வைரஸ் கட்டுப்பாட்டுபகுதியில் 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சிறப்பு மையங்கள் – பள்ளிக்கல்வித்துறை

பதிவு செய்த நாள் : 17 மே 2020 13:49

சென்னை

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளை சேர்ந்த, 10ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள  மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை செயலர் அனுப்பியுள்ள  உத்தரவில், 

வட்டாரத்துக்கு 2 என்ற விகிதத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்காக மாநிலம் முழுவதும் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து சிறப்புத் தேர்வு மையத்துக்கு சென்று வர மாணாக்கர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரவும் சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.