சென்ற வார தொடர்ச்சி...
எந்த ராசிக்காரர்கள் ஜாதகப்படி பிராணிகள் வளர்ப்பார்கள்?
பொதுவாக 12 ராசிகளின் உருவத்திலேயே மேஷத்திற்கு ஆடு, ரிஷபத்திற்கு மாடு, விருச்சிகத்திற்கு தேள், மீன ராசிக்கு மீன், கடக ராசிக்கு நண்டு, சிம்ம ராசிக்கு சிங்கம் அதேபோன்று நட்சத்திரங்களிலும் அதற்குண்டான மிருகம் இருக்கும்.
உதாரணமாக
குதிரை = அஸ்வினி, சதயம்
யானை = பரணி, ரேவதி
ஆடு = கார்த்திகை, பூசம்
நாகம் = ரோகிணி, மிருகசீரிடம்
நாய் = திருவாதிரை, மூலம்
பூனை = புனர்பூசம், ஆயில்யம்
எலி = மகம், பூரம்
பசு = உத்திரம், உத்திரட்டாதி
எருமை = அஸ்தம், ஸ்வாதி
புலி = சித்திரை, விசாகம்
மான் = அனுஷம், கேட்டை
குரங்கு = பூராடம், திருவோணம்
கீரி = உத்ராடம்
சிங்கம் = அவிட்டம், பூரட்டாதி
உதாரணமாக
நட்சத்திரம் பறவை
அஸ்வினி ராஜாளி
பரணி காகம்
கிருத்திகை மயில்
ரோகிணி ஆந்தை
மிருகசீரிடம் கோழி
திருவாதிரை அன்றில்
புனர்பூசம் அன்னம்
பூசம் நீர்க்காகம்
ஆயில்யம் கிக்கிலி
மகம் ஆண் கழுகு
பூரம் பெண் கழுகு
உத்திரம் கிளுவை
அஸ்தம் பருந்து
சித்திரை மரங்கு
ஸ்வாதி தேனீ
விசாகம் செங்குருவி
அனுஷம் வானம்பாடி
கேட்டை சக்ரவானம்
மூலம் செம்பருந்து
பூராடம் கவுதாரி
உத்ராடம் வலியன்
திருவோணம் நாரை
அவிட்டம் பொன்வண்டு
சதயம் அண்டங்காக்கை
பூரட்டாதி உள்ளான்
உத்ரட்டாதி கோட்டான்
ரேவதி வல்லூறு
இவ்வாறு ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் இந்த மிருகங்கள் மற்றும் பறவைகளின் தொடர்பை நாம் காண இயலும். அதற்கேற்ப அவர்களின் குணங்களும் வெளிப்படும். பொதுவாக எல்லா ராசி, நட்சத்திரக்காரர்களும் வளர்ப்பார்கள்.
ஆன்மிகத்திலும் வாயில்லா உயிரினங்கள் சம்பந்தப் படுகிறதா எப்படி?
அதேபோன்று ஆன்மிகத்தை எடுத்துக் கொண்
டாலும் ஒவ்வொரு சாமிக்கும் வாயில்லா உயிரினங்
களை வைத்து வழிபட்டுள்ளனர் நம் முன்னோர். உதாரணமாக முருகனுக்கு சேவல் மயில் வாகனமாகவும், கணபதிக்கு மூஞ்செலி வாகனமாகவும், சிவனுக்கு பசுமாடு வாகனமாகவும், ஐயப்பனுக்கு புலி வாகனமாகவும், குரு பகவானுக்கு யானை வாகனமாகவும், சனி பகவானுக்கு காகம் வாகனமாகவும், பைரவருக்கு நாய் வாகனமாகவும், அம்மனுக்கு சிங்கமென்றும், மகா விஷ்ணுவுக்கு அவர் படுக்கும் படுக்கையே ஐந்து தலை பாம்பின் மீது படுத்துள்ளார். எமனுக்கு எருமை வாகனமாகவும், குறிப்பிட்டுள்ளனர் நம் முன்னோர்.
ஆகவே, ஆன்மிகத்திலும் உயிரினங்களை வைத்து வழிபட்டுள்ளனர். அப்படியிருக்கையில் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என சொல்லலாம். அது மட்டு மன்றி ஏன் இவையெல்லாம் இப்படி குறிப்பிட்டு வைத்துள்ளனர். – தொடரும்