‘மொக்க’ ஜோக்ஸ்!

பதிவு செய்த நாள் : 20 மார்ச் 2020


‘‘முக­நுால்ன்னா தலை­வ­ருக்கு என்­னன்னே தெரி­யலை...’’

‘‘ஏன்...?’’

‘‘காட்­டன், பாலி­யஸ்­டர் மாதிரி புது ரக நுாலான்னு கேட்­கி­றாரு...’’

– பாலு, திசை­யன்­விளை.

‘‘தலை­வர் மாறு­வே­ஷத்­துல எங்க போறாரு...?’’

‘‘உள்­ளாட்சி தேர்­த­லில் ஓட்­டுக்கு பணம் வாங்­க­வாம்...!’’

– பானு, கன்­னி­யா­கு­மரி

‘‘மன்­னர் இந்த குதி­ரை­யி­ல­தான் வழக்­கமா போருக்கு போவாரு...’’

‘‘ஏன் அதிர்ஷ்­ட­முள்­ளதா?’’

‘‘ஒரு கிலோ மீட்­டர் முன்­பா­கவே எதிரி வரு­வதை தெரிந்து திரும்பி ஓடி வந்­து­வி­டும்!’’

– குமார், பொட்­டல் புதுார்.

‘‘மன்­னரை பார்க்க ‘கின்­னஸ் ரெக்­கார்ட்’ குழு வந்­தி­ருக்கு ...’’

‘‘எதுக்கு?’’

‘‘குழி வெட்­டி­னதை கின்­னஸ் சாத­னையா சேர்க்­கப் போறாங்­க­ளாம்...!’’

– குமார், பெரு­மாள்­பு­ரம்.