க்யூபாவின் `ஜீபூம்பா’ மருந்து!

பதிவு செய்த நாள் : 31 மார்ச் 2020

 உலகமே கொரானா கிருமியால்  திணறிக் கொண்டிருக்கிறது. உலக மருத்துவன் விஞ்ஞானிகள் இந்த கிருமி அரக்கனை ஒழிக்க மருந்தை எல்லா இடங்களிலும்   தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

 அதே சமயம் தன் தேசத்திலிருந்து உருவான இந்த கிருமியை எப்படி இத்தனை விரைவில் சீனா எதிர்கொண்டு இப்போது சகஜ வாழ்க்கைக்கு  திரும்பியிருக்கிறது?

 இந்த நோய் ஆபத்தை  எதிர்கொள்ள உடனடியாக மருந்தை தேடியது சீனா. சீனாவின் சுகாதார கமிஷன் ஒரு மருந்தை தேர்ந்தெடுத்தது. அது சாங்ஹீபர் என்கிற சீன--- -------க்யூப கூட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் கண்டுபிடித்த  மருந்து.  இந்த க்யூப நிறுவனக் கண்டுபிடிப்புகளை உயிரியல்தொழில்நுட்பத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக சீனா பார்க்கிறது. இதற்கு முன் இந்த நிறுவனம் தயாரித்த கிருமிநாசினிகள் தான் எய்ட்ஸ், ஹிபாடிட்டிஸ் பி போன்ற கடும் நோய்களை அங்கே விரட்டியடித்திருக்கிறது.  இப்போது அவர்கள் கொரானா கிருமிக்கு எதிராக  கொண்டு வந்த  இந்த கிருமிநாசினியை அவர்கள் அதிசய மருந்து ( wonder drug) என்கிறார்கள்.

 இந்த மருந்தின் பெயர் INT ERFERON ALFA 2B . க்யூப மருந்து இந்த கொரானா கிருமிகள் மீது நடத்திய மருத்துவ தாக்குதல்களை கண்டு சீனா வியந்து போனது. இப்போது அயர்லாந்து க்யூபாவின் உதவியை நாடியிருக்கிறது. ஏற்கெனவே க்யூப மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருந்துகளோடு ஒரு பெரிய குழு  கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு சென்றிருக்கிறார்கள்.

  இந்த இண்டர்பிரான் மருந்து விஞ்ஞான ரீதியாக கொரானாவிற்கு எதிரானது என்பது உலக சுகாதார நிறுவனத்தால்  இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் இந்த மருந்து பலன் தந்ததை சீனா உறுதி செய்திருக்கிறது.  ஆனால் இதன் விளைவுகளுக்கான உதாரணம் க்யூபாவில் இப்போது இருக்கிறது

682 பயணிகளோடு எம்எஸ் பிரெய்மர் என்கிற கப்பல் கரீபா கடல் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த பயணிகளை கொரானா தாக்கியது. எந்த நாட்டிற்குள் அடைக்கலம் புகலாம் என்று கப்பல் குழு தவித்தது. இந்த கொரானாவை ` சீன கிருமி’ என்றழைத்த அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் கப்பலுக்கு  அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.

 ஆனால் ஏழை நாடான க்யூபா அவர்களை ஏற்றுக்கொண்டது. சதா சர்வகாலமும் எந்த வித நோய்  ஆபத்தையும் எதிர்க்கொள்ளும் நிலையில் உள்ள் நாடு க்யூபா.  2016 ஹரிகேன் மாத்யூ தாக்கியபோது, தன் மக்களில் ஒருவர் கூட இறக்காமல் பார்த்துக் கொண்டது.

 க்யூபா மீது ஏராளமான பொருளாதார தடைகள் உள்ளது. மிகவும் ஏழை நாடுதான். ஆனால் அங்கிருக்கும் மருத்துவ வசதிகளைக் கண்டு உலக நாடுகளே வியக்கிறது. இதற்கு முன் அமெரிக்காவை பல நோய்கள் தாக்கியபோது கூட க்யூபா நேசக்கரம் நீட்டியது. ஆனால் `அமெரிக்க மக்கள் இறந்தாலும் பரவாயில்லை. க்யூபா உதவி தேவையில்லை’ என்று மறுத்துவிட்டார் அப்போதையை அமெரிக்க அதிபர் புஷ்.

 எந்த நோய் தாக்கினாலும் க்யூபா தன் மக்களை அந்த நோய்க்கு பலி கொடுத்ததில்லை என்பதுதான் மருத்துவ உலகம் வியக்கும் உண்மை.

 க்யூபாவிற்கு ஃபிடல் காஸ்ட்ரோ காலத்தில் மருத்துவ உதவிகள் பல நாடுகளால்  மறுக்கப்பட்டது. அப்போது ஒரு வெறி கொண்டு தன் நாட்டில் மருத்தவ விஞ்ஞானன், ஆராய்ச்சி நிறுவனம்,  மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள்,  மருத்துவ பல்கலைகழகங்கள், மருத்துவமனைகளை உருவாக்கினார் காஸ்ட்ரோ. உலகத்தில் எந்த மூலையில் இருக்கும் மாணவராக இருந்தாலும் சரி, அவருக்கு தகுதி இருந்தால், அவருக்கு க்யூபாவில்   இலவச தங்கும் வசதி, உணவோடு மருத்துவ படிப்பில் சேர அனுமதியும் உண்டு.

 அமெரிக்காவிற்கு பயந்து க்யூபாவை அணுகாமல் இருந்த பல நாடுகள் கூட இப்போது க்யூபாவின் உதவியை நாடிக்கொண்டிருக்கிறது. 15 நாடுகள் INT ERFERON ALFA 2B மருந்தைக் கோரி க்யூபாவிடம் விண்ணப்பம் அனுப்பியுள்ளன.

 சீனா இப்போது க்யூபாவிற்குத்தான் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறது.கட்டுரையாளர்: சுதாங்கன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
D.arumugam 04-04-2020 06:55 AM
Yes I can understand this my countries l

Reply Cancel


Your comment will be posted after the moderation