இந்து மத குறியீட்டுடன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மீது வழக்கு

23 ஏப்ரல் 2020, 07:31 PM

இந்தி திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிக்கும் நடிகை சோபியா ஹயாத். திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு ஆடுவார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். 

தற்போது அவர் வெளியிட்டுள்ள அரை நிர்வாண புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஓம் என்று எழுதப்பட்ட படத்தின் முன்பு நின்று கொண்டு அவர் நிர்வாண போஸ் கொடுத்து அந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கு கடும் கண்டனம் எழுந்தபோது நான் பெண் கடவுள் என் நிர்வாணத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டு இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதனிடையே இந்து கடவுள்களையும், இந்துக்களின் நம்பிக்கையையும் புண்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சோபியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.