சுவடி காப்பகங்கள்!

பதிவு செய்த நாள் : 20 மார்ச் 2020

சங்க இலக்­கி­யங்­க­களை எல்­லாம் இன்று நாம் அச்சு வடி­வில் படிக்­கி­றோம். நினைத்த நேரத்­தில் வாங்­க­லாம், வாசித்­துத் தெரிந்து கொள்­ள­லாம். இணை­யத்­தில் இவற்றை இல­வ­ச­மாக அணு­க­வும் வாய்ப்­புண்டு.

இந்த இலக்­கி­யங்­கள் எழுத்­தா­ளர்­க­ளால் அல்­லது பதிப்­பா­ளர்­க­ளால், தனித்­த­னி­யாக எழு­தப்­பட்டு, பின்­னர் தொகுக்­கப்­பட்­டன. அந்­தத் தொகுப்­புப்­ப­ணிக்கு முக்­கிய பங்­காற்­றி­யவை, சுவ­டிக் காப்­ப­கங்­கள்.

'சுவடு' என்ற சொல்­லி­லி­ருந்­து­தான் 'சுவடி' என்ற சொல் வந்­த­தாக எழு­து­கி­றார் தஞ்சை தமிழ்ப் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த ம.சா. அறி­வு­டை­நம்பி. கடற்­க­ரை­யில் நாம் நடந்­து­செல்­லும்­போது, தரை­யில் சுவ­டு­கள் பதி­வ­து­போல, காகி­தத்­தில், ஓலை­யில், செப்­பேட்­டில் சுவடு பதித்து (அடை­யா­ளம் உண்­டாக்கி) எழு­தப்­ப­டு­வ­தால், இவற்­றைச் சுவடி என்­றார்­கள்.

சுவ­டி­க­ளில் இலக்­கி­யம் மட்­டும்­தான் படைக்­கப்­பட்­டது என்று எண்ணி விடக்­கூ­டாது. நாட்­கு­றிப்­பு­கள், பய­ணக்­கு­றிப்­பு­கள், வர­வு-­செ­ல­வுக் கணக்­கு­கள், நில அள­வை­யி­யல் ஆவ­ணங்­கள், கடி­தங்­கள், இன்­னும் பல­வும் எழு­தப்­பட்­டன.

எந்­த­வொரு விஷ­யத்­தை­யும் மனத்­தி­லேயே வைத்­துக்­கொள்­ளா­மல் காகி­தத்­திலோ வேறு­வி­தத்­திலோ அதைப் பதிவு செய்­து­வைக்­கும்­போது, மற்­ற­வர்­கள் அதைக் கற்­பது எளி­தா­கி­றது. அந்த விதத்­தில், சுவ­டி­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட புதி­தில் மக்­கள் இவற்­றைக் கற்­றல் கரு­வி­க­ளா­கப் பயன்­ப­டுத்­தி­னார்­கள். ஏரா­ள­மான சுவ­டி­கள் எழு­தப்­பட்­டன, படி­யெ­டுக்­கப்­பட்­டன.

இந்­தச் சுவ­டி­க­ளை­யெல்­லாம் கவ­னித்­துக் கொண்­டி­ருந்த சிலர் அல்­லது சில அமைப்­பு­கள், இவற்­றைத் தொகுத்து பாது­காத்து வைக்­க­வேண்­டும் என்று உணர்ந்­தார்­கள். நாம் இன்று வாசிக்­கும் பழந்­த­மிழ் இலக்­கி­யங்­கள் பல­வும் இப்­ப­டிச் சேர்க்­கப்­பட்­ட­வை­தான்.

இன்­றைய நூல்­நி­லை­யங்­க­ளை­விட, அன்­றைய சுவ­டிக் காப்­ப­கங்­களை இயக்­கு­வது கடி­ன­மாக இருந்­தி­ருக்­கும். ஏனெ­னில், நூல்­கள் இப்­போது ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்டு எளி­தில் கிடைப்­ப­து­போல், அன்­றைக்­குச் சுவ­டி­கள் கிடைக்­க­வில்லை.

எங்­கெங்கோ தேடிச் சுவ­டி­க­ளைத் திரட்டி, வாசித்­துப் பார்த்து, பொருள் அடிப்­ப­டை­யில் தொகுத்து வைக்­கும் அரிய பணி­யைச் சுவ­டிக் காப்­ப­கங்­கள் செய்­தன.

அரசு நிறு­வ­னங்­கள், கல்வி நிலை­யங்­கள், சமய நிறு­வ­னங்­கள், மற்ற அமைப்­பு­க­ளெல்­லாம் சுவ­டி­க­ளைக் காத்து வந்­தார்­கள். இவை­த­விர, ஆர்­வம் கார­ண­மாக, ஏரா­ள­மான சுவ­டி­க­ளைத் திரட்­டிச் சேர்த்த தனி­ந­பர்­க­ளும் உண்டு. இதற்கு எடுத்­துக்­காட்­டாக, காலின் மெக்­கன்சி லெய்­டன்,

அ.முத்­து­சா­மிப்­பிள்ளை, இரண்­டாம் சர­போஜி, பாண்­டித்­து­ரைத் தேவர், வி. கன­க­சபை பிள்ளை, உ.வே.சா. உள்­ளிட்­ட­வர்­க­ளைக் குறிப்­பி­டு­கி­றார் ம.சா. அறி­வு­டை­நம்பி.

இப்­ப­டிச் சேக­ரிக்­கப்­பட்ட சுவ­டி­க­ளில் பல­வும் நூல்­க­ளாக அச்­சி­டப்­பட்­டுள்­ளன. இணை­யத்­தி­லும் தொகுக்­கப்­பட்­டுள்­ளன. அறி­ஞர்­கள் பலர் இவற்­றுக்கு உரை­யெ­ழுதி வெளி­யிட்­டுள்­ளார்­கள். இதன்­மூ­லம், இன்­னும் பலர் அவற்றை அணு­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அதே­ச­ம­யம், இன்­னும் சுவ­டி­க­ளில் மட்­டுமே இருக்­கிற, பொது வெளிச்­சத்­துக்கு வராத விஷ­யங்­க­ளும் ஏரா­ளம். அவற்­றில் என்­னென்ன உண்­மை­கள், நன்­னெ­றி­கள், வர­லாற்று, சமூ­க­வி­யல் செய்­தி­கள் உள்­ள­னவோ!

நம்­மு­டைய வர­லாற்­றைப் பதி­வு­செய்­த­தி­லும் இலக்­கி­யச் செழு­மையை உணர்த்­தி­ய­தி­லும் சுவ­டிக் காப்­ப­கங்­க­ளு­டைய பங்கு முக்­கி­ய­மா­னது. அந்த நிறு­வ­னங்­கள், தனி­ந­பர்­க­ளு­டைய சேவை வணக்­கத்­துக்­கு­ரி­யது!

–- என். சொக்­கன்