நல்ல தீர்ப்பு!

பதிவு செய்த நாள் : 20 மார்ச் 2020

ஜம­னா­மத்­துார் காட்­டில், வேட்டை துப்­பாக்கி, மரம் வெட்­டும் வாளு­டன், சிறிய லாரி­யில் நுழைந்­தது கும்­பல்.

மரத்­தில் தாவி விளை­யா­டிய குரங்கு, காட்டை அழிக்க வந்து விட்­டதை உணர்ந்து, 'க்ரீச்... க்ரீச்...' என கத்­தி­யது.

இதை கவ­னித்த காகம், 'ஏன்... இப்­படி பர­ப­ரப்பா இருக்க...' என்­றது.

குரங்கு விஷ­யத்தை கூறி­ய­தும், 'வா... நண்­பர்­களை திரட்டி, கும்­ப­லைத் துரத்­த­லாம்...' என்­றது காகம்.

அதன்­படி, பற­வை­கள் நாலா திசை­யி­லும் பறந்து, விலங்­கு­களை அழைத்து வந்­தன. குகை­யில், சிங்­க­ராஜா தலை­மை­யில் அவ­சர ஆலோ­சனை நடந்­தது.

'எல்­லா­ரும் ஒரு சேர தாக்­கினா, பயந்து ஓடி­டு­வாங்க...' என்­றது சிங்­கம்.

குரங்கு வழி­காட்ட, விலங்­கு­கள் எல்­லாம் அணி வகுத்­தன. இதைக் கண்­ட­தும் துப்­பாக்­கி­யால் சுட துவங்­கி­யது கும்­பல்; விலங்­கு­கள் பயந்து, சிதறி ஓட துவங்­கின.

இச்­ச­ம­யத்­தில், எதிர்­பா­ராத சம்­ப­வம் நடந்­தது.

மரத்­தில் கூட­மைத்­தி­ருந்த தேனீ கூட்­டம், கோபத்­து­டன், 'காட்­டையா அழிக்­கப் பார்க்­கு­றீங்க... விடு­வோமா...' என்று கூறி, கொட்டி பதம் பார்த்­தன.

மரம் வெட்ட வந்­த­வர்­கள், 'ஐயோ... அம்மா...' அன்று அலறி துடித்து ஓடி­னர். இதை கவ­னித்து, தக­வலை பரப்­பி­யது குரங்கு.

விலங்­கு­கள் கூடின. மரம் வெட்­டும் கும்­ப­லில் இருந்த, நான்கு பேரை­யும் சிறை­பி­டித்து, இருட்­டுக் குகைக்கு கொண்டு சென்­றன.

சபை­யில் வீற்­றி­ருந்த சிங்­கம், 'எங்­கள மாதிரி, விலங்­கு­கள் எப்­ப­வா­வது வழி தவறி, நாட்­டுக்­குள் வந்தா, சுட்­டுக் கொன்­னு­டு­றீங்க... இப்போ, அமை­தி­யான காட்டை அழிக்­கப் பாக்­கு­றீங்க... உங்க வீட்டை அழிச்சா சும்­மா­யி­ருப்­பீங்­களா...' என்­றது.

மரம் வெட்ட வந்­த­வர்­கள், மன்­னிப்பு கேட்டு கெஞ்­சி­னர். கம்­பீ­ரத்­து­டன் நிமிர்ந்த சிங்­கம், ' காட்­டுக்கு வழி தவறி வந்­த­வங்­கள நாங்க ஒண்­ணும் செய்­வ­தில்ல. ஆனா, காட்டை அழிக்க வந்­த­வங்­களை மன்­னிக்க முடி­யாது...' என்­றது.

அவர்­க­ளுக்கு தண்­டனை கொடுப்­பது பற்றி விலங்­கு­கள் ஆலோ­சித்­தன. அப்­போது குரங்கு, 'குகைக்­குப் பின்­னால் நிறைய வெற்­றி­டம் இருக்கு; அங்கே மரக்­கன்­று­களை நட்டு, காட்டை உரு­வாக்­கும் வேலைக்கு இவங்­கள பயன்­ப­டுத்­த­லாம். மரங்­களை வெட்ட வந்­த­துக்கு சரி­யான தண்­ட­னையா இருக்­கும்...' என்­றது.

விலங்­கு­கள் ஆமோ­தித்­தன. மனி­தர்­கள் குழி­களை தோண்­டி­னர். பற­வை­கள் எடுத்து வந்த விதை­களை போட்டு மூடி­னர். நீர் நிலை­யி­லி­ருந்து, தண்­ணீரை எடுத்து ஊற்­றி­னர். இப்­ப­டி­யாக, பல ஆயி­ரம் விதை­களை விதைத்­த­னர்; மரக்­கன்­று­களை நட்­ட­னர். அங்கு அடர்ந்த காடு உரு­வா­னது.

குழந்­தை­களே... உயி­ரி­னங்­க­ளை­யும், இயற்கை செல்­வத்­தை­யும் பாது­காத்­தால் தான் எதிர்­கா­லத்­தில் நல­மாக வாழ முடி­யும்; இயற்­கையை பாது­காப்­போம்.

- – ஆர்.வி.பதி

***