ஸ்டார்ட் அப் உல­கம்: கடன் வழங்­கும் ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள்

பதிவு செய்த நாள் : 23 மார்ச் 2020

ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­கள் வந்­த­தி­லி­ருந்து பல புதிய வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­கள் (என்.பி.எப்.சி.,) தொழில் நுட­பத்தை அடிப்­ப­டை­யாக வைத்து ஆரம்­பிக்­கப்­பட்­டவை கடன்­கள் வழங்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. அதா­வது அதிக கிளை­கள் இல்­லா­மல் ஆன்­லைன் மூல­மாக கடன் வழங்­கும் வச­தி­களை கொண்­டவை. கொரோனா போன்ற சம­யங்­க­ளில் இவை  சிறிய, குறு மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கும், மாத சம்­ப­ள­தா­ரர்­க­ளுக்­கும், கம்­பெ­னி­க­ளுக்­கும் இவர்­க­ளின் கட­னு­தவி உத­வி­க­ர­மாக இருக்­கும். ஆனால் வங்­கி­களை விட வட்­டி­கள் கூடு­தல் என்­பதை நினை­வில் வைக்க வேண்­டும்.

இந்­தி­யா­வில் இது போன்று இருக்­கும் சில கம்­பெ­னி­களை பார்ப்­போம்.

லோன்ஸ் பார் எஸ்.எம்.ஈ.,

ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­யான லோன்ஸ் பார் எஸ்.எம்.ஈ., (loans4sme).  இந்த ஸ்டார்ட் அப் உங்­க­ளுக்­கும், கடன் கொடுக்­கும் நிறு­வ­னத்­திற்­கும் (பெரும்­பா­லும் வங்­கி­கள்) பால­மாக இருக்­கும். உங்­கள் கடன் தேவை­களை பூர்த்தி செய்ய உத­வும்.

கடன் கொடுப்­ப­வ­ரை­யும், கடன் வாங்­கு­ப­வ­ரை­யும் இணைக்­கும் பால­மாக இருப்­பது தான் லோன்ஸ் 4 எஸ்.எம்.ஈ., கம்­பெ­னி­யின் முக்­கி­ய­மான வேலை.

https://loans4sme.com  என்ற இணை­ய­த­ளத்­தில் சென்று உங்­கள் கம்­பெ­னி­யைப் பற்­றிய முழு விப­ரத்­தை­யும் பதிய வேண்­டும். உங்­கள் கம்­பெ­னியை முழு­மை­யாக ஆராய்ந்து உங்­கள் கடன் தேவை இருக்­கி­றது என்று அவர்­கள் முடிவு செய்­தால்,அதன் மூலம் வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்­கள், வெஞ்­சர் கேபி­டல் கம்­பெ­னி­கள், பாக்­ட­ரிங் கம்­பெ­னி­கள் ஆகி­ய­வை­க­ளுக்கு தகுந்­த­படி ரெக­மெண்ட் செய்­வார்­கள். கடன் கிடைக்க ஏற்­பாடு செய்­வார்­கள்.

உங்­க­ளுக்­கான கடன் கிடைக்க வழி வகை செய்து விட்­டால் இந்த நிறு­வ­னம் 1 முதல் 2 சத­வீ­தம் சர்­வீஸ் சார்ஜ் உங்­க­ளி­ட­மி­ருந்து வாங்­கிக் கொள்­ளும். www.loans4sme.com

இன் கிராட்

இன் கிராட் (incred) என்ற கம்­பெனி சிறிய கடன் களை  கொடுப்­ப­தில் பெரும்­பங்கு வகிக்­கி­றது இந்த கம்­பெனி கன்­சூ­மர் லோன்,  வீடு கட்­டும் லோன், படிப்­ப­தற்­கான லோன் எந்த லோன்­க­ளைத் தவிர மருத்­துவ சம்­பந்­த­மான கடன்­கள் அளிப்­ப­தி­லும்  முக்­கிய பங்கு வகிக்­கி­றது. www.incred.com

கியூப்ரா

கியூப்ரா (Qbera)  என்ற சேர்ந்த ஸ்டார்ட் அப் வேலை­யில் இருப்­ப­வர்­க­ளுக்­கும், சுய தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு கடன் கள் வழங்­கு­கி­றது. www.qbera.com

ஆரோக்­கியா பைனான்ஸ்

ஆரோக்­கியா பைனான்ஸ் உங்­க­ளுக்கு மருத்து உதவி கடன் வழங்க முன் வந்­தால் அதற்­கான பணத்தை நேர­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கே செலுத்தி விடு­கி­றது. www.arogyafinance.com