சுவை மிகுந்த பாசிப் பருப்பு பாயாசம்

பதிவு செய்த நாள் : 25 ஏப்ரல் 2020 10:59

தேவையான பொருட்கள்:

நெய் - 50 கிராம், 

தேங்காய் பால் - 4 கப், 

வெல்லம் - 2 கப் (துருவியது), 

முந்திரி, 

காய்ந்த திராட்சை - தலா 10 கிராம்,  

ஏலக்காய் தூள் – சிறிதளவு.

செய்முறை:

 இரண்டு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, லேசான பொன்னிறம் வரும் வரை பாசிப் பருப்பை முதலில் வறுக்கவும். பிறகு போதுமான தண்ணீர்  ஊற்றி அதை வேக வைக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தைச் சூடாக்கி, பாகாக்கிக் கொள்ளவும்.

 

பின்னர் வெல்லப் பாகு, தேங்காய் பாலை வேகவைத்த பருப்பில் சேர்த்து குறைந்த தீயில் அவை திக்காக வரும்வரை கொதிக்க விடவும். மீதமுள்ள நெய்யில் முந்திரி பருப்புகளை வறுத்து, பாயாசத்தின் மேல் தூவவும். ஏலக்காய் தூள் சேர்த்து சூடாக பரிமாறவும். சுவையான பருப்பு  பாயாசம் தயார்