வேலை இன்றி வாடும்கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணம்வழங்க பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020 14:15

புதுடெல்லி

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் முழு அடைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலை போக்குவரத்தும்m ரயில் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மற்ற தொழில்களைப் போல கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்களான ஆண்களும் பெண்களும்தான். இவர்கள் வேலை இல்லாத நேரத்தில் தங்கள் வாழ்க்கைச் செலவுகளை ஈடு செய்ய மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்ய மாநிலங்களிலுள்ள கட்டுமான தொழிலுக்கான போர்டுகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான வாரியங்கள் உதவி வழங்க முன்வரவேண்டும். வேலை இல்லாத காலத்தில் அவர்களுக்கு நிவாரண உதவியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இதற்காக உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன்.

இதைத்தவிர அவர்களுக்கு ஊதியம் மற்றும் மருத்துவ உதவிக்கான நிவாரணத் திட்டங்களையும் மத்திய அரசு வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

கட்டுமானத் தொழிலில் கிட்டத்தட்ட 4.5 கோடி பேர் ஈடுபட்டு உள்ளனர். எனவே அவர்களின் நலன் காக்க உதவுவது அரசுகளின் கடமையாகும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.