இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 09:54

மும்பை.

  இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 6700 புள்ளிகள் வரை உயர்ந்தது. நிப்டி 173 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் தொடர்கிறது.

இந்நிலையில் இந்திய பங்கு சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கின.

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 668.07 புள்ளிகள் அதிகரித்து 29,203.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இதைபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டியும் 169.25 புள்ளிகள் அதிகரித்து 8,487.70 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது.

இண்டஸ் இண்ட் பங்குகள் 12 சதவீதம் வரை, ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் வங்கி, டைட்டன், டாடா ஸ்டீல் மற்றும் பஜாஜ் நிதி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தது.

வங்கிகள் மற்றும் ஐ.டி நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.