சுவையான துவரம்பருப்பு போளி சமையல்

பதிவு செய்த நாள் : 23 மார்ச் 2020 16:20

தேவையான பொருட்கள் :

மைதா - 200 கிராம், 

அரிசி மாவு  - 1/2 கப், 

நல்லெண்ணெய் - 100 கிராம், 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,

 உப்பு  - தேவைக்கு.

பூரணம் செய்ய :

 மலர வெந்த துவரம் பருப்பு - 2 கப், சர்க்கரைத் தூள்- 1 1/2 கப், ஏலக்காய்த்தூள், நெய் – சிறிதளவு, பூராசர்க்கரை (அ) பொடித்த சாதாரண சர்க்கரை – சிறிதளவு.

செய்முறை :

மைதா, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு பரோட்டா மாவு மாதிரி பிசைந்து 100 கிராம் நல்லெண்ணெய் மேலே விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். இதுதான் மேல்மாவு. வெந்த துவரம்பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைக்கவும். மசிந்தவுடன் சர்க்கரைத்தூள் சேர்க்க வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும்  துவரம்பருப்பு, சர்க்கரை கலவை சேர்த்துக் கிளறி , இறுகி வரும்போது இறக்கி ஏலக்காய்த்தூள் சேர்த்தால், பூரணம் தயார்.

மேல் மாவு சிறிது எடுத்து ஆரஞ்சுப் பழ அளவு துவரம்பருப்பு பூரணம் உருட்டி அதில் வைத்து மூடி அரிசி மாவில் ஒற்றி எடுத்து குழவியால் போளியாக இட்டு சூடான தவாவில் போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும். சுவையான போளி தயார்.