மோடி கவனத்தை ஈர்த்த சினேகா! – சுமதி

பதிவு செய்த நாள் : 19 மார்ச் 2020

சர்­வ­தேச மக­ளிர் தினத்தை முன்­னிட்டு ஒரு நாள் பிர­த­மர் மோடி­யின் டிவிட்­டர் கணக்கை நிர்­வ­கிக்­கும் பொறுப்­பைப் பெற்ற தமி­ழச்சி சினேகா, அப்­படி என்ன சாதனை செய்­துள்­ளார்? ஒவ்­வொரு ஆண்­டும் மார்ச் 8ம் தேதி பெண்­க­ளைக் கொண்­டா­டும் வகை­யில் உல­கெங்­கும் ‘சர்­வ­தேச மக­ளிர் தினம்’ கொண்­டா­டப்­பட்டு வரு­கி­றது. மகள், தாய், தங்கை, மனைவி, தோழி, மேல­தி­காரி... என தத்­த­மது வாழ்­வில் பல்­வேறு வடி­வங்­க­ளில் உடன் பய­ணித்து பலம் சேர்த்­துக் கொண்­டி­ருக்­கும் பெண்­களை ஆணு­ல­கம் வாழ்த்­து­க­ளால் அலங்­க­ரித்­துக் கொண்­டாடி கொண்­டி­ருக்க, நாட்­டின் பிர­த­மர் வித்­தி­யாச­ மான முறை­யில் பெண்­களை கவு­ர­வித்­துள்­ளார்.

மக­ளிர் தினத்­தன்று ஒரு நாள் மட்­டும் பிர­த­ம­ரின் பேஸ்­புக், டிவிட்­டர், இன்ஸ்­டா­கி­ராம், யூடி­யூப் என சகல சமூக வலை­தள கணக்­கு­க­ளை­யும் நிர்­வ­கிக்­கும் பொறுப்பை ஏழு பெண்­க­ளி­டம் வழங்கி இருந்­தார். அதில், பிர­த­ம­ரின் சமூக வலை­த­ளத்­தில் முத­லா­வ­தாய் லாகின் செய்து பதிவு செய்­த­வர் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த சினேகா மோகன்­தாஸ்.

‘இந்த மக­ளிர் ­தி­னத்­தன்று உத்­வே­கம் அளிக்­கும் வாழ்க்­கை­யை­யும், பணி­யை­யும் மேற்­கொண்டு வரும் பெண்­க­ளி­டம் எனது அனைத்து சமூ­க­வ­லை­தள கணக்கை நிர்­வ­கிக்­கும் பொறுப்பை ஒப்­ப­டைக்­கப் போகி­றேன். அவர்­க­ளின் வாழ்க்­கைக் கதை லட்­சக்­க­ணக்­கான மக்­க­ளுக்கு உத்­வே­கத்தை அளிக்­கும். நீங்­கள் அத்­த­கைய பெண்ணா அல்­லது இது­போன்ற எழுச்­சி­யூட்­டும் பெண்­களை உங்­க­ளுக்­குத் தெரி­யுமா? அப்­ப­டி­யெ­னில், Sheinsopiresus என்ற ஹேஷ்­டெக்கை பயன்­ப­டுத்தி அவர்­க­ளது கதை­க­ளைப் பகி­ர­வும்,” என்று அறி­விப்பு டிவீட்டை பதி­விட்­டி­ருந்­தார், பிர­த­மர்.

அதன்­படி, நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஏழு பெண் சாத­னை­யா­ளர்­கள் தங்­கள் வாழ்க்­கைப் பய­ணங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்டு தனது சமூக ஊட­கக் கணக்­கு­கள் மூலம் உங்­க­ளு­டன் உரை­யா­டு­வார்­கள் என்­ற­து­டன் மக­ளிர் தின வாழ்த்­து­களை தெரி­வித்து மக­ளிர் தினத்­தன்று விடைப்­பெற்­றார் பிர­த­மர் மோடி. ஏழு சாத­னைப் பெண்­க­ளும் அவர்­க­ளது கதையை பகிர்ந்து டிவிட்­ட­ராட்­டி­க­ளு­டன் உரை­யா­டி­னர். அதில் முத­லா­வ­தாய் தன்­னைப் பற்­றிய கதையை பதி­விட்­டார் சென்­னையை தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு செயல்­ப­டும் புட் பேங்க் இந்­தியா (உணவு வங்கி) என்ற அறக்­கட்­ட­ளை­யின் நிறு­வ­னர் சினேகா மோகன்­தாஸ்.

‘பட்­டி­னி­யில்லா தேசத்தை உரு­வாக்­கு­வோம்’ என்­பதை நோக்­க­மா­கக் கொண்டு செயல்­ப­டும் ‘புட் பேங்க் இந்­தியா’, ஏழை மக்­க­ளுக்­குச் சூடான சத்­தான உணவை நித்­தம் வழங்­கும் அரும்­செ­யல் புரிந்து வரு­கி­றது. ‘ஹலோ நான், இல்­லா­த­வர்­க­ளுக்கு உண­வ­ளிக்க வேண்­டும் என்ற பழக்­கத்­தைக் கொண்ட எனது தாயால் ஈர்க்­கப்­பட்­ட­வள். இதன் கார­ண­மாக புட்­பேங்க் இந்­தியா என்ற முயற்­சியை தொடங்­கி­னேன்,’ எனும் கேப்­ஷ­னு­டன், அவ­ரது பய­ணத்தை விளக்­கும் வீடி­யோவை பகிர்ந்­தி­ருந்­தார்.  அதில், “வணக்­கம், நான் சினேகா மோகன்­தாஸ், 'புட் பேங்க் இந்­தியா' அமைப்­பின் நிறு­வ­னர். 2015ம் ஆண்டு சென்­னை­யில் வெள்­ளம் ஏற்­பட்­ட­தற்கு முன்பு நான் புட் பேங்க் இந்­தி­யாவை தொடங்­கி­னேன். ‘பட்­டி­னி­யில்லா நாடு, பசிக்கு எதி­ரா­கப் போராடு’ என்­பதே அதன் நோக்­கம். எனது தாத்­தா­வின் பிறந்­த­நாள் மற்­றும் சில சிறப்­பான தினங்­க­ளில் குழந்­தை­ந­லக் காப்­ப­கங்­க­ளில் உள்ள குழந்­தை­க­ளுக்கு எனது அம்மா உணவு வழங்­கு­வார். அங்­கி­ருந்து தான் இவை­ய­னைத்­தும் துவங்­கி­யது.

உல­கமே உற்று நோக்­கும் பேஸ்­புக்­கில் ‘புட் பேங்க் இந்­தியா’ எனும் பெய­ரில் பக்­கத்தை தொடங்­கி­னேன். வருங்­கால தலை­மு­றையை பேஸ்­புக் மூலம் இணைத்து அவர்­களை தளத்­தில் இறங்­க­வைக்க வேண்­டும் என்­பது தான் என் எண்­ணம். நிறைய பேருக்கு உத்­வே­கம் அளித்­த­து­டன், அவர்­க­ளது மாநி­லங்­க­ளி­லும் எளி­யோ­ருக்கு உணவு வழங்கி வரு­கின்­ற­னர். எங்­க­ளுக்கு உதவி செய்ய விரும்­பு­வர்­க­ளி­ட­மி­ருந்து பண­மா­கப் பெறா­மல் பொருள்­க­ளா­கப் பெற்று நாங்­களே சமைத்து அனை­வ­ருக்­கும் வழங்கி வரு­கி­றோம். சமைப்­பது தொடங்கி, பாத்­தி­ரம் துலக்­கு­வது, சமைத்த உண­வு­களை பசி­யில் காத்து கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு விநி­யோ­கிப்­பது வரை எல்லா வேலை­யும் தன்­னார்­வ­லர்­களே செய்­கின்­ற­னர். உத­வும் மனப்­பான்மை கொண்ட அவர்­க­ளுக்கே அனைத்து

கிரேட்­டிட்­க­ளும். ‘வெற்­றியை ஒரு­போ­தும் பிடித்து வைத்து கொள்­ளா­தீர்; வெற்­றியை பகிர்ந்து கொள்­ளுங்­கள்’ இது தான் என் வெற்­றி­யின் மந்­தி­ரம்,” என்று பேசி முடித்­துள்­ளார். தொடர்ந்து டிவிட்­ட­ராட்­டி­க­ளு­டன் உரை­யா­டிய அவர், “பசியை அகற்ற வேண்­டி­ய­தன் அவ­சி­யம் குறித்த விழிப்­பு­ணர்­வைப் பரப்ப நான் பிர­த­ம­ரின் டிவிட்­ட­ரரை பயன்­ப­டுத்­திக் கொண்­டேன். நீங்­க­ளும் எனக்கு உத­வு­வீர்­களா? அது ரொம்ப சிம்­பிள். ஏழை­க­ளுக்கு உண­வ­ளிக்­க­வும், உணவு வீணா­கா­மல் பார்த்­துக் கொள்­ளுங்­கள்.” என்­றார்.