பரிசில் பெற்றுத்தந்த உவமை!

பதிவு செய்த நாள் : 20 மார்ச் 2020

சத்­தி­முற்­றப் புல­வர் என்று ஒரு­வர் இருந்­தார். அவ­ரைச் சத்­தி­முத்­தப்­பு­ல­வர் என்­றும் கூறு­வார்­கள். சோழ­நாட்­டி­லுள்ள இன்­றைய பட்­டீ­சு­வ­ரத்­தின் ஒரு பகு­தியே அன்று சத்­தி­முற்­றம் எனப்­பட்­டது. அக்­கா­லத்­தில் வாழ்ந்த புல­வர்­களை, ஊர்­பெ­ய­ரால் அழைப்­பது வழக்­கா­கும்.

அன்­றி­ருந்த பாண்­டிய மன்­னர், தமிழ்­பா­டும் புல­வர்­க­ளுக்கு பரி­சில் வழங்­கு­கி­றார் என்­ப­தைக் கேள்­வி­யுற்ற சத்­தி­முத்­தப் புல­வர் மது­ரைக்­குச் சென்­றார். மன்­ன­ரின் அரண்­ம­னையை நெருங்கி வாயிற்­கா­வ­லனை அணு­கு­கி­றார். வேந்­த­னைக் கண்டு பாடி பரி­சில் பெற்­றுச் செல்­லும் தம் விருப்­பத்­தைத் தெரி­விக்­கி­றார். சோழ நாட்­டி­லி­ருந்து ஒரு புல­வர் வந்­தி­ருக்­கி­றார் என்­ப­தைப் பாண்டி நாட்­டுப் புல­வர்­கள் விரும்­ப­வில்லை. வாயிற்­கா­வ­ல­னுக்­குச் சொல்­லிக்­கொ­டுத்து, அரண்­ம­னைக்­குள் அவரை நுழைய விடாதே என்று கேட்­டுக்­கொண்­ட­னர். வாயிற்­கா­வ­ல­னும் அதற்­கி­சைந்து சத்­தி­முற்­றப் புல­வரை மனைக்­குள் விட­வில்லை. தம் வறு­மை­யைப் போக்­கு­வ­தற்­குப் பரி­சில் பெற்­றுச் செல்ல வந்த சத்­தி­முற்­றத்­தார்க்கு, ஏமாற்­றம் தாள­வில்லை. வரு­வோர்க்கு வழங்­கும் வள்­ளல் என்று கேள்­வி­யுற்று வந்­தால் இங்கே வழி­வி­டு­வார் இல்லை. அயர்ச்­சி­யோ­டும் துய­ரத்­தோ­டும், மதுரை நக­ரத்­தின் மண்­ட­பம் ஒன்­றில் களைத்­துப் படுத்­து­விட்­டார்.

வழக்­கம்­போல் பாண்­டிய மன்­னர் நகர்­வ­லம் வரு­கின்ற வேளை அது. அந்­நே­ரத்­தில் நாரைக்­கூட்­ட­மொன்று வடக்கு நோக்­கிப் பறந்­தது. நாரை­யின் அல­குக்கு எதனை உவமை சொல்­ல­லாம் என்று மன்­ன­ரு­டைய எண்­ணம் சென்­றது. அந்த நாரைக்­கூட்­டத்­தைப் பசி­யோடு படுத்­தி­ருந்த சத்­தி­முற்­றப்­பு­ல­வ­ரும் பார்த்­தார். தெற்­கி­ருந்து வடக்கு நோக்­கிச் செல்­லும் நாரை­யைப் பார்த்­த­தும் வீட்டு நினைவு வந்­து­விட்­டது. வடக்­கே­தான் அவ­ரு­டைய ஊரான சத்­தி­முற்­றம் இருக்­கி­றது. அந்­நா­ரை­கள் வடக்கே சென்று சத்­தி­முற்­றத்­தா­ரின் மனை­வி­யைப் பார்க்­கக்­கூ­டும். அத­னால் தூது­வி­டு­வ­து­போல் ஒரு பாட­லைப் பாடு­கி­றார்.

'நாராய் நாராய் செங்­கால் நாராய்

பழம்­படு பனை­யின் கிழங்கு பிளந்­தன்ன

பவ­ளக்­கூர் வாய்ச் செங்­கால் நாராய்'

என்று தொடங்­கு­கி­றார். அதில் 'நாரை­களே, நீங்­கள் போய் என் வீட்­டின் பொத்­த­லான கூரை மீது அமர்ந்து, அங்கே எனக்­கா­கக் காத்­தி­ருக்­கும் மனை­வி­யைப் பாருங்­கள் நான் இங்கு குளி­ருக்கு ஆடை­யின்றி படுத்­தி­ருக்­கும் அவ­லத்­தைக் கூறுங்­கள் 'என்று பாடு­கி­றார். 'பனங்­கி­ழங்கு பிளந்­த­து­போன்ற பவ­ளச் சிவப்­பு­டைய கூர்­மை­யான அல­கு­டைய நாரை­களே ' என்று நாரை­யின் அல­கிற்கு, பனங்­கி­ழங்­கின் நிறத்தை ஒப்­பி­டு­கி­றார்.

பாண்­டி­ய­னின் செவி­க­ளில் சத்­தி­முற்­றப் புல­வ­ரின் பாடல், தெள்­ள­மு­தாய் வந்து விழு­கி­றது. புல­வரை அணுகி வணங்கி அறி­கி­றார். நடந்த தவ­றுக்கு வருந்தி அவரை அரண்­ம­னைக்கு அழைத்­துச் சென்று பரி­சில் தந்து மகிழ்­வித்­தார். புல­வ­ரின் வீட்­டி­னைப் பழு­து­பார்த்­துக் கட்­டித் தந்­தார். தமி­ழாற்­றல் வாய்ந்த புல­வ­ரின் ஒற்றை உவமை, அரண்­மனை வாயிற்­க­த­வைத் திறக்­கச் செய்து, மன்­ன­ரின் மனத்தை அசைத்­துப் பார்த்­து­விட்­டது. அது­தான் தமி­ழின் ஆற்­றல் !

– மகு­டே­சு­வ­ரன்