பிசினஸ்: குறைந்த முதலீட்டில் அதிக லாப சிறுதொழில்கள் – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 19 மார்ச் 2020

குறைந்த முத­லீட்­டில் அதிக லாபம் கிடைக்­கும் தொழில்­தான், தொழில் தொடங்க விரும்­பும் அனை­வ­ரது எதிர்­பார்ப்­பாக இருக்­கும். நாம் தொடங்க விரும்­பும் தொழிலை முறை­யாக வரை­ய­றுத்து தெளி­வாக திட்­ட­மி­ட­வேண்­டி­யது அவ­சி­யம். உங்­க­ளது தொழில்­மு­னைவு ஆர்­வத்­திற்கு வலு­சேர்க்­கக்­கூ­டிய தொழில் யோச­னை­கள் இங்கே தொகுக்­கப்­பட்­டுள்­ளன.

டிசை­னர் லேஸ்  : டிசை­னர் லேஸ் பொது­வாக ஆடை­க­ளி­லும் கலை வேலைப்­பா­டு­க­ளி­லும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. பாரம்­ப­ரி­ய­மான இந்த வணி­கத்தை எளி­தாக வீட்­டி­லேயே தொடங்­க­லாம். பேஷன் பிரிவு மிக­வும் பிர­ப­ல­மா­கி­யுள்ள இன்­றைய கால­கட்­டத்­தில் வெவ்­வேறு வகை­யான லேஸ்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது. எனவே புது­மை­யான வகை­யில் இவற்றை தயா­ரித்­தால் வெற்றி நிச்­ச­யம். அத்­து­டன் லேஸ் வெளி­நா­டு­க­ளுக்­கும் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­வ­தால் இதில் ஈடு­ப­டு­வது சிறந்த தேர்­வாக இருக்­கும். பேஷன் லேஸ் பிசி­னசை தொடங்க கையில் 25 ஆயி­ரம் ரூபாய் முதல் 50 ஆயி­ரம் ரூபாய் இருந்­தால் போதும்.

ஷூ லேஸ்  : சீனா­விற்கு அடுத்­த­ப­டி­யாக இந்­தி­யா­வில்­தான் அதி­க­ள­வி­லான கால­ணி­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. விளை­யாட்டு, பார்­மல், கேஷு­வல் என பல்­வேறு பிரி­வு­க­ளின் கீழ் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. எனவே ஷூ லேஸ் தேவை­யும் அதி­க­ரித்­துள்­ளது. லேஸ் தயா­ரிக்க காட்­டன், பாலிஸ்­டர், நைலான், பாலிப்­ரொப்­பி­லீன் போன்­ற­வற்­றைப் பயன்­ப­டுத்­த­லாம். லேஸ் முனை­களை பிளாஸ்­டிக் கொண்டு தயா­ரிக்­க­லாம். தயா­ரிப்பு முறைக்கு பின்­னல் இயந்­தி­ரம் தேவைப்­ப­டும். ஷூ லேஸ் தயா­ரிப்பு வணி­கத்­தில் சிறி­ய­ள­வில் ஈடு­பட்­டா­லும் மிக­வும் லாப­க­ர­மாக செயல்­ப­ட­லாம். சிறிய இயந்­தி­ரம் வாங்கி ஷூ லேஸ் தொழிலை 25 ஆயி­ரம் ரூபாய் முதல் தொடங்­க­மு­டி­யும்.

பேப்­பர் தட்டு மற்­றும் கப்  : இந்­தி­யா­வில் சுற்­றுலா செல்­லும்­போ­தும் விழாக்­க­ளி­லும் அப்­பு­றப்­ப­டுத்­தக்­கூ­டிய தட்­டு­கள் மற்­றும் கப்­கள் அதி­க­ள­வில் பர­வ­லாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. சாலை­க­ளில் விற்­பனை செய்­யும் விற்­ப­னை­யா­ளர்­க­ளும் இவற்றை அதி­க­ள­வில் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். ஒரு­முறை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பிளாஸ்­டிக் பயன்­பாடு தடை செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த வகை­யில் பேப்­ப­ரால் தயா­ரிக்­கப்­ப­டும் தட்டு மற்­றும் கப் வகை­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது. குறைந்த விலை­யில் பேப்­பர்­களை வாங்கி இவற்­றைத் தயா­ரித்து லாப­ம­டை­ய­லாம். இதற்கு 25 ஆயி­ரம்- 50 ஆயி­லம் ரூபாய் வரை முத­லீடு செய்­ய­லாம்.

ஸ்டேபிள் பின்  : பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள், அரசு மற்­றும் தனி­யார் அலு­வ­ல­கங்­கள் என ஸ்டேப்­ளர் பயன்­பாடு எங்­கும் நிறைந்­துள்­ளது. வழக்­க­மாக ஸ்டேப்­ளர் பின் வெள்ளை நிற கால்­வ­னைஸ் செய்­யப்­பட்ட இரும்பு வயர் கொண்டு தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. தர­மான இரும்பு பயன்­ப­டுத்­தி­னால் பின்­க­ளின் உறு­தித்­தன்மை சிறப்­பாக இருப்­ப­தும் அவை நீடித்­தி­ருக்­கும். பின்­கள் தயா­ரிப்பு முறையை எளி­தாக்க தானி­யங்கி இயந்­தி­ரங்­கள் உள்­ளன. இந்த இயந்­தி­ரங்­கள் இரும்பு வயரை தட்­டை­யாக்கி நிர்­ண­யிக்­கப்­பட்ட நீளத்­தில் பின்­க­ளைத் தயா­ரிக்­கும். ஒரு நிமி­டத்­தில் 350 ஸ்டேபில் பின்­கள் தயா­ரிக்­கக்­கூ­டிய இயந்­தி­ரம் 3.5 லட்ச ரூபாய் ஆகும். தொடங்­கும் போது சிறிய முத­லீட்­டு­டன் ஆரம்­பித்து தொழில் வளர்ச்சி அடைந்­த­வு­டன் இது­போன்ற இயந்­தி­ரங்­களை வாங்கி தொழில் விரி­வாக்­கம் செய்­ய­லாம்.

பேப்­பர் தயா­ரிப்பு : பேப்­பர் தயா­ரிப்பு குறைந்த முத­லீட்­டில் தொடங்­கக்­கூ­டிய வணி­கம். பேப்­பர் பயன்­பாடு இல்­லாத இடங்­களே இல்லை எனும் அள­விற்கு பள்ளி, கல்­லூரி, அலு­வ­ல­கம் என பர­வ­லா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. உல­கம் டிஜிட்­டல்­ ம­ய­மாகி வரும் இன்­றைய கால­கட்­டத்­தி­லும் பேப்­ப­ருக்­கான தேவை குறை­ய­வில்லை. பேப்­பர் தயா­ரிப்­புத் துறை­யில் அதி­க­ள­வில் வாய்ப்பு உள்­ளது. போக்­கு­வ­ரத்­துச் செல­வு­க­ளைக் குறைக்க இவற்­றைத் தயா­ரிப்­ப­தற்­கான சரி­யான இடத்தை தேர்வு செய்­வது அவ­சி­யம். இத­னால் அதிக லாபம் ஈட்­ட­லாம். பேப்­பர் செய்ய தேவை­யான மூலப்­பொ­ருட்­கள் மற்­றும் கட்­டிங் செய்ய தேவை­யான கரு­வி­களை வாங்கி இத்­தொ­ழிலை தொடங்­க­லாம். கி2, கி3, கி4 அளவு பேப்­பர்­களை தானி­யங்கி இயந்­தி­ரங்­கள் மூல­மும் தயா­ரிக்க முடி­யும். இதற்­கான முத­லீடு ரூ.2 லட்­சம் வரை போக­லாம்.

ஆர்­கா­னிக் சோப்பு  : நீங்­கள் சிறி­ய­ள­வில் வணி­கத்­தைத் தொடங்க விரும்­பு­ப­வ­ராக இருந்­தால் ஆர்­கா­னிக் சோப்பு சந்­தை­யில் செயல்­ப­ட­லாம். இன்று மில்­லி­யன் கணக்­கா­னோர் ஆர்­கா­னிக் சோப்பு பயன்­ப­டுத்­து­வ­தால் இதன் தேவை அதி­க­ரித்­துள்­ளது. மூலிகை சோப்பு வணி­கம் துவங்க திட்­ட­மிட்­டால் கிளி­ச­ரின், மூலிகை, நறு­மண எண்­ணெய், அச்சு, மைக்­ரோ­வேவ் அவன் போன்ற முக்­கி­யப் பொருட்­க­ளைக் கொண்டு தயா­ரிப்­பைத் தொடங்­க­லாம். சிறி­ய­ள­வில் செயல்­ப­டும் பட்­சத்­தில் இதற்­கென பிரத்­யேக இடத்­தைத் தேடா­மல் வீட்­டி­லேயே தயா­ரிக்­க­லாம். சோப்பு தயா­ரிப்பு செயல்­மு­றை­யைக் கற்­றுக்­கொள்ள விரும்­பி­னால் அரசு வழங்­கும் பல்­வேறு பயிற்­சி­கள் மூலம் பல­டை­ய­லாம். ரூ.50 ஆயி­ரம் முத­லீட்­டில் வீட்­டில் சிறிய அள­வில் சோப்பு தயா­ரித்து அதனை நன்கு வர்த்­த­கம் செய்­யத் தொடங்­கி­ய­வு­டன், தொழிலை விரி­வாக்­கம் செய்ய ரூ.1.5 முத­லீடு செய்­தால் சோப்பு உற்­பத்­தியை பெருக்க முடி­யும், அதன் மூலம் அதிக லாப­மும் அடை­ய­லாம்.

தேங்­காய் எண்­ணெய்  : இன்று மக்­க­ளி­டையே அதிக விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டி­ருக்­கும் கார­ணத்­தால் இயற்­கைப் பொருட்­க­ளைத் தேடி வாங்­கும் மன­நி­லை­யில் உள்­ள­னர். ஆரோக்­கி­யம் மற்­றும் அழ­குப் பிரி­வைப் பொறுத்­த­வரை தர­மான பொருட்­களை வாங்­கு­வ­தற்­காக அதி­கம் செல­வி­ட­வும் மக்­கள் தயா­ராக உள்­ள­னர். எனவே உள்­ளூர் விவ­சா­யி­க­ளு­டன் கைகோர்த்­துக்­கொண்டு சிறந்த முறை­யில் தேங்­காய் எண்­ணெய் தயா­ரித்து விற்­பனை செய்­ய­லாம். குறைந்­தது 50 ஆயி­ரம் ரூபாய் முத­லீட்­டில் ஒரு சிறிய இடத்­தில் நீங்­கள் தேங்­காய் எண்­ணெய் உற்­பத்­தியை தொடங்­க­லாம். இதற்கு அரு­கா­மை­யி­லுள்ள தென்னை விவ­சா­யி­க­ளு­டன்

கைக்­கோர்த்­தால் தொழில் பெருக நல்ல வாய்ப்பு உள்­ளது.

ஸ்மார்ட்­போன்  : டெம்­பர்ட் கிளாஸ் இந்­தி­யா­வில் ஸ்மார்ட்­போன் சந்தை வளர்ச்­சி­ய­டைந்து வரு­கி­றது. இந்­திய சந்­தை­யில் 2019ம் ஆண்­டின் முதல் காலாண்­டில் 32 மில்­லி­யன் யூனிட்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ள­தாக இண்­டர்­நே­ஷ­னல் டேட்டா கார்ப்­ப­ரே­ஷன் தெரி­விக்­கி­றது. ஸ்மார்ட்­போன் விற்­பனை அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் டெம்­பர்ட் கிளாஸ் தேவை­யும் அதி­க­ரித்து வரு­கி­றது. இவை உயர் வெப்­ப­நி­லை­யில் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. கிளாஸ் வெப்­ப­மூட்­டப்­பட்டு விரை­வாக குளி­ரூட்­டப்­ப­டு­கி­றது. டெம்­பர்ட் கிளாஸ் கடி­னத்­தன்­மை­யும் உடை­யும்­தன்­மை­யும் பரி­சோ­திக்­கப்­ப­டும். டெம்­பர்ட் கிளாஸ் ஸ்மார்ட்­போன் திரை­யு­டன் ஒட்­டிக்­கொள்ள உத­வும் பசை டெம்­பர்ட் கிளாஸ் தயா­ரிப்­பில் முக்­கிய மூலப்­பொ­ருள் ஆகும். சாதா­ரண வகை டெம்­பர்ட் கிளாஸ் தயா­ரிக்­கும் மெஷின் 50ஆயி­ரம் முதல் 1லட்ச ரூபாய் வரை ஆகும். அதில் முத­லீடு செய்து இத்­தொ­ழிலை தொடங்கி டெம்­பர்ட் கிளாஸ் தயா­ரித்து, அரு­காமை போன் கடை­கள் மூல­மும், ஆன்­லை­னி­லும் விற்­பனை செய்து லாபம் ஈட்­ட­லாம்.

என்­வெ­லப் மற்­றும் பைல்ஸ்  : தக­வல் தொடர்பு டிஜிட்­டல்­ம­ய­மா­ன­போ­தும் பேப்­பர் என்­வெ­லப்­கள் மற்­றும்

பைல்­க­ளுக்­கான தேவை இன்­ற­ள­வும் அதி­கம் காணப்­ப­டு­கி­றது. பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள், கார்ப்­ப­ரேட்­கள் போன்ற அனைத்து இடங்­க­ளில் இவற்­றிற்­கான தேவை உள்­ளது. மேப்­லித்தோ பேப்­பர், ஸ்கிராப் பேப்­பர் என வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவையை கருத்­தில் கொண்டு வெவ்­வேறு வகை­யான பேப்­பர்­களை பயன்­ப­டுத்­த­லாம். இதற்­குத் தேவை­யான பசையை சந்­தை­யில் வாங்­கிக்­கொள்­ள­லாம். என்­வெ­லப் தயா­ரிப்­ப­தற்­கான இயந்­தி­ரங்­க­ளை­யும் வாங்­கிக் கொள்­ள­லாம். இந்த இயந்­தி­ரங்­கள் பேப்­பரை குறிப்­பிட்ட அள­விற்கு கட் செய்­து­வி­டும். இதில் பசை­யைத் தட­வி­ய­தும் என்­வெ­லப்பை உல­ர­வைத்து பேக் செய்­து­வி­ட­லாம். இந்த தயா­ரிப்பை டிபார்ட்­மெண்ட் ஸ்டோர்ஸ், சூப்­பர் மார்­கெட் போன்ற இடங்­க­ளிலோ அல்­லது நேர­டி­யாக பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள் மற்­றும் கார்ப்­ப­ரேட் அலு­வ­ல­கங்­க­ளிலோ விற்­பனை செய்­ய­லாம். என்­வெ­லப் தயா­ரிக்­கும் இயந்­தி­ரம் ரூ.ஒரு லட்­சம் முதல் சந்­தை­யில் உள்­ளது.

பேப்­பர் பைகள்  :  மக்­காத பிளாஸ்­டிக் பைகள் சுற்­றுச் சூழ­லுக்கு ஏற்­ப­டுத்­தும் பாதிப்பை மக்­கள் உண­ரத் தொடங்­கி­யுள்­ள­னர். இத­னால் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த பைகள் மக்­க­ளி­டையே நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. ஷாப்­பிங் பொருட்­கள், உண­வுப் பொருட்­கள், மருந்­துப் பொருட்­கள், ஆப­ர­ணங்­கள் போன்­ற­வற்­றைப் பேக் செய்ய பேப்­பர் பைகள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. பேப்­பர் பைகள் தயா­ரிப்­பைக் குறைந்த முத­லீட்­டில் தொடங்­க­லாம். இதற்கு பேப்­பர் ஷீட், இங்க், அச்­ச­டிக்­கத் தேவைப்­ப­டும் ரசா­ய­னங்­கள், டேக் போன்ற மூலப்­பொ­ருட்­கள் தேவைப்­ப­டும். ஆரம்­பத்­தில் கைக­ளால் பேப்­பர் பைகள் செய்து விற்­பனை செய்­யுங்­கள். கொஞ்­சம் லாபம் கிடைக்­கத்­தொ­டங்­கிய உடன், ஆட்­டோ­மே­டிக் அல்­லது செமி ஆட்­டோ­மே­டிக் இயந்­தி­ரங்­கள் உள்­ளன. அதை வாங்கி அதிக அளவு பேப்­பர் பைகள் செய்து சந்­தை­யில் விற்­றால் அமோக லாபம் கிடைக்­கும்.