புது வித சுவை தரும் தஞ்சாவூர் அன்னரசம் சமையல்

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 15:50

தேவையான பொருட்கள்:

 ரவை – 1/2 கப்,

 வெல்லம்- 1/2 கப்,

துருவிய தேங்காய்- 1/4 கப்,

 நெய்- 1 ஸ்பூன்,

 ஏலக்காய்த்தூள்-1/4 ஸ்பூன்

 மைதா- 1 கப்,

எண்ணெய் - தேவையான அளவு,

 உப்பு - 1 சிட்டிகை.


செய்முறை :

மைதாமாவுடன் சிட்டிகை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் ரவையை பச்சை வாசனை போக வறுக்கவும். ஒரு தேக்கரண்டி நெய்யில் தேங்காயை வதக்கவும். அதன்மேல் வெல்லம், ஏலப்பொடி, வறுத்த ரவை சேர்த்து நன்கு கிளறவும்.

இப்போது பிசைந்த மைதாமாவை அப்பளமாக இட்டு, அதனுள் கிளறி வைத்துள்ள ரவைக் கலவையை வைத்து மூடி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

நவராத்திரி சமயத்தில் தஞ்சாவூர்காரர்கள் செய்யும் இனிப்பு இது.