ஏற்­று­மதி உல­கம் : கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட கம்­பெ­னி­க­ளுக்கு எஸ்.பி.ஐ.யின் தற்­கா­லிக கடன் வசதி

பதிவு செய்த நாள் : 23 மார்ச் 2020

ஸ்டேட் பாங்க் ஆப் இந்­தியா கொரோனா வைரா­ஸால் பாதிக்­கப்­பட்ட கம்­பெ­னி­க­ளுக்கு எழும் தற்­கா­லிக பணப்­பு­ழக்க பொருத்­த­மின்­மையை பூர்த்தி செய்­வ­தற்­காக தற்­கா­லிக கடன் வச­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. கோவிட் 19 வைர­ஸால் வர­வேண்­டிய பாக்­கி­கள் தள்­ளிப்­போ­கும் சூழ்­நிலை பல கம்­பெ­னி­க­ளுக்கு இருக்­கி­றது. இது கம்­பெ­னி­க­ளது தொடர் இயக்­கத்தை பாதிக்­கும். ஆத­லால் இந்த கடன் திட்­டத்தை ஸ்டேட் பாங்க் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. மற்ற வங்­கி­க­ளும் பின் தொட­ரும் என நம்­ப­லாம்.

இந்த திட்­டம் 2020 ஜூன்  30 வரை அம­லில் இருக்­கும்.

அனைத்து நிலை­யான கணக்­கு­க­ளும் (Standard Assets) இந்­தக் கட­னுக்கு தகு­தி­யா­னவை. இருப்­பி­னும், சிறப்பு கணக்­கு­கள் என வகைப்­ப­டுத்­தப்­பட்ட  - எஸ்­எம்ஏ 1 (Special Mention Accounts - 30-60 நாட்­க­ளுக்கு இடை­யில் தாம­த­மா­னது) மற்­றும் எஸ்­எம்ஏ 2 (Special Mention Accounts - 61-90 நாட்­க­ளுக்கு இடை­யில் தாம­த­மா­னது) இந்த கடன் வச­தி­யைப் பெற தகு­தி­யற்­றவை.

கடன்­கள் 7.25 சத­வீ­தம் (ஆண்­டுக்கு) நிலை­யான வட்டி விகி­தத்­தில் வழங்­கப்­ப­டும்.

சிறப்­புத் திட்­டத்­தின் கீழ் பெறக்­கூ­டிய அதி­க­பட்ச கடன் ரூ .200 கோடி­யாக இருக்­கும்.  அனு­ம­திக்­கப்­பட்ட தொகையை ஒரே நேரத்­தில் பெற முடி­யும்.

கடனை வழங்­கிய நாளி­லி­ருந்து ஆறு மாத கால அவ­கா­சத்­திற்­குப் பிறகு கடன்­கள் ஆறு சம­மான மாதத் தவ­ணை­க­ளில் திருப்­பிச் செலுத்­தப்­பட வேண்­டும். அதா­வது கடன் வாங்­கிய ஒரு வரு­டத்­திற்­குள் திருப்பி செலுத்­தப்­பட வேண்­டும்.

வாங்­கும் கட­னுக்கு தகுந்த பினை­யங்­கள் (ஸ்டாக்) இருக்க வேண்­டும் என்­பது முக்­கி­ய­மான நிபந்­த­னை­யா­கும்.

இந்த சூழ்­நி­லை­யில் எல்.சி. மூலம் ஏற்­று­மதி 

இந்த சூழ்­நி­லை­யில் எல்.சி. மூலம் ஏற்­று­மதி செய்­யும் பொது மிக­வும் கவ­ன­மாக இருக்க வேண்­டும். அதா­வது ஷிப்­மெண்ட் 31ம் தேதி மார்ச்-க்­குள் முடிய வேண்­டும் என்று எல்.சி.யில் போட்­டி­ருந்­தால் அதற்­குள் பண்ண முடி­யுமா என்று பார்க்க வேண்­டும். இல்­லா­வி­டில் ஷிப்­மெண்ட் தேதியை மாற்­றிக் கேட்க வேண்­டும். இறக்­கு­ம­தி­யா­ளர் அமெண்ட்­மெண்ட் வாங்­கு­வது கடி­னம், தாம­த­மாக இருந்­தா­லும் பர­வா­யில்லை, நாங்­கள் டாகு­மெண்டை டிஸ்­கி­ரி­பன்­சி­யு­டன் ஒத்­துக்  கொள்­கி­றோம் என்­றால் நீங்­கள் ரிஸ்க் எடுத்து அனுப்­பு­கி­றீர்­கள் என்று அர்த்­தம்.

இந்த சூழ்­நி­லை­யில் கவ­ன­மாக செயல்­பட வேண்­டும்.

எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் உற்­பத்தி நாட்­டில் எலக்ட்­ரா­ணிக் பொருட்­கள் உற்­பத்­தியை உயர்த்­து­வ­தற்­காக மொத்­தம் சுமார் 48,000 கோடி ரூபாய் ஊக்­கத்­தொகை உள்­ள­டக்­கிய மூன்று திட்­டங்­களை மத்­திய அமைச்­ச­ரவை அனு­ம­தித்­துள்­ளது.

இந்த திட்­டங்­க­ளின் மூலம் 2025 ஆம் ஆண்­டில் 20 லட்­சம் மக்­க­ளுக்கு நேரடி மற்­றும் மறை­முக வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­க­வும், ரூ .10 லட்­சம் கோடி வரு­மா­னத்தை ஈட்­ட­வும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்­தி­யாவை ஒரு பெரிய உற்­பத்தி மைய­மாக மாற்ற இரண்டு நீண்­ட­கால கொள்கை முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. முத­லில் எலக்ட்­ரா­னிக்ஸ் விஷ­யத்­தில், பார்மா மற்­றும் மருத்­துவ சாத­னங்­க­ளில் இரண்­டா­வது. உற்­பத்தி இணைக்­கப்­பட்ட ஊக்­கத்­தொ­கைக்­காக வரும் ஐந்து ஆண்­டு­க­ளில் 40,995 கோடி ரூபாய் அளிக்­கப்­ப­டும்.

இந்த திட்­டத்­தின் கீழ், மின்­னணு உற்­பத்தி நிறு­வ­னங்­கள் அடுத்த 5 ஆண்­டு­க­ளில் தகு­தி­யான நிறு­வ­னங்­க­ளுக்கு அடிப்­படை ஆண்­டுக்­கும் மேல் அதி­க­ரிக்­கும் விற்­ப­னை­யில் 4 முதல் 6 சத­வீ­தம் வரை ஊக்­கத்­தொகை கிடைக்­கும்.

எலக்ட்­ரா­னிக்ஸ் 2019 இன் தேசிய கொள்கை, 2025 ஆம் ஆண்­டில் இந்­தியா 190 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் மொபைல் போன் உற்­பத்­தியை எட்ட வேண்­டும் என்று கரு­து­கி­றது, அதில் 110 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் ஏற்­று­மதி செய்­யப்­ப­டும்.  இது ஒரு மிகப்­பெ­ரிய எதிர்­பார்ப்பு ஆகும். அப்­படி எட்­டும் பட்­சத்­தில் அது இந்­தி­யாவை எலக்ட்­ரா­னிக்ஸ் துறை­யில் உல­க­ள­வில் ஒரு பெரிய இடத்­தில் நிறுத்­தும்.