கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 19–3–2020

பதிவு செய்த நாள் : 19 மார்ச் 2020

கொரோனாவை விரட்டுவோம்...

கொரோனா வைரஸ் மிகப்­பெ­ரிய அள­வில் உலக நாடு­களை அச்­சு­றுத்­திக் கொண்­டி­ருக்­கி­றது.

dத கொரோனா வைரஸ் இஸ் இன்­டி­மிd­­டே­டிங் வர்ள்ட் நேஷன்ஸ் இன் அ வெரி bபிக் வே. The corona virus is intimidating world nations in a very big way.

கொரோனா வைரஸ்   = dத கொரோனா வைரஸ் (The corona virus)

 அச்­சு­றுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது = இஸ் இன்­டி­மிd­­டே­டிங் (is intimidating)

உலக நாடு­களை = வர்ள்ட் நேஷன்ஸ் (world nations)

மிகப்­பெ­ரிய அள­வில் = இன் அ வெரி bபிக் வே (in a very big way).

'இன்­டி­மிd­­டே­டிங்' (in-timi-dating) என்­பது அச்­சு­றுத்­த­லாக உள்ள தன்­மை­யைக் குறிக்­கி­றது.

'த மேன் லுக்dட் ஆட் dத ஷாப்­கீ­பர் இன் ஆன் இன்­டி­மிd­­டே­டிங் மேன்­னர்'. The man looked at the shopkeeper in an intimidating manner. அந்த மனி­தன் கடைக்­கா­ரரை அச்­சு­றுத்­தும் வித­மா­கப் பார்த்­தான்.

'இன்­டி­மிd­­டே­டிங்' என்ற சொல்­லில் ஐந்து அசை­கள் உள்­ளன. இன் + டிம் + இ + டே + டிங்.

இந்த சொல்லை, அதன் இரண்­டா­வது அசை­யான ' டிம்'  என்­பதை அழுத்­திக் கூறி­ய­படி உச்­ச­ரிக்க வேண்­டும்.

'dடேடிங்' (dating) என்று கேள்­விப் பட்­டி­ருப்­பீர்­கள். மேற்­கத்­திய நாக­ரீ­கம் உள்ள நாடு­க­ளில்,  திரு­ம­ணத்­திற்கு முன் ஆணும்  பெண்­ணும் நெருக்­க­மா­கப் பழகி, பொருத்­தம் பார்த்­துக் கொள்­ளும் முறை அது. இன்­டிமி+டேடிங் என்ற சொல்­லின் கடைசி இரண்டு அசை­க­ளாக (ஸில்­ல­பில்ஸ் syllables) 'dடேடிங்' வரு­கி­றது. 'இன்­டி­மிd­­டே­டிங்' என்ற சொல் மிக­வும் நீள­மாக உள்­ளதே என்று அச்­சம் கொள்­ளத் தேவை இல்லை என்று பிரித்­துப்­பார்த்­தோம்… அவ்­வ­ளவே.

'இன்­டி­மிd­­டே­டிங்' இடம் பெறும் இன்­னொரு உதா­ரண வாக்­கி­யத்­தைப் பார்ப்­போம்.

'ஹீ மே லுக் இன்­டி­மிd­­டே­டிங் bபட் ஹீ இஸ் ஆக்­சு­வல்லி அ வெரி ஃபிரெண்ட்லி பர்­ஸன்'. He may look intimidating but he is actually a very friendly person. அச்­சம்­த­ரும் (அச்­சு­றுத்­தும்) வகை­யில் அவன் தோற்­றம் இருந்­தா­லும், உண்­மை­யில் அவன் மிக­வும் கனி­வா­ன­வன் (இணக்­க­மா­ன­வன், நட்­பா­ன­வன்).

ஆனால் கொரோனா வைரஸ் அப்­ப­டி­யல்ல. bபட் dத கொரோனா வைரஸ் இஸ் நாட் லைக் தேட். But the corona virus is not like that.

அது மிக­வும் ஆபத்­தா­னது. இட் இஸ் வெரி டேஞ்­ஜ­ரஸ். It is very dangerous!

அது உலக நாடு­க­ளில் தொடர்ந்து தனது மரண நர்த்­த­னம் புரி­கி­றது. இட் இஸ் பர்ஃ­பார்­மிங் இட்ஸ் dடெத் dடேன்ஸ் இன் dத வர்ள்dட் நேஷன்ஸ். It is performing its death dance in the world nations.

மரண நர்த்­த­னம் = dடெத் dடேன்ஸ் (death dance).

உலக சுகா­தார நிறு­வ­னம் இந்­தத் வைரஸ் தொற்று ஏற்­ப­டா­மல் காத்­துக்­கொள்­வது எப்­படி என்று சில அறி­வு­ரை­கள் தந்­தி­ருக்­கி­றது.

வாஷ் யுவர் ஹேன்ட்ஸ் ஃபிரீக்­கு­வென்ட்லி. Wash your hands frequently. அடிக்­கடி உங்­கள் கைக­ளைக் கழு­விக்­கொள்­ளுங்­கள்.  

அதா­வது, ஸோப் மற்­றும் நீரைக்­கொண்டு கைகளை அடிக்­கடி நன்­றாக  சுத்­தம் செய்து கொள்­ளுங்­கள். தேட் இஸ், கிளீன் யுவர் ஹேன்ட்ஸ் வெல் ஃபிரீக்­கு­வென்ட்லி வித் ஸோப் அண்dட் வாட்­டர்,.  That is, clean your hands frequently with soap and water.

அவாய்dட் டச்­சிங் யுவர் ஐஸ், நோஸ், மவுத். Avoid touching your eyes, nose, mouth. உங்­கள் கண்­கள், மூக்கு, வாய் (ஆகிய அவ­ய­வங்­களை) தொடு­வ­தைத் தவி­ருங்­கள்.

தும்­மி­னாலோ, இரு­மி­னாலோ முகத்தை டிஷ்ஷு பேப்­ப­ரால் மூடிக்­கொள்­ளுங்­கள். இஃப் யூ ஸ்னீஸ் ஆர் காஃ ப், கவர் யூவர் ஃபேஸ் வித் டிஷ்ஷு பேப்­பர். If you sneeze or cough, cover your face with tissue paper.  dதென் dடிஸ்­போஸ் ஆஃப் dத பேப்­பர். Then dispose of the paper.

ஸ்னீஸிங் = தும்­மல்

இரு­மல் = காஃப்

கூட்­ட­மான இடங்­க­ளுக்­குச் செல்­லா­தீர்­கள்.

dடோன்ட் gகோ டு கிர­வுd­­டெdட் பிளே­ஸஸ். Don’t go to crowded places.

இரு­மு­கி­ற­வர்­கள், தும்­மு­கி­ற­வர்­கள் இட­மி­ருந்து குறைந்­தது மூன்­றடி தள்­ளி­யி­ருங்­கள். பீ ஆட் லீஸ்ட் திரீ ஃபீட் அவே ஃபிரம் தோஸ் ஹு ஆர் காஃப்­பிங்

ஆர் ஸ்னீஸீங். Be at least three feet away from those who are coughing or sneezing.

வயது முதிர்ந்­த­வர்­கள் இந்த கொரோனா வைரஸ் தொற்­றுக்கு ஆளா­னால், அது அவர்­கள் உயி­ருக்கு அபா­ய­மாக முடி­யக்­கூ­டும். ஆகவே வய­தா­ன­வர்­களை இதி­லி­ருந்து காப்­பது அவ­சி­யம்.  If aged persons are infected by this corona virus, it may cause danger to their life. It is therefore necessary to protect them from it.

ஜல­தோ­ஷம், இரு­மல், தலை­வலி, ஜுரம், சுவா­சக்­கோ­ளாறு போன்­றவை இருந்­தால், உடனே மருத்­துவ உத­வியை நாடு­வது நல்­லது. இட் இஸ் பெஸ்ட் டு ஸீக் மெdடி­கல் அட்­வைஸ் இஃப் வொன் ஹேஸ் கோல்dட், காஃப், ஹெdட்­டேக், ஃபீவர், bபிரீ­திங் டிஃப்ஃ­பி­கல்­டீஸ். It is best to seek medical advice immediately if one has cold,  cough, headache, fever and breathing difficultires

இவை சாதா­ரண கார­ணங்­க ளா­லும் ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்­றா­லும், கொரோனா வைரஸ் அவற்­றுக்­குக் கார­ண­மாக இருக்­க­லாம். dதோ dதே மே ஹேவ் bபீன் டிரிgக்g­­கர்dட் bபை dத யூஷு­வல் காஸெஸ், கொரோனா வைரஸ் மைட் ஆல்ஸோ ஹேவ் காஸ்dட் dதெம்.  Though they may have been triggered by the usual causes, corona virus might also have caused them.

அத­னால் நோய் உள்­ள­வ­ரின் நிலை­யும் ஆபத்­தா­கும்,  பிற­ருக்­கும் அதன் தொற்று ஏற்­பட்டு அவர்­க­ளு­டைய நிலை­மை­யும் மோச­மா­கும். Because of this, the condition of the affected person will worsen,  others too may get infected by the virus and their condition too may worsen.

bபேdட் (bad) என்­றால் மோசம்.

வர்ஸ் (worse) என்­றால் இன்­னும் மோசம்.

வர்­ஸென் (worsen) என்­றால் இன்­னும் மோச­மா­வது.

நாம் கட்­டுப்­பாட்­டோடு இருந்­தால் இப்­படி ஆகா­மல் காக்­க­லாம்.

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in