இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 12:49

புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு  பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 40 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.