இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்தது

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 11:15

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46,837 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 891 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  50 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 151 ஆக உயர்ந்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.