கரோனாவை ஒழிக்க முடியாது; கட்டுப்படுத்தப்பட்ட நோயாக தொடரும் உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 15 மே 2020 19:48

ஜெனிவா

இன்றுள்ள சூழ்நிலையில் கருணா வைரசை 100% ஒழிக்க முடியாது எச்ஐவி போல கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நோயாக தொடர்ந்து உலகில் இருந்து வரும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்..

கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட சீனா சீனாவில் புதிய புதிய நகரங்களில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்கி வருகிறது வூகான் நகரிலும் மீண்டும் புதிதாக கரோனா தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் பூங்கா நகரில் ஒட்டுமொத்த 1.1 கோடி மக்களுக்கும் மீண்டும் ரத்த சோதனை நடத்த சீன நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

லெபனான் நாட்டில் கடந்த புதன்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று காணப்படாத பகுதிகளில் மீண்டும் கரோனா தொற்று பரவி வருவதால் ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரணங்களின் அடிப்படையில் உலகில் இருந்து கரோனா வைரஸை முழுக்க ஒழிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி டாக்டர் மைக்கேல் ரயான் தெரிவித்தார்.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் கரோனா வைரஸ் மீண்டும் மக்கள் மத்தியில் பரவாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு நாட்டில் உள்ள மக்கள் எல்லோரும் உடலிலும் கரோனா எதிர்ப்பு ஆன்டிபாடிகள் உருவாக வேண்டும் அதற்கு நீண்ட நாள் ஆகும் என ரயான் கூறினார். இதற்கு முன்னால் கொள்ளை நோயாக எச்ஐவி வைரஸ் பரவியது எச்ஐவி வைரஸ் இன்னும் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்படவில்லை ஆனாலும் அந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட நோயாக இன்னும் உலகில் உள்ளது அதுபோல கரோனா வைரஸ் உலகில் கட்டுப்படுத்தப்பட்ட நோயாக தொடரும்.

கட்டுப்பாடுகள் உலக நாடுகள் எல்லாவற்றிலும் தளர்த்தப் படுகின்றன.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னேற்பாடுகள் இல்லாமல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் வைரஸ் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று எச்சரித்தார். ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை குறைத்தது மட்டும் அல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே சுற்றுலாவை அனுமதிக்கப் போவதாகவும் செய்திகள் வருவதை சுட்டிக் காட்டிய பொழுது ரயான் இவ்வாறு எச்சரிக்கை வெளியிட்டார்.