கனடாவில் நிரந்தரமாக தங்க 10 லட்சம் பேருக்கு அனுமதி!

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2020

கனடாவில் அடுத்த மூன்று வருடங்களில் மற்ற நாடுகளில் இருந்து குடியேறியுள்ள பத்து லட்சம் பேருக்கு நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதி வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

இது பற்றி கனடா அகதிகள் குடியேற்றம் மற்றும் குடியுரிமைத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த வருடத்திற்குள் 3.41 லட்சம் பேர், அடுத்த ஆண்டில் 3.51 லட்சம் பேர், 2022ம் ஆண்டில் 3.61 லட்சம் பேர் என மொத்தம் பத்து லட்சம் பேருக்கு நிரந்தரமாக தங்க அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் குடி

யுரிமை துறை அமைச்சர் மார்கோ மெடிசினோ தாக்கல் செய்தார். இது ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது.

இதனால் கனடாவில் நடுத்தர கட்டமைப்பை பலப்படுத்த முடியும். கனடா தொழில், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறும். உலக அளவிலான மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற முடியும். அமெரிக்க அரசு குடியேற்ற விதிகள் கடுமையாக்கும் நிலையில், அதன் அண்டை நாடான கனடாவில் குடியேறியவர்களுக்கு நிரந்தரமாக தங்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

சென்ற வருடம் கனடா அரசு 3.41 லட்சம் பேருக்கு நிரந்தரமாக தங்க அனுமதி வழங்கி யுள்ளது குறிப்பிடத்தக்கது.