செயற்கை வைரத்திற்கு மவுசு!

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020

ஆழமான சுரங்கங்களிலிருந்து தோண்டி எடுக்கப்படும் இயற்கை வைரத்திற்கு மதிப்பு குறையவில்லை. என்றாலும், சுரங்கத் தொழிலில் இருக்கும் அநீதியால், மனசாட்சியுள்ள நுகர்வோர் அந்த வைரங்களை வாங்க தயக்கம் காட்டு கின்றனர். இதற்கு மாற்றாக, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்படும் செயற்கை வைரத்தை வைத்தே இனிமேல் நகைகள் செய்வது என்று கிளம்பியிருக்கிறது, பாரீசிலுள்ள கோர்பெட் என்ற வைர நகை வடிவமைப்பு நிறுவனம்.

செயற்கை வைரம் முழுவதும் ஆய்வகத்தில் உருவாக்கப்படுவது.இதற்கு, இயற்கை வைரத்திற்கு உள்ள அத்தனை தன்மைகளும் இருப்பதால், சுரங்க வைரத்தை வாங்கத் தயங்கு வோர், இதை விரும்பி வாங்கத் துவங்கியுள்ளனர். எனவே, தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்த வைரத்திற்கு இனி மவுசு கூடும் என, கோர்பெட் வைர வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.