பாசமலர்கள் பூக்கட்டும்!

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020


பல குடும்பங்களில் பெற்றோர் காலத்திற்குப் பின் சகோதரர்களுக்குள் பேச்சுவார்த்தை கூட இருப்பதில்லை. ஆனால் மனதிற்குள் பழைய நினைவுகள் வந்து போகும். மீண்டும் சேர்ந்திருக்க மாட்டோமா என்ற எண்ணம் ஊசலாடிக் கொண்டிருக்கும். சகோதர ஒற்றுமை குடும்பத்தில் நிலைக்க விரும்பினால் ராமர் பட்டாபிேஷக படத்தை பூஜையறையில் வையுங்கள். அதில் ராமருடன் பிறந்த பரதர், லட்சுமணர், சத்ருக்கனர் இருப்பது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் ராமர் அவதரித்த நட்சத்திரமான புனர்பூசத்தன்று விரதமிருந்து மாலையில் விளக்கேற்றி 108 முறை ‘ஸ்ரீராமஜெயம்’ என்னும் நாமத்தை எழுதுங்கள் (அ) ஜபியுங்கள். அதன்பின் ராமர்(அ) பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமிக்கு துளசிமாலை சாத்தி மூன்று முறை சன்னதியை வலம் வந்து வழிபடுங்கள். ராம சகோதர்களின் ஆசியால் குடும்பத்தில் பாசமலர்கள் பூத்துக் குலுங்கும்.