க்க வேண்டும்.*

*. ஆங்கிலப் பாடத்தைத் திருப்புதல் செய்யும்போது, முதலில் வரும் 14 ஒரு மதிப்பெண் வினாக்களை நன்கு பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு ஆங்கிலப் புத்தகத்தை முழுமையாக ஓரிரு முறை படித்துப் பார்ப்பது நலம். Spot the errors, Notice, Letter writing, Poem Comprehension, Poem appreciation - Figure of speech ஆகிய பகுதிகளை பழைய வினாத்தொகுப்புகளை வைத்துப் பயிற்சி செய்வதுடன், ¡, supplementary Reader- வரும் கதைகள், கதாபாத்திரங்கள் அனைத்தையும் பலமுறை படித்து மிகத்துல்லியமாக மனதில் இருத்தவும்.

*. கணக்கில் முக்கியமாக சாமண்டரி மற்றும் கிராப் ஆகியவையை மீண்டும் மீண்டும் போட்டு பார்க்க வேண்டும். நீங்கள் நினைக்கலாம் நாம்தான் பலமுறை போட்டு பார்த்திருக்கிறோமே என்று எண்ணி நேரடியாக தேர்வுக்கு செல்லக்கூடாது. அதேபோல் சில கணக்குகளை அடிக்கடி போட்டு பார்க்கணும். குறிப்பாக கணக்கு சூத்திரத்தை நன்கு மனப்பாடம் செய்து எழுதி பார்த்து சரியாக எழுதியிருக்கிறோமா என்பதையும் கவனிக்க வேண்டும். இவை எல்லாம் செய்துவிட்டுதான் கணிதத்தை சந்திக்கவேண்டும் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

*. அறிவியல் ஆசிரியர் சில வினாக்கள் முக்கியமானது என்று சொல்லிருப்பார். அவ் வினாக்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி அதற்கான பதில்களை நன்றாக படித்து நினைவில் நிறுந்துங்கள். அவற்றிற்கான படங்கள் இருந்தால் வரைந்து பார்த்து சரியாக பாகங்களை குறிக்கும் அளவுக்கு தயராக வேண்டும்.

*. சமூக அறிவியலைப் பொறுத்தவரையில் காலக்கோடு என்பது மிகவும் அவசியம். அந்த நிகழ்வுகளுடன் ஒட்டிய ஆண்டுகளையும் எழுதிப் பார்த்து நாம் ஆண்டுகளை சரியாக குறித்துள்ளோமா என்பதை ஒருமுறை செக் செய்ய வேண்டும். அப்படி அதில் தவறு ஏற்படும் பட்சத்தில் மீண்டும் ஆண்டுகளை மனப்பாடம் செய்யணும். தேர்வு எழுதும்போது ஆண்டு சரியாக நினைவுக்கு வரவில்லை என்றால் எழுதாமல் தவிர்ப்பது நல்லது. அதோடு வரைப்படத்தில் முக்கிய இடங்களை அடிக்கடி குறித்து பார்த்து பயிற்சி செய்ய வேண்டும்.

*. நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது. அரையாண்டு, முதல் திருப்புதல், இரண்டாம் திருப்புதல், முன்றாம் திருப்புதல் ஆகியவைகளின் வினாக்கள் அனைத்தும் வைத்து ஒரு முறை அதற்கான பதில்களை படித்துவிடவும்.

*. படிக்கும்போது பாடங்களை குறிப்பு எடுத்து எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தனித்திருக்கும்போது இக்குறிப்புகளைக் கொண்டு அப்பாடப் பகுதிகளை நினைவுப்படுத்தி பாருங்கள். அவற்றில் ஏதேனும் சிரமம் உண்டானால் உடனே அப்பாடப் பகுதியை திரும்ப திருமப் படித்து நினைவில் ஏற்றிக் கொள்ளுங்கள்.

*. படிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் அப்பாடத்திற்கான ஆசிரியரிடம் சேல்போனில் தொடர்புகொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துக்கொள்ளுவதால், உங்கள் சந்தேகம் விலகி பூரண தெளிவு பிறக்கும். அதோடு கடினமான பகுதி எதுயென்று நினைக்கிறீர்களோ அப் பகுதியை உங்களுடன் படிக்கும் மாணவர்களோடு உரையாடும்போது அந்த கடினம் ஈஸியாகி மனதில் அழமாக பதிந்துவிடும்.

*. நீங்கள் உடனே செய்யவேண்டியது. உங்களுடன் படிக்கும் மாணவர்களில் ஐந்து பேரை தேர்தெடுத்து கான்பரன்ஸ் கால் மூலம்  ஒவ்வொரு பாடத்திலும் உள்ள முக்கிய வினாக்களுக்கான பதிலைகளை திருப்புதல் செய்வதன் மூலம் ஒரே சமயத்தில் ஐந்து பாடங்களை திருப்புதல் செய்திடலாம்.

*. கடினமான பாடப்பகுதிகளை படங்களாக வரைந்து கண்ணில் படும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதால் அது நம்மையறியாமல் நம் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். தொடர்ந்து ஒரே பாடத்தைப் படிக்காமல் மாற்றி மாற்றிப் படிக்கும் போது நினைவின் வீச்சு அதிகரிக்கும்.

*. உங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் அப்பாடப் பகுதிகளிருந்து அவரே தேர்ந்தெடுத்து முக்கியமான தகவல்களையோ இல்லை மெட்டிரிலோ கொடுத்திருப்பார். இப்போது மறவாமல் அவற்றை திருப்புதல் செய்யவேண்டும்.

கொரோனாவால் வீட்டுக்குள்ளே மூடங்கிபோனா 10 வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வை நினைத்து நினைத்து மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இவ்வறான மாணவர்களை தேர்வுக்கு எவ்வாறு உற்சாக்கப் படுத்துவதற்கான வழிகளை கூறுகிறார் மனநல ஆலோசகர் பிரபாகரன்.

"இப்போது இருக்கும் சூழலில் மாணவரும் சரி, பெற்றோரும் சரி மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அதோடு அவர்களிடத்தில் ஒருவித பயமும் பாதுகாப்பு உணர்வும் இருக்காது. கொரோனா தொற்று பயம் ஒரு புறம் என்றால் மறுபுறம் இயல்பான வாழ்ககை துண்டிக்கப்பட்டு இருப்பது போன்ற சுழல் வேறு. பல பெற்றோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்காலாம். பாதுகாப்பற்ற சூழல் அக் குடும்பத்தில் இருக்கும் மாணவனையும் பாதித்திருக்கும். இத்தகைய பாதிகளிலிருந்து வெளியேறிதான் மாணவன் தேர்வுக்கு தயாராக வேண்டிய சூழல் நிலவுகிறது.

கொரோனாவால் மார்ச் 27ம் தேதி நடைபெற வேண்டிய தேர்வு தள்ளிபோனதால், இத்தனை நாட்கள் தேர்வு எப்போது வரும் என்று தெரியாமல் வேறு சிந்தனையில் இருந்திருப்பார்கள். இப்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதால் மாணவர்களிடத்தில் ஒரு பயம் தொற்றிக்கொண்டிருக்கும். அதோடு தேர்வு எழுத்த செல்லும்போது கொரோனா நம்மை தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்ச உணர்வும் ஏற்படும். பள்ளி சூழல் விடுபட்டு இத்தனை நாட்கள் வீட்டு சூழலில் இருந்ததால், தேர்வுக்கான பயிற்சியே தடைப்பட்டு போயிருக்கம். ஆகையால் முதலில் பயிற்சிக்கான அட்டவணையை தயார் செய்துவைத்துக்கொண்டு அட்வணை படி படிப்பதலில் கவனம் செலுத்தவேண்டும். படிக்கும்போது ஒரு மணி நேரம் படித்தால் 15 நிமிடம் ஒய்வு எடுக்கவேண்டும் அப்போதுதான் படிப்பªத்ல்லாம் நினைவில் நிற்கும். நிறைய நேரம் படிப்பதும் தப்பு. குறைவான நேரம் படிப்பதும் தவறு.


இந்த 40 நாட்கள் எதுவும் எழுதாமல் இருந்தால், நீங்களே ஒரு தேர்வை எழுதி பாருங்கள். இது உங்களுக்கு தோவு பயதை போகும். சரியான நேரதில் தோவு எழுத துணைபுரியும். மனதளவில் நீங்கள் தயாராக வேண்டிய ஒன்று இருக்கு, அது நல்ல து£க்கம். நன்றாக து£ங்கினால்தால் படிப்பதெல்லாம் நினைவில் தங்கும். நல்ல சத்தான உணவு எடுக்க வேண்டும். காலை, மாலை எந்த நேரத்தில் படித்தால் உங்களுக்கு கன்வெட்டாக இருக்குமோ அந்த நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். படிக்கும் போது முதலில் எளிய பாடத்தை படித்த பின் கடினமான பாடத்தை படிக்க செல்லுங்கள். இது உங்களை தொடர்ந்து படிக்க உறுசாகம் கொடுக்கும். முதலிலே கடினமான பாடத்தை படிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து படிக்க மனம் ஒத்துழைக்காது. அதனால் படிப்பத்தில் இன்டரன்ஸ் இல்லாமல் போய்விடும்.

இப்போது கொரோனா அச்சம் சூழ்ந்திரும் வேளை இந்த நேரத்தில் அரசாங்கம் தேர்வு தேதி அறிவித்து விட்டதால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் படிபடி என அவர்களுக்கு மன அழுத்ததை கொடுக்கலாம். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு மன அழுத்தம் இல்லா சூழ்நிலையை பெற்றோர்தான் அமைத்து தரவேண்டும். அப்படி பயம், பதற்றம் அவர்களுக்கு இருந்தால் மூச்சு பயிற்சி எடுக்கலாம். மேலும் ஆசிரியர்களிடமும் முதியோர்களிடமும் பேசி அவர்களின் பயத்தைபோக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் அவர்களுக்கு செய்து கொடுத்தாலே போதும் தைரியமாக தேர்வு எழுத செல்வார்கள்" என்றார்.கட்டுரையாளர்: குட்டிக்கண்ணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation