சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 23–3–2020

பதிவு செய்த நாள் : 23 மார்ச் 2020


இந்திய பங்குச் சந்தை நிலவரம்

பிப்­ர­வரி மாதம் 19ஆம் தேதி (சுமார் ஒரு மாதம் முன்பு)  மும்பை பங்­குச்­சந்தை 41 ஆயி­ரத்து 373 புள்­ளி­க­ளில் இருந்­தது.  இது மார்ச் மாதம் இரு­ப­தாம் தேதி (வெள்­ளி­யன்று)  29 ஆயி­ரத்து 915 புள்­ளி­க­ளில் முடி­வ­டைந்­தது. கிட்­டத்­தட்ட 17408 புள்­ளி­கள் சரிவு. இந்த சரிவை நம்­பவே முடி­ய­வில்லை, ஆனால் நம்­பித்­தான் ஆக வேண்­டும். பங்­குச்­சந்­தையை பல வரு­டங்­க­ளுக்கு முன்பு நிலைக்கு எடுத்­துச் சென்­றி­ருக்­கி­றது இந்த வைரஸ்.

பங்­குச் சந்தை போர் போன்ற கார­ணங்­க­ளால் சரி­யும். ஆனால் வைரஸ் என்ற இந்த பயோ வார், சந்­தை­களை  இந்த அள­விற்கு தாக்­கும் என்று யாரும் எதிர்­பார்க்­க­வில்லை.

அதி பாதா­ளத்­திற்கு சென்ற பல பங்­கு­கள்

பல பங்­கு­கள் எல்­லாம் நினைக்க முடி­யாத அள­விற்கு குறைந்த விலைக்கு கிடைத்­தன / கிடைக்­கின்­றன. ஆனால் வாங்­கு­வார் யாரும் இல்லை, இது­தான் நிலைமை. பங்­குச் சந்­தை­யில் விலை­கள் கூடும்­போது நாம் ஓடி ஓடி வாங்­கு­வோம், விலை­கள் குறை­யும் போது நமக்கு வாங்­கு­வ­தற்கு மனம் வராது.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச்­சந்தை 1627 புள்­ளி­கள்  கூடி 29 ஆயி­ரத்து 915 புள்­ளி­கள் என்ற அள­வில் முடி­வ­டைந்­தது. தேசிய பங்­குச்­சந்தை 482 புள்­ளி­கள் கூடி 8745 புள்­ளி­கள் என்ற அள­வில் முடி­வ­டைந்­தது

வெள்­ளி­யன்று மட்­டும் 6 சத­வீ­தம் சந்­தை­கள் கூடி­யி­ருப்­பது ஒரு ஆறு­தா­லன விஷ­யம்.

வெள்­ளி­யன்று எந்த பங்­கு­கள்  மிக­வும் அதி­க­மாக கூடின?

பாரதி இன்­பிரா 22.61 சத­வீ­த­மும், ஓஎன்­ஜிசி பங்­கு­கள் 18.68 சத­வீ­த­மும், ஹிந்­துஸ்­தான் யூனி­லீ­வர் பங்­கு­கள் 11.75 சத­வீ­த­மும், ரிலை­யன்ஸ் இண்ட்ஸ்­டீ­ரிஸ் பங்­கு­கள் 11.2 சத­வீ­த­மும், ஹிண்­டால்கோ 12.88 சத­வீ­த­மும்,  டிசி­எஸ் கம்­பெ­னி­யின் பங்­கு­கள் 10 சத­வீ­த­மும் கூடின.

ஏன் ரிலை­யன்ஸ் இண்­டஸ்­டீ­ரீஸ் பங்கு விலை குறை­கி­றது?

ரிலை­யன்ஸ் இண்­டஸ்­டீ­ரி­ஸின் முக்­கிய வேலை வெளி­நா­டு­க­ளில் இருந்து கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி செய்து அதை ரிபைன் செய்து அவர்­க­ளுக்கு திருப்பி அனுப்­பு­வது. இதற்கு ரிபைன் மார்­ஜின் அவர்­க­ளுக்கு கிடைக்­கும்.

கச்சா எண்­ணெய் விலை தற்­போது எக்­கு­தப்­பாக குறைந்து வரு­வ­தால் (சுமார் 26 டாலர் வரை வந்து விட்­டது ஒரு பேரல் கச்சா எண்­ணெய்), இது ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னப் பங்­கு­களை கடந்த பல ஆண்­டு­க­ளில் இல்­லாத அளவு கீழே இறக்கி சென்­றி­ருக்­கி­றது.

இப்­போது இந்த பங்கை  வாங்­க­லாமா? இன்­னும் சிறிது குறை­யும் வாய்ப்­பு­கள் இருக்­கின்து. காத்­தி­ருக்­க­லாம்.

எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் பங்­கு­கள்

நாம் ஒன்று நினைக்க… கொரோனா ஒன்று நினைத்­தி­ருக்­கி­றது. வெளி­யீடு வரு­வ­தற்கு முன்பு ஒரு பங்­கிற்கு 200 முதல் 300 ரூபாய் வரை ப்ரீமி­யம் இருந்­தது. லிஸ்ட ஆன தேதி­யில் பார்த்­தால் வெளி­யீட்டு விலையை விட மிக­வும் குறை­வாக தான் லிஸ்ட் ஆகி­யது. இந்த வெளி­யீட்­டில் லாபம் பார்க்­க­லாம் என்று பத்து கோடி, இரு­பது கோடி ரூபாய் என்று கடன் வாங்­கிப் போட்­ட­வர்­கள் பாடு திண்­டாட்­டம் தான். முத­லுக்கே மோசம் என்று இருக்­கி­றார்­கள். நாம் குறைந்­த­பட்­சம் தான் போடுங்­கள் (ரூபாய் 15000 வரை) என்று அறி­வு­ருத்­தி­யி­ருந்­தோம். அப்­படி போட்டு, அலாட்­மெண்ட் கிடைத்­தி­ருந்­தால் இந்த பங்கை நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் வைத்­தி­ருக்­க­லாம். கார­ணம் இந்­தி­யாவே டிஜிட்­டல் மய­மாகி வரு­கி­றது. கொரோனா பயத்­தில் பணங்­களை பரி­மாற்­றிக் கொள்ள யாரும் விரும்­ப­வில்லை. கிரி­டிட் கார்டு செக்­டா­ரில் லீடர் இவர்­கள் தாம். ஒரு வரு­டத்­தில் நல்ல லாபங்­களை தரும் இந்த பங்கு.

கொரோனா பதிப்பு எந்த செக்­டார்­க­ளுக்கு?

விமான கம்­பெ­னி­கள், ரியல் எஸ்­டேட், சினிமா, எண்­டெர்­டெய்ன்­மெண்ட், டிரா­வல் கம்­பெ­னி­கள், ஓட்­டல்­கள் (வியா­பா­ரங்­கள் குறைந்து வரு­வ­தால்), வங்­கிப் பங்­கு­கள் (ஏன் என்­றால் வரும் காலாண்­டு­க­ளில் வாராக் கடன்­கள் அதி­க­ரிக்க வாய்ப்­பு­கள் நிறைய), நிதி நிரு­வ­னங்­கள் (லாபாங்­கள், வாராக் கடன்­கள் அதி­க­ரிக்­கும்),

மருந்து கம்­பெ­னி­கள், எப்.எம்.சி.ஜி., கம்­பெ­னி­கள்,  சாப்ட்­வேர் கம்­பெ­னி­கள் ஆகி­யவை இதி­லி­ருந்து சிறிது தப்­பிக்­க­லாம்.

என்ன நடக்­க­லாம்?

ரிசர்வ் வங்கி வரும் வாரங்­க­ளில் வட்டி விகி­தங்­களை குறைக்­க­லாம். பல செக்­டார்­க­ளுக்கு பல சலு­கை­களை அளிக்­க­லாம். தற்­போது 90 நாட்­கள் கடன் தவ­ணை­கள், வட்­டி­கள் செலுத்­தப்­ப­ட­வில்­லை­யென்­றால் அது வாராக்­க­டன் என்று கணக்­கி­டப்­ப­டு­கி­றது. இதில் மாற்­றம் வர­லாம். இது 6 மாத­மாக மாற்­றப்­பட வாய்ப்­பு­கள் இருக்­கி­றது.

பல வங்­கி­கள் கொரோனா பாதித்த செக்­டார்­க­ளுக்கு புதிய கடன்­கள் கொடுக்க திட்­டங்­கள் வகுத்­துள்­ளன. ஸ்டேட் பாங்கி ரூபாய் 200 கோடி வரை அதி­க­பட்­ச­மாக கடன் வழங்க இது போன்ற ஒரு திட்­டத்தை தற்­போது அமல்­ப­டுத்­தி­யுள்­ளது.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

சந்­தை­க­ளின் வரும் வாரங்­கள் கொரோனா எப்­படி இந்­தி­யா­வில் கட்­டுப்­ப­டுத்­தப் போகி­றது என்­ப­தில் தான் இருக்­கி­றது. தற்­போது இந்­தியா இருக்­கும் ஸ்டேஜ் (இரண்­டா­வது ஸ்டேஜ்) மிக­வும் ஒரு முக்­கி­ய­மான பகுதி. மூன்­றாம், நான்­காம் ஸ்டேஜ்­க­ளில் இதன் விளை­வு­கள் வர்க்க மூலம் (SQUARE ROOT) போல கூடிக் கொண்டெ போகும்.  சரி­யான முறை­யில் கட்­டுப்­ப­டுத்­த­வில்லை என்­றால் அது இத்­தாலி, ஸ்பெயின், ஐரோப்பா, தென் கொரியா போன்ற நாடு­க­ளில் மூன்றா, நான்­காம் ஸ்டேஜ்­க­ளில் ஆன­தைப் போல ஆகி­வி­டும். ஆகவே அர­சாங்­கம் சொல்­லு­வதை கேட்டு வீட்­டிலே இருப்­பது உத்­த­மம்.

நாம் பிப்­ர­வ­ரி­யில் இருந்து சொல்­லிக் கொண்டு வந்­தி­ருக்­கி­றோம் சந்­தை­யில் இருந்து விற்று வெளி­யே­றுங்­கள் என்று. அப்­படி விற்­றி­ருந்­தால் தங்­கள் கைவ­சம் இருக்­கும் பணத்தை தற்­போது சிறிது சிறி­தாக முத­லீடு செய்­யுங்­கள்.

சந்தை இன்­னும் குறை­வ­தற்­கும் வாய்ப்­புக்­கள் இருக்­கி­றது. அது மார்ச் காலாண்டு முடி­வு­களை வைத்து இருக்­கும்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com