சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 16–3–2020

பதிவு செய்த நாள் : 16 மார்ச் 2020

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

தின­ம­லர் அன்றே சொன்­னது…. தின­ம­லர் தீர்க்­க­த­ரி­ச­ன­மாக கடந்த 5 வாரங்­க­ளாக சொல்லி வந்­தி­ருக்­கி­றது நீங்­கள் பங்­குச் சந்­தை­யில் பங்­கு­களை விற்க இது சரி­யான சந்­தர்ப்­பம் என்று. அப்­படி விற்று இருந்­தால் கடந்த ஐந்து மாத­மாக சந்­தை­க­ளின் ஏற்­றத்­தில் இருந்த லாபத்தை நீங்­கள் பெற்­றி­ருக்­க­லாம். விற்று லாபம் பார்த்­தீர்­களா?

ஏன் சந்­தை­கள் குறை­கி­றது?

சிறிய முத­லீட்­டா­ளர்­கள் விற்­ப­தில் சந்­தை­கள் பெரு­ம­ளவு குறைந்து விடாது. சந்­தை­க­ளின் ஏற்ற இறக்­கத்­தில் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளு­கக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. இந்­தி­யப் பங்­குச்­சந்­தை­க­ளில் பெரு­ம­ளவு முத­லீடு செய்­யும் அயல்­நாட்டு ஃபோர்ட்­போ­லியோ முத­லீட்­டா­ளர்­கள் மார்ச் மாத துவக்­கத்­தில் மட்­டும் ரூ.34,000 கோடி வரை விற்­றி­ருக்­கி­றார்­கள். எம்.பி.ஐ. (பாரின் போர்ட்­போ­லியோ இன்­வஸ்­டர்­கள்) இந்த மாதத்­தில் 11061 கோடி ரூபாய்க்கு விற்­றி­ருக்­கி­றார்­கள். இது சந்­தை­களை மிக­வும் கீழே இறங்க வழி வகுத்­தது.

இந்த வார சரி­வு­கள்

திங்­க­ளன்று யெஸ் பாங்கை வைத்து சந்­தை­க­ளில் ஒரு பெரிய சரிவு ஏற்­பட்­டது. அதே வாரத்­தில் வியா­ழக்­கி­ழ­மை­யன்று சென்­செக்ஸ் 2,919 புள்­ளி­க­ளை­யும் நிப்டி 900 புள்­ளி­க­ளை­யும் இழந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. பல­ரின் பல மாத ஏன் வருட லாபத்­தை­யும் அப­க­ரித்து சென்­றது. சுனாமி போல ஒரே வாரத்­தில் பல­ரின் லாபங்­கள் காண­மல் போயி­ருக்­கும். ஏன் முத­லீ­டுக்கே மோச­மா­க­வும் போயி­ருக்­கும்.

வெள்­ளி­யன்று வர்த்­த­கம் தொடங்கி சிறிது நேரத்­தி­லேயே சென்­செக்ஸ் 3 ஆயி­ரம் புள்­ள­கி­ளுக்­கும் மேல் சரிந்­தது. இத­னால் வர்த்­த­கம் 45 நிமி­டங்­கள் வரை நிறுத்தி வைக்­கப்­பட்­டது. ஒரே­நா­ளில் சென்­செக்ஸ் 10 சத­வீ­தம் வீழ்ச்சி அடைந்­தது. பின்­னர் மும்பை பங்­குச் சந்தை அன்­றைய தினமே 1325 புள்­ளி­கள் ஏறி­யது ஒரு சரித்­திர சாதனை தான்.

இந்த வார சரி­வு­கள் வியா­ழ­னா­கட்­டும் அல்­லது வெள்­ளி­யா­கட்­டும் இந்­திய பங்­குச் சந்தை வர­லாற்­றில் இல்­லாத சரி­வு­க­ளாக இருந்­தன. கொரோனா வைர­ஸால் பங்­குச் சந்தை வர­லாறே மாற்றி எழு­தப்­பட்­டி­ருக்­கி­றது. அது போல வெள்­ளி­யன்று ஏற்­பட்ட இறக்­க­மும், மறு­படி எழுந்த எழுச்­சி­யும் பங்­குச் சந்தை வர­லாற்­றில் இல்­லா­தது ஆகும்.

வெள்­ளி­யன்று யார் வாங்­கி­னார்­கள்?

இந்­திய மியூச்­சு­வல் பண்­டு­கள், சிறிய முத­லீட்­டா­ளர்­கள் 3000 புள்­ளி­கள் காலை­யில் குறைந்­தும் இது தான் சரி­யான சந்­தர்ப்­பம் என்று வாங்க ஆரம்­பித்­த­னர்.  பின்­னர் அன்­றைய தினம் 1325 புள்­ளி­கள் மேலே சென்­றது.

காலை­யில் 3000 புள்­ளி­கள் குறை­யும் போது வாங்க ஆரம்­பித்­த­வர்­கள் எல்­லாம் ஒரே நாளில் சுமார் 10 சத­வீ­தம் வரை லாபம் பார்த்­தார்­கள்.

உல­க­ள­வில் என்ன நடக்­கி­றது?

கோவிட்-19 என்று பெய­ரி­டப்­பட்ட சீனா­வில் தோன்­றிய கொரோனா வைரஸ் உல­கம் முழு­தும் பெரும் பங்­குச் சந்­தை­களை முடக்­கிப் போட்டு வரு­கி­றது.

பல நாடு­கள் தங்­கள் நாட்­டிற்­குள் வெளி­நா­டு­க­ளில் இருந்து மக்­கள்  வரு­வ­தற்கு தடை விதித்­துள்­ள­னர். இந்த தடை­யால் பெரு­ம­ளவு தொழில் தேக்­க­ம­டைந்து பொரு­ளா­தார பாதிப்பு ஏற்­ப­டும் ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.  இத­னால் உல­கம் முழு­வ­தும் பங்­குச்­சந்­தை­கள் கடும் சரி­வு­களை சந்­தித்து வரு­கின்­றன.

சந்­தை­யில் பங்­கு­களை இப்­போது வாங்­க­லாமா?

இன்­னும் வைரஸ் பிரச்­சனை உல­க­ளைல் தீர­வில்லை. கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் இன்­னும் பல நாடு­க­ளில் வைரஸ் பெருக்­கம் கூடிக் கொண்டே தான் செல்­கி­றது. இது ஒரு கவ­லைக்­கு­றிய விஷ­யம். இத­னால் பங்­குச் சந்­தை­யில் முத­லீடு செய்ய நினைக்­கி­ற­வர்­கள் சிறிது சிறி­தாக முத­லீடு செய்­ய­வும். பெரிய அள­வில் செய்ய வேண்­டாம்.

யெஸ் பாங்க்

யெஸ் பாங்­கில் விதிக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுப்­பா­டு­கள் வரும் 18ம் தேதி நீக்­கப்­ப­டும். இந்த வங்­கி­யில் எஸ்­பிஐ தலை­மை­யில் பல வங்­கி­க­ளும், தனிப்­பட்ட இன்­வஸ்­டர்­க­ளும் சேர்ந்து முத­லீடு செய்­துள்­ள­னர். பங்­கு­களை தற்­போது வாங்­க­லாமா என்­றால், அப்­படி வாங்­கி­னால் மூன்று வரு­டம் வரை விற்க முடி­யாது என்ற ஒரு கட்­டுப்­பாடு இருக்­க­லாம். அப்­படி மூன்று வரு­டம் வரை வைத்­தி­ருக்க விரும்­பு­ப­வர்­கள் வாங்­க­லாம்.

எஸ்­பிஐ கார்ட்ஸ்

எஸ்­பிஐ கார்ட்ஸ் நல்ல ஒரு லிஸ்­டிங்கை பார்த்­தி­ருக்க வேண்­டி­யது. முத­லீட்­டா­ளர்­க­ளும் நல்ல ஒரு லாபத்தை பார்த்­தி­ருக்க வேண்­டிய நேரத்­தில் வைரஸ் சந்­தை­க­ளை­யும், வெளி­மார்க்­கெட்­டில் அந்த பங்­கிற்கு இருந்த பிரி­மி­யத்­தை­யும் காணா­மல் போகச் செய்து விட்­டது. திங்­க­ளன்று லிஸ்ட் ஆகும் போது அலாட்­மெண்ட் விலைக்கு கீழே லிஸ்ட ஆனா­லும் ஆக­லாம். ஆனால் 6 மாதத்­தில் சந்­தை­க­ளில் மேலே வரக்­கூ­டிய பங்­கா­கும் இது.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

சந்­தை­கள் இன்­னும் ஒரு குழப்ப நிலை­யி­லேயே தான் இருக்­கின்­றன. முத­லீடு என்­பது சிறிது சிறி­தாக இருக்­கட்­டும். இந்­திய மியூச்­சு­வல் பண்­டு­கள் அதி­க­ளவு உபரி பணம் வைத்­தி­ருக்­கின்­றன. ஆத­லால் ஒவ்­வொரு சரி­வி­லும் மறு­படி உள்ளே வரு­வார்­கள்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com