ஒரு பேனாவின் பயணம் – 250– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 23 மார்ச் 2020

ஆசை யாரை விட்டது!

பெஞ்­ச­மின் தான் வாழ்ந்த நாட்­க­ளி­லெல்­லாம் தண்­ணீ­ரைக் காத­லித்து வந்­தார். நீந்­தல் கலை­யில் அவர் கற்­றுக் கொள்­ளா­தது எது­வு­மில்லை.  பல வரு­டங்­க­ளுக்­குப் பிறகு அவர் லண்­டன் மாந­க­ரில் வசித்த போதும் கூட நீந்­து­வ­திலே மகா நிபு­ணர் என்ற புகழ் எங்­கும் பரவி பல நண்­பர்­களை அவ­ருக்­குத் தேடித் தந்­தது. ஒரு சம­யம் தேம்ஸ் நதிக்­க­ரை­யில் ஜனங்­க­ளின் ஆர­வா­ரக்­க­ர­கோ­ஷங்­க­ளி­டையே, ஒரு நீந்­தல் காட்சி அமைத்­தார். அங்கே எண்­ணற்ற ஆங்­கி­லேய இளை­ஞர்­க­ளுக்­குத் தம்­மைப் போலவே நீந்­தக் கற்­றுக் கொடுத்­தார். பில­டெல்­பிய பட்­ட­ணத்­திலே அவர் ஒரு பள்­ளிக்­கூ­டம் ஸ்தாபித்­த­போது பாடத்­திட்­டங்­க­ளில் நீந்­தல் கலை­யும் ஒன்­றாக இருக்க வேண்­டும் என்று வற்­பு­றுத்­தி­னார். அது அந்த நாட்­க­ளிலே யாரும் கேட்­ட­றி­யாத புதுமை.

 தாம் ஒரு மாலு­மி­யாக வேண்­டு­மென்­பது பெஞ்­ச­மின் பிராங்க்­ளி­னின் லட்­சி­யம். ஆனால் அவ­ரால் செய்ய முடி­யா­மல் போன வெகு சில காரி­யங்­க­ளில் அது­வும் ஒன்­றா­கி­விட்­டது.

 வாழ்க்கை என்­பது வெறும் நீந்­த­லும், வேனில் ருது­வும் மிரு­து­வான சஞ்­சா­ர­மும் அல்ல.

போஸ்­டன் நக­ரிலே கார்­கா­லம் மிக­வும் கொடூ­ர­மா­னது. ஜில்­லிட்­டுப் போகும் குளிர்­ம­ய­மா­னது. தலை­ய­ணை­யி­லி­ருந்து இற­கு­கள் உதிர்ந்து விழு­வது போல, வான­வெ­ளி­யி­லி­ருந்து பனிப் பட­லங்­கள் உதிர்ந்து விழும். கடல் வெளி­யி­லி­ருந்து, ஈர­மான ஊதல் காற்று விசி­றி­ய­டிக்­கும். ஜன்­னல் கண்­ணா­டி­களை மூடு­பனி பூச்­சி­டும். வீடு­க­ளின் வெளிச்­சு­வர்­க­ளின் மீது  நீளம் நீள­மாக ஐஸ் கம்­பி­கள் தொங்­கும். கார்­கா­லம் வரும்­போது அந்த புதிய உல­கம் மிக­வும் மூர்க்­க­மா­க­வும் ஏகாந்­த­மா­க­வும்  காட்­சி­ய­ளிப்­பது போல் வெறெப்­போ­துமே அது காட்­சி­ய­ளிப்­ப­தில்லை.

 பெஞ்­ச­மின் பிராங்க்­ளினோ அதை அவ்­வ­ள­வா­கப் பொருட்­ப­டுத்­த­வில்லை. ஏனெ­னில், கார்­கா­லத்­தில் படிக்க நிறைய அவ­கா­சம் இருக்­கும். நாம் படிக்க எப்­போது கற்­றுக்­கொண்­டோம் என்­பது நமக்கே ஞாப­க­மி­ராது. ஆனால், படிப்­ப­தென்­றால் பெஞ்­ச­மி­னுக்கு மிக­வும் பிடிக்­கு­மா­த­லால் எதைக் கண்­டா­லும் படிக்­கத் தொடங்கி விடு­வ­துண்டு. பெஞ்­ச­மின் இள­மை­யா­யி­ருந்­த­போது எவ­ரி­ட­மும் அதி­கப் பக்­கங்­கள் இருக்­காது. பெஞ்­ச­மி­னின் தந்­தை­யைப் போன்றே ஏழை ஜனங்­க­ளி­டமோ பற்­பல படங்­க­ளும் இருக்­காது. அவ்­வ­ள­வும் ஆழ்ந்த கருத்­துக்­கள் புதைந்­த­வை­யா­க­வும், படிப்­ப­தற்கு உப்­புச் சப்­பற்­ற­வை­யா­க­வும் இருக்­கும். நீளம் நீள­மான கடுஞ்­சொற்­கள் மய­மா­ன­வை­யா­ க­வுமே இருக்­கும். ஆனால், அவை எப்­ப­டி­யி­ருந்­தா­லும் பெஞ்­ச­மின் அவற்­றைப்  படிப்­ப­துண்டு. ஒரு முறை இரு­மு­றை­யல்ல, திரும்­பத் திரும்ப படிப்­ப­துண்டு.

 பெஞ்­ச­மின் தன் வீட்­டின் கணப்­ப­ரு­கில் கீழே அமர்ந்து, கணப்­புத் தீயின் வெளிச்­சத்­திலோ, அல்­லது கொழுப்­பு­ம­ய­மான மெழுகு கடை­யி­லி­ருந்து வரும் கோண­லான மெழு­கு­திரி வெளிச்­சத்­திலோ படிப்­பது வழக்­கம். இந்த மெழு­கு­வர்த்­தி­கள் விற்­பனை செய்­யு­ம­ள­வுக்கு நன்­றாக அமை­யா­மல் கெட்­டுப் போன­வை­யாக இருக்­கு­மா­த­லால், அவை ‘மினுக் மினுக்’­­கென்­று­தான் தடு­மாறி எரி­யும்.

தான்  படித்த புத்­த­கங்­க­ளி­லெல்­லாம் பெஞ்­ச­மி­னுக்கு மிக­வும் பிடித்­தது. ` யாத்­தி­ரி­கர்­க­ளின் முன்­னேற்­றம் ‘ (Pilgrims Progress)  என்ற புத்­த­கம்­தான். அதில் கதை இருந்­த­து­தான் கார­ணம்.

 பெஞ்­ச­மி­னுக்கு ஏழு வய­தா­ன­போது ஒரு கவிதை எழு­தி­ய­துண்டு. அது மிக­வும் சாதா­ர­ண­மா­கத் தோன்­றி­ய­தால், பெஞ்­ச­மி­னைப் பள்­ளிக்­கூ­டத்­திற்கு அனுப்­பு­வது பற்றி பெஞ்­ச­மி­னு­டைய தந்தை சிந்­திக்­கத் தொடங்­கி­னார். பள்­ளிக்­கூ­டம் என்­றால் பணச்­செ­லவு ஆகும். பெஞ்­ச­மின் தந்­தை­யைப் போன்ற ஏழை ஜனங்­கள் தங்­க­ளு­டைய எல்லா குழந்­தை­க­ளை­யுமே படிக்க வைக்க முடி­யாது.  ஆயி­னும்  அடுத்த வரு­டம், போஸ்­ட­னி­லுள்ள இலக்­க­ணப் பள்­ளிக்கு பெஞ்­ச­மினை படிக்க அனுப்­பி­னார்.

 அந்த சம­யம் பெஞ்­ச­மின் நடுத்­தர அள­வுள்ள சிறு­வர். தடி­ம­னா­க­வும் வலு­வா­க­வும் உள்ள உரு­வம். நீண்ட தலை, சுருட்டை முடி. விசா­ல­மான பிர­கா­ச­மான நரை நிறக் கண்­கள்.

 ஒரு வரு­டம் ஆவ­தற்­குள்­ளா­கவே, பெஞ்­ச­மின் சுறு­சு­று­வென்று தன் வகுப்­பில் தலை­யாய் விளங்­கும் வழி ஏற்­பட்­டது. படிப்பு முன்­னேற்­றத்­தைப் பற்­றிய அறிக்கை அட்­டை­யில் பெஞ்­ச­மின் வெட்­கப்­ப­டும்­ப­டி­யான எது­வும் நேர­வில்லை. ஆனா­லும் போஸ்­டன் இலக்­க­ணப் பள்­ளி­யி­னர் பெஞ்­ச­மி­னுக்கு எப்­ப­டி­யா­வது லத்­தீன் பாஷை கற்­றுக் கொடுக்க முயன்­ற­னர். லத்­தீன் பாஷை­யைக் கற்­றுக் கொடுக்க  எவ்­வ­ள­வு­தான் முயற்சி செய்­தும் பெஞ்­ச­மின் அந்த பாஷை­யைப் பெரி­தாக நினைக்­க­ வில்லை.

 ` நான் ஏன் லத்­தீன் பாஷை படிக்க வேண்­டும்? அந்த மொழியை இப்­போது யாரும் பேசு­வ­தில்­லையே?’ என்­பது பெஞ்­ச­மி­னின்  குற்­றச்­சாட்டு.

  ` நீ இப்­போது அதைப் பேசக் கற்­றுக் கொள்ள முன்­வ­ரா­விட்­டால், பின்னே நீயே வருந்­து­வாய் மகனே’ என்­றார் தந்தை.

 பெஞ்­ச­மின் வருந்­தி­யி­ருக்­க­லாம். ஆனால், அதைப் பெஞ்­ச­மின் ஒப்­புக்­கொண்­ட­தே­யில்லை. பெஞ்­ச­மின் பெரி­ய­வ­ராக வளர்ந்து ஸ்பானிஷ், இத்­தாலி, பிரெஞ்சு முத­லான பாஷை­க­ளைப் பேசக் கற்­றுக் கொண்­ட­போது, மறு­ப­டி­யும் லத்­தீன் பாஷையை ஏறெ­டுத்­துப் பார்த்­தார். அப்­போது அது அவ­ருக்கு சுல­ப­மா­கத் தோன்­றி­யது. மேற்­கண்ட மொழி­கள் மிக­வும் எளி­மை­யாக இருப்­ப­தால் அவற்றை முத­லில் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­ப­தும், அவற்­றைக் கற்­றுக்­கொண்ட பிறகு லத்­தீன் மொழி சுல­ப­மாய் இருக்­கும் என்­ப­தும் பெஞ்­ச­மி­னின் எண்­ணம். பெஞ்­ச­மி­னின் வாழ்வு முடிந்­து ­வி­டு­ வ­தற்கு முன்­னால், அவர் பிரான்ஸ் தேசத்­தில் வாழ்ந்­தார். அப்­போது அவர் எந்த நேர­மும் பிரெஞ்சு மொழி பேச நேர்ந்­தது. அந்த மொழி­யில் அவர் உப­யோ­கப்­ப­டுத்­தும் இலக்­க­ணம்  அவ்­வ­ளவு நன்­றாக இல்­லை­யென்று சிலர் சொன்­னார்­கள். அவ­ருக்கு லத்­தீன் மொழி­யும் தெரிந்­தி­ருந்­தால், பேசும் பிரெஞ்சு மொழி நன்­றாக அமைந்­தி­ருக்­கும் என்­றும் அவர்­கள் சொன்­னார்­கள்.

 பெஞ்­ச­மின் இளம் பிள்­ளை­யாக இருந்­த­போது, உண்­மை­யி­லேயே லத்­தீன் மொழியை கற்­றுக் கொள்ள அவ­ருக்கு நேர­மில்லை. ஏனெ­னில், ஒரு வரு­டத்­திற்­குள்­ளா­கவே போஸ்­டர்ன் ஆரம்ப இலக்­க­ணப் பள்­ளியை விட்­டு­விட்டு, எழுத்­தி­ய­லும், கணக்­கி­ய­லும் கற்­றுக்­கொள்ள ஸ்ரீப்­ர­வு­னெல் பள்­ளிக்­கூ­டத்­திற்கு அவர் செல்ல நேர்ந்­தது.

 அங்கே பெஞ்­ச­மின் அழ­காக எழு­தக் கற்­றுக் கொண்­டாரே தவிர, கணக்­குப் பாடத்­தில் தவ­றி­விட்­டார்.

 இந்த கணக்­குப் பாடத்­தில் மட்­டும் ஏன் இப்­படி என்று எவ­ருக்­கும் தெரி­ய­வில்லை. பிரவு­னெல் வாத்­தி­யாரோ மிகத் திற­மை­யான ஆசி­ரி­யர் என்று கரு­தப்­பட்­ட­வர். ஆகவே, ஆராய்ந்து பார்த்­தால், பெஞ்­ச­மின் மனம் வேறெ­திலோ இருந்­தி­ரு­க­வேண்­டும். ஒரு வேளை,  `யாத்­தி­ரி­கர்­க­ளின் முன்­னேற்­றம்’ போன்ற நூல்­க­ளில் கவ­னம் போயி­ருக்­க­லாம்.

 இருந்­தா­லும், கணித சாஸ்­தி­ரத்­தைப் பிற்­கா­லத்­தில் பெஞ்­ச­மின் கற்­றுக் கொண்­டார். எப்­ப­டியோ அந்த சாஸ்­தி­ரத்தை தாமா­கவே தேடிக் தாமா­கவே தோண்டி எடுத்­துக் கொண்­டார். அதிலே, கணித எண்­களை வைத்­துக் கொண்டு வேடிக்கை காட்ட, எண்­க­ளின் அடிப்­ப­டை­யில் புது விளை­

யாட்­டுக்­க­ளைக் கூட கண்டு பிடித்­தார். இந்த சம­யம் அவர் பள்­ளிக்­கூ­டத்­திற்கு போய்க் கொண்­டி­ரு­க­வில்லை. தம் தந்­தை­யின் தொழி­லில் அவ­ருக்கு உத­வி­யாக, கொதிக்­கும் சோப்­புக் கட்­டி­க­ளைக் கலக்கி கிளறி விடு­வது, மெழு­கு­வர்த்தி அச்­சு­க­ளில் கொழுப்பை ஊற்­று­வது முத­லான வேலை­களை செய்­து­கொண்­டி­ருந்­தார். கொழுப்பு   நிணத்­தின் சத­ச­தப்­பான நாற்­றம் சதா அவர் மூக்கை துளைக்­கும். அத­னால் அவர் கணித சாஸ்­தி­ரத்தை வெறுத்­த­தை­விட, இந்த கொழுப்­பையே அதி­மோ­ச­மாக வெறுத்­தார்.

 பெஞ்­ச­மின் அதை அவ்­வ­ளவு அதி­க­மாக வெறுத்­த­தி­னால்­தான், அவ­ரு­டைய தந்தை மெழு­வர்த்தி தொழிலை அவ­ருக்­குக் கற்­றுக் கொடுத்­து­விட இரண்டு வரு­டங்­கள் வீணாக முயன்­று­விட்டு, கடை­சி­யில் தன் இளைய மக­னுக்கு வேறே­தா­வது தொழில் தேடத் தொடங்­கி­னார். அவர் தம் மக­னின் கையைப் பிடித்­துக் கொண்டு வெளியே போவார். அவ­ரும் பெஞ்­ச­மி­னும் போஸ்­டன் நக­ரம் முழு­வ­தி­லும் உலாவி வரு­வார்­கள். செங்­கல் கொற்­றர், தச்­சர், மூட்டு வேலைக்­கா­ரர், கன்­னார் முத­லா­ன­வர் வேலை செய்­வ­தை­யெல்­லாம் கவ­னித்­துக் கொண்டே வரு­வார்­கள்.  இந்த வழி­யா­க­வா­வது வந்து பெஞ்­ச­மின் தான் செய்ய விரும்­பும் தொழிலை அடை­யா­ளம் காணட்­டும்  என்று தந்தை நினைத்­தார்.

 ஆனால், எது­வும் நடக்­க­வில்லை. இந்த பரி­சோ­தனை உலாக்­க­ளால் பெஞ்­ச­மின், எப்­படி செங்­கல் அடுக்­கு­வது, எப்­படி தச்சு வேலை­யும் இயந்­திர வேலை­யும் செய்­வது என்று புரிந்து கொள்ள முடிந்­ததே தவிர, வேறெந்த பய­னு­மில்லை. வீட்­டைச் சுற்றி கையு­த­வி­யாக உப­யோ­கப்­பட வேண்­டிய சம­யம் அது. ஆனால் பெஞ்­ச­மினோ  ஒன்­றி­லும் நிலை குத்­தா­மல் நாளுக்கு நாள் அதி­கம் குழப்­பத்­தி­லேயே இருந்­தார். தந்­தைக்கோ ஒவ்­வொரு நாளும்  கவலை அதி­க­ரித்­துக் கொண்டே போனது.

 பன்­னி­ரண்டு வய­தா­கப் போகிற பையன் இன்­னும் தன் வாழ்க்கை சம்­பாத்­தி­யத்­திற்கு என்ன தொழில் செய்­ய­லாம் என்று தீர்­மா­னிக்­கா­மல் இருக்­க­லாமா என்ற கவலை அவ­ருக்கு.

‘நீ  என்ன செய்ய விரும்­பு­கி­றாய்?’ என்று தகப்­ப­னார் கேட்­டார்.

‘நான் ஒரு மாலு­மி­யாக விரும்­பு­கி­றேன்’ என்றே பதில் சொல்­லிக் கொண்டு வந்­தார்.

 போஸ்­ட­னி­லுள்ள பையன்­க­ளில் பலர் இப்­ப­டித்­தான் கடல் கடந்து போக விரும்­பி­னார்­கள். நீல­நிற அட்­லாண்­டிக் கட­லின் ஆகர்­ஷண சக்தி எவ்­வ­ளவு வலு­வுள்­ளது என்­பது பெஞ்­ச­மின் தகப்­பா­னா­ருக்­கும் தெரி­யும். ஆனால், அது கடி­ன­மா­ன­தும் பய­னற்­ற­து­மான வாழ்க்கை என்று அவர் நினைத்­தார்.  அத­னால் மக­னின் விருப்­பத்­திற்கு அவ­ரால் சம்­ம­தம் கொடுக்க முடி­ய­வில்லை. அவர் மிக­வும் பொறு­மை­யான பேர்­வழி. அதோடு பாச­முள்ள தந்தை. ஆனால், மகன் விரை­வில் ஏதா­வது செய்­தாக வேண்­டும் என்­ப­தை­யும் உணர்ந்­தி­ருந்­தார்.

 பெஞ்­ச­மி­னுக்கு புத்­த­கங்­கள் மீது ஆசை! அவற்றை எப்­படி செய்­வ­தென்று ஏன் இளைய மகனை கற்­றுக்­கொள்­ள­வி­டக் கூடாது. அவ­ரது மூத்த மக­னான ஜேம்ஸ், அச்­சுக்­கலை பயில இங்­கி­லாந்­துக்­குப் போயி­ருந்­தார். சொந்­த­மாக அச்­சுக்­கூ­டம் ஒன்­றும் போஸ்­டன் நக­ரிலே அமைத்­தி­ருந்­தார். ஆமாம். அது­தான் இந்த பிரச்­னை­க­ளுக்­குச் சரி­யான விடை. தமை­ய­னி­டமே பெஞ்­ச­மினை வேலை பழக விடக்­கூ­டாது என்று கூட நினைத்­தார் தந்தை.

 பெஞ்­ச­மின் பிராங்க்­ளி­னுக்கு பன்­னி­ரண்டு வய­தா­கி­விட்­டது. பள்­ளிப் படிப்பு முடித்து, தொழில் படிப்­புத் துவங்­கி­விட்­டது.

 ஒரு பத்­தி­ரத்­தில் பெஞ்­ச­மின் பிராங்க்­ளின் கையொப்­ப­மி­டப்­பட்­டது. அதில் பெஞ்­ச­மி­னுக்கு இரு­பத்­தோரு வய­தா­கும் வரை தன் தமை­ய­னான ஜேம்­சுக்கு உத­வி­யா­ள­னாக வேலை செய்­வ­தென்று உறு­தி­மொழி கூறப்­பட்­டது. அந்த தொழில் பேரத்­தில் ஜேம்ஸ் தன் பங்­குக் கட­மை­யா­கத் தன் தம்பி பெஞ்­ச­மி­னுக்கு உண்­டி­யும், உறங்க ஓர் இட­மும், அச்­சுக்­க­லை­யில் பயிற்­சி­யும் தரு­வார்.

  அதா­வது இந்த ஒப்­பந்­த­மா­னது பெஞ்­ச­மி­னுக்கு இரு­பத்­தி­யோரு வய­தா­கும் வரை இது அம­லில் இருக்­கும். அதற்கு இன்­னும் ஒன்­பது வரு­டங்­கள் இருந்­தன. கடைசி வரு­டத்­தில்­தான் பெஞ்­ச­மின் ஏதோ கொஞ்­சம் கூலி வாங்க முடிந்­தது. எட்டு வரு­டங்­கள் வரை கூலி­யென ஒரு காசு கூட கிடை­யாது. ஆனால், அந்த ஏற்­பாட்­டி­லும் சில நல்ல விஷ­யங்­கள் இல்­லா­ம­லில்லை. அச்­சுக்­கூ­டத்­தில் வேலை செய்­த­போது, புத்­த­கக் கடை­க­ளில் புத்­த­கங்­கள் விற்­கும்  நபர்­களை அவ­ரால் சந்­திக்க முடிந்­தது. சில சம­யங்­க­ளில்  பெஞ்­ச­மின் நட்­பாக இருக்­கும் புத்­தக வியா­பா­ரி­யி­ட­மி­ருந்து ஏதா­வ­தொரு புத்­த­கத்தை இர­வில் இர­வல் வாங்­கு­வ­துண்டு. அதைப்­ப­டித்­து­விட்டு, அதை அப்­ப­டியே கசங்­கா­மல் சுத்­த­மாக மறு­நாள் காலை­யில் திருப்பி கொடுத்­து­வி­டு­வ­துண்டு. இந்த வழி­யாக பெஞ்­ச­மின் ஏரா­ள­மான கவி­தைப் புத்­த­கங்­கள் படித்த பிறகு, தானும் ஏதா­வது எழுத வேண்­டு­மென்று ஆசை உண்­டா­யிற்று. அதன் விளை­வாக,  ` கலங்­கரை விளக்­கத்­தின் சோக நாட­கம்’ என்ற  கவிதை பெஞ்­ச­மி­னி­ட­ருந்து பிறந்­தது. அது உண்­மை­யா­கவே நடந்த சம்­ப­வ­மா­கும். கட­லில் ஒரு கப்­பல் தலை­வ­னும், அவ­னது இரு மகள்­க­ளும் மூழ்­கிப் போன கதை அது. தம்­பி­யின் இந்த கவி­தையை ஜேம்ஸ் ஒரு சிறு காகி­தப் புத்­த­கத்­தில் அச்­சிட முடிவு செய்­தார். அது அச்­சாகி முடிந்­த­தும், அந்­தப் புத்­த­கங்­களை விற்­று­வர பெஞ்­ச­மி­னையே அனுப்­பி­னார். அவை நன்­றாக விற்­பனை ஆனது. கார­ணம், இப்­போது நமக்­கி­ருக்­கும் செய்­திப் பத்­தி­ரி­கை­கள் போல அந்த நாட்­க­ளில் மக்­க­ளுக்கு எது­வும் கிடை­யாது. அத­னால்,  இறந்து போன கப்­பல் தலை­வனை பற்­றிய துய­ரக் கதையை படிப்­ப­தில் மக்­க­ளுக்கு ஒரே மோகம்.

 இந்த வெற்­றி­யு­டன் பெஞ்­ச­மின் அடுத்­த­தாக ஒரு மாலு­மி­யின் கீதத்தை எழு­தி­னார்.  கார­ணம் அவர் மனம் எப்­போ­தும் கட­லி­லேயே இருந்­த­து­தான். அந்­தப் பாடல்  கடல் கொள்­ளைக்­கா­ர­னான டீச்­சின் வீழ்ச்­சியை பற்­றி­யது.

‘அண்­மை­யில் ஆழ்­க­ட­லிலே நடந்த யுத்­தம் ஒன்­றைக் கேளீரோ.

 அது உங்­கள் காது­க­ளை­யெல்­லாம் கிலு­கி­லுக்­கச் செய்­யும்

 உங்­கள் மதிப்­பெல்­லாம் மாய்ந்­து­போம்

ஆறலை கள்­வன் டீச்­சைப் பற்­றில்

 கப்­ப­லில் செய்த அவன் கய­மை­யைப் பற்றி

 கேட்­ட­துண்டோ நீங்­கள்?

 பொற்­கா­சுக்கு எவ்­வ­ளவு பெரும் காத­ல­னாக இருந்­தான் என்­றும்

 பொல்லா லாபத்தை எவ்­வ­ளவு தூரம் காத­லித்­தான் என்­றும் அறிந்­த­துண்டோ நீங்­கள்.’

 பெஞ்­ச­மி­னின் தந்­தைக்­கும் இந்த கவி­தை­யி­லெல்­லாம் நாட்­ட­மில்லை. அது அவ்­வ­ளவு நல்ல கவி­தை­யா­க­வும் இல்லை. தன் மகன் தான் எழு­திய புத்­த­கங்­க­ளையே எடுத்­துக் கொண்டு வியா­பா­ரம் செய்ய வீட்­டுக்கு வீடு நடந்து திரிந்து கொண்­டி­ருக்­கும் எண்­ணமே அவ­ருக்­குச் சிறி­தும் பிடிக்­க­வில்லை. அத­னால், பெஞ்­ச­மினை கிண்­டல் செய்து கொண்­டி­ருந்­தார்.  இந்த மாதிரி நடக்­கா­ம­லி­ருந்­தால் பெஞ்­ச­மின் ஒரு பெரிய கவி­ஞ­ரா­கவே  உரு­வா­கி­யி­ருப்­பார்.

 பெஞ்­ச­மின் பிராங்க்­ளின் ஒரு எழுத்­தா­ள­ராக உரு­வா­னார் என்­பது உண்­மை­தான். ஆனால் அப்­படி ஆக­வேண்­டும் என்று முடிவு செய்து ஆக­வில்லை.

– (தொட­ரும்)