மத்திய அமைச்சரவை கூட்டம்: ஒரு மீட்டர் இடைவெளியில் அமைச்சர்களுக்கு நாற்காலிகள்

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 18:00

புதுடெல்லி

மத்திய அமைச்சரவையின் வாராந்திர கூட்டம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடப்பது பழக்கம். அம்முறைப்படி மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்றது.

கோவிட்-19 வைரஸ்  தாக்குதலில் இருந்து தப்பிக்க மனிதர்கள் ஒருவரைவிட்டு ஒருவர்  ஒருமீட்டர் தூரம் விலகி இருப்பது ஒன்றே வழி என பிரதமர் மோடி நேற்று இரவு நாட்டுமக்களுக்கு உரையாற்றும் பொழுது கூறினார். அதை அமல்படுத்தும் வகையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களின் இருக்கைகள் 1 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன. 

இந்த காட்சியை உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.  

இந்திய மக்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகியிருப்பது இன்றைய தேவையாகும். அதை தாங்கள் உறுதிப்படுத்துவதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் கூட அதே முறையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இவ்வாறு தன்னுடைய டுவிட்டர் செய்தியில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.