இந்திய பங்குச்சந்தை இ்ன்று சரிவுடன் நிறைவு

பதிவு செய்த நாள் : 01 ஏப்ரல் 2020 20:18

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,203 புள்ளிகள், நிப்டி 343 புள்ளிகள் உயர்வுடன் நிலைபெற்றது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதே போல உலக வர்த்தகமும் ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறது.

இன்று மாலை வர்த்தகம் முடியும் பொழுது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1203.18 புள்ளிகள் சரிந்து  28,265.31 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதைபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 343.95 புள்ளிகள் சரிந்து  8,253.80 புள்ளிகள் நிலைபெற்றது.

டெக் மஹிந்திரா 9 சதவீதமும், டி.சி.எஸ் 6 சதவீதத்திற்கு மேலும் மற்றும் இன்போசிஸ் 5.65 சதவீதம் என நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

.