பெரும் சரிவில் இருந்து இந்திய பங்குச்சந்தை இ்ன்று ஏற்றம்

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020 18:14

மும்பை,

   இந்திய பங்குச்சந்தை இன்றும் உயர்வுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 692 புள்ளிகளும்  நிப்டி 190 புள்ளிகள் உயர்வுடன் நிலைபெற்றது.

கரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்காகப் பொருளாதார நிவாரணத் தொகுப்பை அறிவிப்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் குழு இன்று அமைக்கப்பட்டது. இதில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த நிதியாண்டிற்கான, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 2020 ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகளுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம் கண்டது.

மாலை வர்த்தகம் முடியும் பொழுது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 692.72 புள்ளிகள் உயர்ந்து 26,674.03 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதைபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 190.80 புள்ளிகள் உயர்ந்து 7801.05 புள்ளிகள் நிலைபெற்றது.

இன்போசிஸ், அதானி போர்ட்ஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் நிதி மற்றும் எச்.யூ.எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்தது.