சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆலோசனை கூட்டம்

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 14:45

சென்னை

பெருநகர் சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கரோனா வைரஸ் குறித்த மக்களின் கேள்விகளுக்கு டெலி கவுன்சிலிங் வழங்கினார். 

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சாலைகள் முழுவதும் நவீன இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் முறையை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

கொரொனா தொற்றை தடுக்க, மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது மிகவும் அவசியம்.

பேரிடர் காலங்களில் மக்கள் அரசுடன் கை கோர்க்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் அன்புடன் கேட்டு கொண்டார்...

ஆலோசனை கூட்டத்தில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.