3 லட்ச முதலீடு : 500 பெண்களுக்கு வேலை, ரூ.2.20 கோடி வருவாய் – லட்சுமி

பதிவு செய்த நாள் : 19 மார்ச் 2020

பிளஸ் 2 வரை மட்­டுமே படித்­துள்ள ஏழ்­மை­யான குடும்­பத்­தில் பிறந்த ஆனந்­த­லட்­சுமி, மணம் முடிந்து குடும்­பத்­துக்­கும், சமூ­கத்­துக்­கும் பங்­க­ளிக்க எட்டு ஆண்­டு­க­ளுக்கு முன் தொடங்­கிய ஏஆர் மேன்­ப­வர் இன்று நல்ல வளர்ச்­சியை அடைந்­துள்­ளது.

சரா­சரி நடுத்­த­ரக் குடும்­பங்­க­ளில் பிறக்­கும் பல பெண்­க­ளுக்கு கல்வி, மேற்­ப­டிப்பு, வேலை­வாய்ப்பு என்­ப­தெல்­லாம் இன்­னும்­கூட பெரும் கன­வாக இருக்­கி­றது. குடும்­பச் சூழல், உடன் பிறந்­தோர் என பல கார­ணங்­க­ளுக்­காக தங்­க­ளின் படிப்பை பாதி­யில் விட்­டு­விட்டு திரு­ம­ணம் முடித்து, கண­வர், குழந்தை என செட்­டில் ஆகி அதி­லேயே தங்­கள் சந்­தோ­ஷத்தை தேடிக் கொள்­ளும் பெண்­கள் இன்­ன­மும் அதி­க­மா­கத் தான் இருக்­கின்­ற­னர்.  

ஆனால் அதில் ஒருசி­லர் மட்­டுமே மாறுப்­பட்டு, தங்­க­ளுக்­கென ஒரு அங்­கீ­கா­ரம், நிதி சுதந்­தி­ரம், கண­வர் -குடும்­பத்­துக்கு மட்­டு­மல்­லா­மல் சமூ­கத்­துக்­கும் தங்­க­ளின் முயற்சி மூலம் ஒரு தாக்­கத்­தை­யும் அதே சம­யம் பொரு­ளா­தார அள­வி­லும் வெற்றி காண நினைத்து, எப்­ப­டியோ ஒரு ஏணிப்­ப­டியை பிடித்து மேல் ஏறி உய­ரப் பறக்­கின்­ற­னர். அவர்­க­ளில் ஒரு­வர்­தான் ஆனந்­த­லட்­சுமி.  ஆனந்த லட்­சுமி தொடங்­கிய ‘ஏஆர் மேன்­ப­வர்’ எட்டு ஆண்­டு­கள் கடந்த நிலை­யில் ஒரு நிறு­வ­ன­மாக வெற்­றி­யோ­டும், சமூ­கத்­துக்­கும் ஒர் நல்ல முன்­னெ­டுப்­பாக அமைந்­துள்­ளது. ஏ ஆர் மேன்­ப­வர் நிறு­வ­னர் ஆனந்­த­லட்­சுமி அவ­ரின் கதை இதோ...

மிக­வும் ஏழ்­மை­யான குடும்­பத்­தைச் சார்ந்த ஆனந்த லட்­சு­மிக்கு உடன்­பி­றந்­த­வர்­கள் ஒரு அக்கா, இரண்டு தங்கை மற்­றும் ஒரு தம்பி. 12-ம் வகுப்பு வரை மட்­டுமே படித்து இருந்து நிலை­யில் 21 வய­தில் அவ­ருக்கு திரு­ம­ணம் முடிந்­தது. கண­வர் பார்த்­த­சா­ர­தி­யின் உந்­து­த­லால் திரு­ம­ணத்­திற்­குப் பிறகு பி.ஏ பொரு­ளா­தா­ரம் படிக்­கத் தொடங்­கி­னார் ஆனந்­த­லட்­சுமி. ஆனால் அவ­ரால் படிப்பை முடிக்­க­மு­டி­ய­ வில்லை.”

என் கண­வர் 2000 ரூபாய் சம்­ப­ளத்­து­டன்

ஒரு தனி­யார் நிறு­வ­னத்­தில் வேலை செய்து கொண்­டி­ருந்­தார். எனக்கு பெண் குழந்தை பிறந்­தது. அவ­ளுக்­குத் தேவை­யான பொருட்­க­ளைக்­கூட எங்­க­ளால் வாங்க முடி­ய­வில்லை. அவ­ளுக்கு பால் சூடு செய்து கொடுக்­கக்­கூட விறகு அடுப்பை பயன்­ப­டுத்­து­வோம். அப்­படி ஒரு நெருக்­க­டி­யான காலத்­தில் வாழ்ந்­தோம்,” என்­கி­றார் ஆனந்­த­லட்­சுமி.  

மிக­வும் கஷ்­ட­மான காலங்­க­ளில் ஒரு மகன் பிறந்­த­வு­டன் வேலைக்கு போக­லாம் என நினைத்­தேன். என் மாமி­யாரை பார்த்­துக்­கொள்­ளச் செய்­து­விட்டு வேலைக்கு சென்­ற­தால் பிரச்னை ஏற்­பட்­டது. என்­னால் தொடர்ந்து வேலைக்கு போக­மு­டி­ய­வில்லை. குடும்­பப் பாரத்தை தானும் சுமக்க எண்­ணிய ஆனந்­த­லட்­சு­மிக்கு எந்த வழி­யில் செல்ல வேண்­டும் என்று புரி­யா­மல் இருந்த பொழுது, 2002-ல் ஒரு மக­ளிர் குழு­வில் சேர விருப்­பம் ஏற்­பட்­டது.

“என் கண­வ­ரும் இன்­னும் எத்­தனை காலம் வீட்­டிற்­குள்­ளேயே இருப்­பாய் என்று கூறி ஊக்­கப்­ப­டுத்­தி­னார். அதன் படி புது­வ­சந்­தம் என்ற மக­ளிர் குழு­வில் சேர்ந்து நிறைய பயிற்­சி­க­ளில் கலந்­து­கொண்­டேன். அது­மட்­டு­மல்­லா­மல் நான் 2005-ம் ஆண்டு ஸ்மார்ட் என்ற செக்­யூ­ரிட்டி கம்­பெ­னி­யில் வேலைக்­குச் சேர்ந்­தேன். 3000 ரூபாய் சம்­ப­ளத்­தோடு மேன்­ப­வர் எப்­படி கம்­பெ­னி­க­ளுக்கு கொடுக்­கி­றார்­கள் எனக் கற்­றுக் கொண்­டேன்,” என்­றார்

உற்­சா­க­மாக.  தொழில்­மு­னை­வோர் பயிற்­சி­க­ளில் கலந்­து­கொண்ட ஆனந்­த­லட்­சு­மிக்கு தாமும் ஏன் தொழில்­மு­னை­வ­ராகி பல பெண்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என்ற எண்­ணம் தோன்­றி­யது. அதன் அடிப்­ப­டை­யில் 2007-ம் ஆண்டு ஏ.ஆர்.மேன் பவர் என்ற நிறு­வ­னத்தை தொடங்­கி­னார். தன்­னு­டைய நிறு­வ­னத்­தில் அதி­க­மான பெண்­க­ளுக்கு வேலை கொடுக்­க­வேண்­டும் என முடி­வெ­டுத்து அதன் அடிப்­ப­டை­யில் பல முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளார்.  

ஆனால் அவ­ரால் அதை சரி­யாக செயல்­ப­டுத்த முடி­ய­வில்லை. 2009-ம் ஆண்டு மேலும் ஒரு தொழில்­மு­னை­வோர் பயிற்­சி­யில் கலந்து கொண்ட போது­தான் அவர் மன­தில் தெளிவு ஏற்­பட்­டது அது­வரை என்­னை­விட மேல்­மட்­டத்­தில் உள்ள பெண்­களை மட்­டுமே பார்த்­தேன். ஆனால் என்­னை­விட மிக­வும் கஷ்­டப்­ப­டு­கிற பெண்­க­ளைப் பற்றி நான் சிந்­திக்­கவே இல்லை. அப்­போ­து­தான் ஒரு முடி­விற்கு வந்­தேன்.

கண்­டிப்­பாக என்­னா­லும் வெற்­றி­ய­டைய முடி­யும் என முடி­வெ­டுத்து இன்­னும் அதி­க­மான தன்­னம்­பிக்­கை­யு­டன் வேலை செய்ய ஆரம்­பித்­தேன்,” என்­றார்.

கிரா­மங்­க­ளில் வசிக்­கும் பெண்­க­ளுக்கு பெரு நிறு­வ­னங்­க­ளான; பார்லே ஆக்ரோ, அமே­சான், இண்ட்-­டெக் போன்ற நிறு­வ­னங்­கள் மற்­றும் பேக்­ட­ரி­க­ளில் வேலை­வாய்ப்பை வழங்­கு­கி­றது ஏஆர் மேன்­ப­வர். அவர்­க­ளுக்கு முறை­யாக பி எப் பிடிக்­கப்­பட்டு ஊதி­யம் வழங்­கப்­ப­டு­வ­தாக ஆனந்­த­லட்­சுமி கூறு­கி­றார்.  ‘

‘தற்­ச­ம­யம் என் கம்­பெ­னி­யின் மூலம் 100 பெண்­கள் வேலை­யில் இருக்­கி­றார்­கள். எந்­த­வித அடிப்­படை வச­தி­கள்­கூட இல்­லாத ஊர்­க­ளில் இருந்து வந்­த­வர்­கள். அவர்­க­ளுக்கு தகுந்த வேலை, இருப்­பி­டம் என எல்லா வச­தி­க­ளை­யும் செய்து கொடுத்­தி­ருக்­கி­றேன்,” என்­றார். இது­மட்­டு­மின்றி 3 லட்ச ரூபாய் முத­லீட்­டில் ஆனந்­த­லட்­சுமி தொடங்­கிய ஏஆர் மேன்­ப­வர் நிறு­வ­னம் நல்ல வளர்ச்­சியை கண்­டுள்­ளது.

“கடந்த 8 ஆண்­டு­க­ளில் 500-க்கும் மேற்­பட்ட பெண்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு ஏற்­ப­டுத்தி ஆண்­டிற்கு 2.20 கோடி வரு­வாய் ஈட்­டும் அள­விற்கு உயந்­துள்­ளது,” என்று மகிழ்ச்­சி­யு­டன் பகிர்­கி­றார்.