ஏற்றுமதி உலகம்: சீனாவும், வர்த்தக வாய்ப்புகளும்!

பதிவு செய்த நாள் : 16 மார்ச் 2020

உலக அள­வில் இந்­திய செய்­யும் ஏற்­று­ம­தியை வைத்­துப் பார்க்­கும்­போது, நான் சீனா­விற்கு செய்­யும் ஏற்­று­மதி மூன்­றா­மி­டத்­தில் வரு­கி­றது.

கடந்த 2019 ஆம் வரு­டம் டிசம்­பர் மாதம் 1650 மில்­லி­யன் டாலர்­கள் (ரூபாய் 11550 கோடி) அள­விற்கு நாம் சீனா­விற்கு ஏற்­று­மதி செய்து இருக்­கி­றோம். 2020 ஆம் வரு­டம் ஜன­வ­ரி­யில் 1510 ஒரு மில்­லி­யன் டாலர் (ரூபாய் 10570 கோடி) ஆக­வும், பிப்­ர­வ­ரி­யில் 1540 மில்­லி­யன் டால­ரா­க­வும்  (ரூபாய் 10780 கோடி) இருக்­கி­றது.  கொரோனா வைர­ஸிற்கு பிறகு இந்­தி­யா­வின் சீனா ஏற்­று­மதி சிறிது குறைந்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தி­யா­வின் மொத்த ஏற்­று­ம­தி­யில் 5.1% மட்­டுமே சீனா­விற்கு ஏற்­று­மதி ஆகி­றது. இது வரு­டத்­திற்கு 16 பில்­லி­யன் டால­ராக (ரூபாய் 112,000 கோடி­கள்)  இருக்­கி­றது.

இந்­தி­யா­வில் இருந்து சீனா­விற்கு அதி­கம் ஏற்­று­மதி ஆகும் பொருள்­கள் என்று எடுத்­துக்­கொண்­டால் காட்­டன், இரும்­புத்­தாது, மின­ரல், காப்­பர், சல்­பர், மெஷி­னரி, மெக்­கா­னிக்­கல் அப்­ளை­யன்ஸ்,  ஆர்­கா­னிக் கெமிக்­கல், எலக்ட்­ரிக்­கல்  எக்­யூப்­மெண்ட்ஸ் ஆகி­யவை ஆகும்.

இந்­தி­யா­வி­லி­ருந்து அதி­க­மாக வேறு நாடு­க­ளுக்கு ஏற்­று­ம­தி­யா­கும் பொருள்­களை எடுத்­துக் கொண்­டால் அந்த பொருட்­கள் சீனா­விற்கு அதி­கம் ஏற்­று­மதி ஆவது இல்லை என்­ப­து­தான் உண்மை. அந்­தப் பொருட்­க­ளைத் சீனா­விற்கு 82 பில்­லி­யன் டாலர் (ரூபாய் 574,000 கோடி) அள­விற்கு இறக்­கு­மதி செய்­கி­றது.  ஆனால் இந்­தப் பொருட்­களை இந்­தியா 3.3 சத­வீ­தம் அதா­வது 2.7 பில்­லி­யன் டாலர் (ரூபாய் 18,900 கோடி) அள­விற்கு தான் சீனா­விற்கு ஏற்­று­மதி செய்­கி­றது.  இத­னால் இந்த பொருட்­களை 15 பில்­லி­யன் டாலர் அள­விற்கு (ரூபாய் 105,000 கோடி)  ஏற்­று­மதி செய்ய வாய்ப்­பு­கள் இருக்­கி­றது.  இது நமக்கு உள்ள ஒரு பெரிய வாய்ப்­பா­கும்.

கொரோனா  வைரஸ், சீனா அமெ­ரிக்க வர்த்­தக போர் நமக்கு  சீனா­விற்­கான  ஏற்­று­மதி வாய்ப்­பு­களை அதி­கப்­ப­டுத்தி தந்­தி­ருக்­கி­றது. அதை நாம்­தான் சரி­யான வகை­யில் உப­யோ­கப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.

பிப்­ர­வரி மாத ஏற்­று­மதி,

இறக்­கு­மதி

கடந்த ஏழு மாதத்தை வைத்து பார்க்­கும் போது முதன்­மு­றை­யாக இந்­தி­யா­வின் ஏற்­று­மதி கூடி­யி­ருக்­கி­றது. பிப்­ர­வரி மாத ஏற்­று­மதி 2.9 சத­வீ­தம் கூடி 37.5 பில்­லி­யன் டாலர் அள­வில் இருக்­கி­றது. பிப்­ர­வரி மாதம் என்­னென்ன பொருட்­கள் ஏற்­று­ம­தி­யில் கூடி இருக்­கின்­றன என்று பார்த்­தால் எண்­ணெய் வித்­துக்­கள், எலக்ட்­ரா­னிக் பொருட்­கள், அயர்ன் அண்ட் ஸ்டீல், மருந்­துப் பொருட்­கள், கெமிக்­கல்ஸ், எஞ்­சி­னி­ய­ரிங் பொருட்­கள் ஆகி­யவை  கூடு­த­லாக ஏற்­று­மதி செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் ஏற்­று­மதி பிப்­ர­வரி மாதம் 37 சத­வீ­தம் கூடி­யி­ருக்­கி­றது. கெமிக்­கல்ஸ் ஏற்­று­மதி 11 சத­வீ­தம் கூடி­யி­ருக்­கி­றது. எஞ்­சி­னி­ய­ரிங் பொருட்­கள் ஏற்­று­மதி 8.7% கூடி­யி­ருக்­கி­றது. மருந்து பொருட்­கள் ஏற்­று­மதி 8.33 சத­வீ­தம் கூடி­யி­ருக்­கி­றது

இந்­தி­யா­வின் இறக்­கு­ம­தி­யும் கடந்த பிப்­ர­வரி மாதம் 2.5 சத­வீ­தம் கூடி­யி­ருக்­கி­றது. இதற்கு கார­ணம் என்­ன­வென்று பார்த்­தால் அதிக அள­வில் ப்ராஜக்ட் இம்­போர்ட்ஸ் செய்­தி­ருக்­கி­றோம். இது தவிர,  பருப்பு வகை­கள், பழங்­கள், காய்­க­றி­கள் ஆகி­ய­வற்­றை­யும் அதிக அள­வில் இறக்­கு­மதி செய்து இருக்­கி­றோம்.  தங்­கம் விலை கூடிக்­கொண்டே போய் இருந்­தா­லும் தங்­கத்­தின் இறக்­கு­மதி 8.5% பிப்­ர­வரி மாதம் குறைந்­தி­ருக்­கி­றது.  எண்­ணெய் இறக்­கு­மதி 14% பிப்­ர­வரி மாதம் கூடி­யி­ருக்­கி­றது.

டெனிம் துணி வகை­கள்

சூரத் நகர் பாலி­யஸ்­டர் டெக்ஸ்­டைல் வகை­க­ளுக்கு மிக­வும் பிர­சித்தி பெற்­றது. சூரத் நகர் இந்­தி­யா­வின் 40 சத­வீத பாலி­யஸ்­டர் ஃபேப்­ரிக் தேவையை பூர்த்தி செய்து வரு­கி­றது.

தற்­போது இந்த நக­ருக்கு இன்­னொரு பெரு­மை­யும் கிடைத்­தி­ருக்­கி­றது. டெனிம் துணி வகை­கள் என்­றால் நமக்­கெல்­லாம் ஞாப­கம் வரு­வது அக­ம­தா­பாத் நகர் தான். அக­ம­தா­பாத் நகரை டெனிம் கேப்­பிட்­டல் என்று அழைப்­பார்­கள். தற்­போது சூரத் நகர் டெனிம் உற்­பத்­தி­யில் இந்­தி­யா­வில் இரண்­டா­வது இடத்­தைப் பிடித்­தி­ருக்­கி­றது.

இந்­தி­யா­வில் உற்­பத்­தி­யா­கும் டெனிம் துணி வகை­க­ளில் 8 சத­வீத தயா­ரிப்பை இந்த நக­ரம் தற்­போது உற்­பத்தி செய்­கி­றது. 2015 வரை இந்த நக­ரத்­தில் நான்கு டெனிம் தொழிற்­சா­லை­கள் தான் இருந்­தன. அந்த தொழிற்­சா­லை­க­ளின் கெபா­சிட்டி 100 மில்­லி­யன் மீட்­டர் டெனிம் துணி­கள் உற்­பத்தி செய்­யும் வகை­யில் இருந்­தது. இந்த கடந்த நான்கு வரு­டத்­தில் புதி­தாக மூன்று டெனிம் பிளான்­கள் வந்­துள்­ளன.

ஒவ்­வொரு டெனிம் பேக்­ட­ரி­யும் 20 மில்­லி­யன் மீட்­டர்­கள்  தயா­ரிக்க கூடிய அள­வில் இருக்­கின்­றன. இத­னால் தற்­போது சூரத் நக­ரின் டெனிம் உற்­பத்தி 160 மில்­லி­யன் மீட்­ட­ராக இருக்­கி­றது.

சூரத்­தில் தயா­ரிக்­கப்­ப­டும் டெனிம் துணி வகை­கள் பல நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்டு வரு­கி­றது குறிப்­பாக அமெ­ரிக்கா, பங்­க­ளா­தேஷ், எகிப்த், அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய நாடு­கள் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது.