சுவையான மினி ஜாங்கிரி

பதிவு செய்த நாள் : 22 ஏப்ரல் 2020 11:59

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 200 கிராம், 

அரிசி - 25 கிராம், 

சர்க்கரை - 1 கிலோ, 

லெமன் கலர் பவுடர் – சிறிதளவு, 

ரோஸ் எசன்ஸ் – சிறிதளவு, 

டால்டா - தேவையான அளவு, 

நெய் - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் அகலமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு தண்ணீர் ஊற்றி, எசன்ஸ், கலர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகுபதம் வந்தவுடன்  இறக்கி வைக்கவும்.

உளுத்தம் பருப்பையும் அரிசியையும் சேர்த்து ஊறவைத்து மாவு பதத்திற்கு அரைக்கவும். வாணலியில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஜாங்கிரி பிழிவதை கொண்டு கையால் அழுத்தி எண்ணெய்யில் சிறியதாக சுற்றவும்.  நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சர்க்கரைப்பாகில் போடவும். சுவையான இனிப்பான மினி ஜங்கிரி தயார்.