காடுகளின் கரி உறிஞ்சும் திறன் குறைகிறதா?

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2020

சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யக்கூடிய திறன் காடுகளில் குறையத் துவங்கி யுள்ளதாக ஆய்வுகள் விவரிவிக்கின்றன.வனப்பகுதியில் மரங்கள், செடி, கொடிகள் அடர்த்தியாக இருப்பதால், அவை மனிதர்களுக்கு உதவாத கரியமில வாயுவை உறிஞ்சி, உயிர் தரும் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

இதனால் தான் காடுகளை, இயற்கையின் ஆக்சிஜன் தொழிற்சாலைகள் என்று புகழப்படுகின்றன.ஆனால், அமேசான், ஆப்ரிக்கக் காடுகளில் இயல்பாக உள்ள இத்திறன், 1990களிலேயே உச்சக் கட்டத்தை எட்டி விட்டதாக இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் துள்ளன. கடந்த, 1990களில் அமேசான், ஆப்ரிக்கக் காடுகள், காற்றிலிருந்து 46 பில்லியன் டன் கரியமில வாயுவை உறிஞ்சின. ஆனால், 2010 வாக்கில், அவற்றால் 25 பில்லியன் கரியமில வாயுவையே உறிஞ்ச முடிந்துள்ளது. காடுகளின் கரியமில உறிஞ்சு திறன் இதே போக்கில் தொடர்ந்தால், 2030 களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக லீட்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புவி வெப்பமாதல், காடுகளில் வறட்சி ஏற்படுதல் போன்றவை மரங்களின் கரியமில உறிஞ்சு திறனை வெகுவாக குறைத்து வருவதாக ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர்.