தாயின் சடலத்துடன் பச்சிளம் குழந்தை

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2020

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அடுக்கு மாடி குடியிருப்பின் உள்ள ஒரு வீட்டின் கதவு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது எக்டாரினா தில்கினா (27) என்ற இளம் பெண்,உடல் முழுவதும் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் மீது சாய்ந்தபடி ஒரு வயது மகள் எவா படுத்திருந்தார். குழந்தை எவா பட்டினியுடன் இருப்பது தெரிந்தது. போலீசார் குழந்தையை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.  எக்டாரினாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். எக்டாரினாவின் 39 வயது காதலன், அவரை அடித்துக் கொன்றது தெரியவந்த்து. போலீசார் காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை எவா உடல் நலம் தேறி வருகிறார்.