கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக பங்குச் சந்தைகள் இன்று துவக்கத்திலேயே முடக்கம்

பதிவு செய்த நாள் : 23 மார்ச் 2020 10:13

மும்பை,

வார இறுதி நாட்களுக்காக மூடி இருந்த இந்திய பங்குச்சந்தைகள் திங்களன்று வர்த்தகம் துவங்கியதும் கடுமையான சரிவை எதிர்கொண்டன. 10 சதவீத சரிவை மும்பை பங்குச்சந்தை தாண்டியதால் சர்க்யூட் பிரேக்கர் உடனடியாக அமலுக்கு வந்தது. 45 நிமிடம் இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் முடக்கப்பட்டது அதன்பிறகு தொடர்ந்து வர்த்தகம் நடந்தது

இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது சில வினாடிகளில் 9.2 சதவீதம் பங்குகள் விலை சரிந்தன 10 சதவீதத்தை தொட்டதும் சர்க்யூட் பிரேக்கர் உடனடியாக வர்த்தகத்தை ரத்து செய்து.

அப்பொழுது மும்பை பங்குச்சந்தையின் அடையாள குறியீட்டு எண்ணா கிய சென்செக்ஸ் 2723 புள்ளிகள் சரிந்த நிலையில் இருந்தது. 45 நிமிடங்கள் மூடிக்கிடந்த பிறகு வர்த்தகம் மீண்டும் துவங்கியது. அப்பொழுது சில பங்குகளின் விலைகள் சற்று உயர்ந்த்தால், சரிந்த புள்ளிகளின் அளவு 1947 ஆக சற்று குறைந்த்து. வர்த்தகம் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஞாயிறு அன்று பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கு 14 மணிநேரம் அமலில் இருந்தது .திங்களன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பொழுது பங்குச்சந்தையிலும் ஊரடங்கு அமலுக்கு வந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. தேசிய பங்குச் சந்தையிலும் இன்று கடுமையான சரிவு ஏற்பட்டது. தேசிய பங்குச் சந்தையில் எல்லா பகுதிக்குறியீட்டு எண்களும் இழப்பில் முடிந்தன

இன்று காலை 9.2 சதவீதம் பங்குகள் விலை குறைந்தது பதினோரு மணி அளவில் 842 புள்ளிகள் சரிந்த நிலையில் வர்த்தகம் மீண்டும் தொடர்ந்தது. இன்று வர்த்தகம் நிறைவடையும்போது நிலைமை என்னவாக இருக்கும் என  இப்பொழுது மதிப்பிட முடியவில்லை.