சத்தான வறுகடலை பர்பி

பதிவு செய்த நாள் : 18 ஏப்ரல் 2020 14:13

தேவையான பொருட்கள்:

வறுகடலை மாவு - 1 தம்ளர், 

நெய் -1/2 தம்ளர், 

சர்க்கரை – 1/4தம்ளர், 

வேர்க்கடலை - 1 கைப்பிடி, 

முந்திரி - 1 கைப்பிடி,

 தேங்காய்ப்பூ – 1/2 தம்ளர், 

பால் -. 1/4தம்ளர்.

செய்முறை:

வாணலியில் நெய் ஊற்றி தேங்காய்ப்பூ, கடலை மாவை லேசாக வறுக்கவும். பிறகு சர்க்கரை சேர்க்கவும் பால் தெளிக்கவும். பின்னர் முந்திரி, வேர்க்கடலை இரண்டையும் லேசாக வறுத்து பொடித்து போட்டு சேர்ந்து விடாமல் சிறுந்தியில் கலந்து தட்டில் தட்டி கட் பண்ணவும்.