தித்திப்பான மஞ்சள் பூசணி அல்வா

பதிவு செய்த நாள் : 17 ஏப்ரல் 2020 12:52

தேவையான பொருட்கள்:

துருவிய மஞ்சள் பூசணி - 1 கப், 

நெய் - 1 கப், 

வெல்லம் - 1 கப், 

பாதாம், 

முந்திரி பொடித்தது - 1கப், 

ஏலப்பொடி - 1 கரண்டி, 

வெள்ளரி விதை - 1 கப்.

செய்முறை :

அடி கனமான வாணலியில் துருவிய மஞ்சள் பூசணியை நெய்யில் வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு வெல்லம் சேர்த்து கைவிடாமல் கிளறி பாதாம் முந்திரி, வெள்ளரி விதை தூவி ஏலப்பொடி சேர்த்து சுருண்டு வரும்போது இறக்கவும்.