அடுத்த இரு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டும் என டிரம்ப் அச்சம்...

பதிவு செய்த நாள் : 30 மார்ச் 2020 12:48

அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய்க்கு அடுத்த இருவாரங்களில் பலி எண்ணிக்கை உச்சகட்டத்தை எட்டும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விலகல் உத்தரவை ஏப்ரல் 30 வரை நீடிப்பதாகவும் அப்போது டிரம்ப் தெரிவித்தார். இறப்பு விகிதம் அடுத்த இருவாரங்களில் உச்சநிலைக்குச் செல்லும் என்று பேசிய அவர், ஜூன் 1ம் தேதிக்கு மேல் விடிவு பிறக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.