ஒரு பேனாவின் பயணம் – 249– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 16 மார்ச் 2020

தண்ணீர் குழந்தை!

என் ஆர்­வத்தை வளர்த்­துக்­கொண்­டு­தான் திசை­கள் பத்­தி­ரி­கை­யில் ஆசி­ரி­ய­ராக இருந்த மாலனை சந்­திக்க நினைத்­தி­ருந்­தேன்.

பாடப் புத்­த­கங்­களை படிக்­கி­றேனோ இல்­லையோ, பொது­வான புத்­த­கங்­களை படித்­துக்­கொண்­டே­தான் இருந்­தேன். ஆங்­கில மீடி­யத்­தில் படித்­த­தால் ஆங்­கில புத்­த­கங்­க­ளும் எளி­தாக படித்து புரிந்து கொள்ள முடிந்­தது.

 அப்­போ­து­தான் ஒரு முறை `குமு­தம்’ பத்­தி­ரி­கை­யில் அரசு கேள்வி – பதில் பகு­தி­யில் ` தங்­களை எந்­நா­ளும் கவர்ந்த புத்­த­கம்?’ என்ற ஒரு கேள்­விக்கு பெஞ்­ச­மின் பிராங்க்­ளி­னின் சரிதை என்று எழு­தி­யி­ருந்­தார்.

 உடனே யார் இந்த பெஞ்­ச­மின் பிராங்க்­ளின் என்­கிற கேள்வி என்­னுள் எழுந்­தது. உடனே அவ­ரது சுய­ச­ரி­தையை தேடிக் கண்டு பிடித்­தேன். பெஞ்­ச­மின் பிராங்­க­ளி­னின் சரி­தையை எழு­தி­யி­ருந்­த­வர், மார்­க­ரெட் கசின்ஸ்.

 வாழ்க்­கை­யில் முன்­னே­றத் துடிக்­கும் ஒவ்­வொ­ரு­வ­ரும் படிக்க வேண்­டிய ஒரு சரிதை இது.  கடின உழைப்பு என்­பது ஒரு மனி­தனை எந்த அள­வுக்கு உய­ரத் தூக்­கிக் கொண்டு போகும் என்­ப­தற்கு பிராங்க்­ளி­னின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்­துக் காட்டு.

 அவ­ரு­டைய சரிதை  இப்­ப­டித் துவங்­கும்.

 1706ம் ஆண்டு ஜன­வரி மாதம். பனி உறை­யும் ஒரு  ஞாயிற்­றுக்­கி­ழமை.

 போஸ்­டன் நக­ரிலே, மெழு­குத்­தி­ரி­யும் சோப்­புக்­கட்­டி­யும் தயா­ரிக்­கும் ஒரு­வ­ரின் மனை­விக்கு, நரை நிறக் கண் படைத்த ஒரு ஆண் குழந்தை பிறந்­தது.

 குழந்­தை­யைப் பெற்­ற­வர்­கள், தங்­கள் சின்­னஞ்­சிறு பிள்ளை தன் வாழ்­நா­ளில் எந்த அமெ­ரிக்­க­ரை­யும் விட பல­வி­த­மான காரி­யங்­கள் பல­வற்றை  சாதிக்­கும் என்­பதை முன்­கூட்­டியே அறிந்­தி­ருப்­பார்­க­ளே­யா­மா­கில், பெரி­தும் ஆச்­ச­ரி­ய­ம­டைந்­தி­ருப்­பார்­கள்.

 பிள்ளை பிறந்த அன்றே, சுற்­றுப் பிர­யா­ணம் செய்­யத் தொடங்­கி­விட்­டது. தந்­தை­யின் கரங்­க­ளிலே, பனிப்­ப­ட­லம் மூடிய பால் வீதி வழி­யாக, பழைய தென்­திசை மாதா கோயிலை நோக்கி, தூக்­கிச் செல்­லப்­பட்­டது. கிறிஸ்­தவ ஞானஸ்­நான பீடத்­தி­லி­ருந்து, குளிர்ந்த ஜலத்­து­டன், ‘பெஞ்­ச­மின் பிராங்க்­ளின் என்று நாம­க­ர­ணம் அந்த குழந்­தைக்கு இடப்­பட்­டது.

 பெஞ்­ச­மி­னுக்கு வீடு நிறைய சகோ­தர சகோ­த­ரி­கள் உண்டு. சாதா­ர­ண­மாக பிராங்க்­ளி­னார் சாப்­பாட்டு மேஜை முன் பதின்­மூன்று நபர்­கள் தயா­ராக உட்­கார்ந்­தி­ருப்­பது வழக்­கம்! பெரிய குடும்­பம் ஆன­தாலே, பெஞ்­ச­மி­னின் அம்மா சதா சமைப்­ப­தி­லும், துணி துவைப்­ப­தி­லும், ஆடை­கள் தைப்­ப­தி­லுமே மூழ்­கி­யி­ருப்­பார். அத­னால் பெஞ்­ச­மின் பிராங்க்­ளின் மீது கழுகு கண் வைத்­துக் கவ­னிக்க அவ­ளுக்கு நேர­மில்லை. தகப்­ப­னாரோ சோப்­புக் கட்­டி­க­ளும், மெழு­கு­வர்த்­தி­க­ளும் தயா­ரிப்­ப­தில் சதா மூழ்­கிக் கிடப்­ப­வ­ரா­கை­யால், அவ­ருக்­கும் மகனை கவ­னிக்க நேர­மி­ராது.

 இர­வுக் காவ­லுக்­காக போஸ்­டன் நக­ருக்கு, திரு­வா­ளர் பிராங்க்­ளின் ( பெஞ்­ச­மின் பிராங்க்­ளி­னின் தந்தை)  மெழு­கு­வர்த்­தி­கள் செய்து விற்று வந்­தார். அந்த காலத்­தில் போஸ்­டன் நக­ரிலே, தெரு விளக்­கு­கள் இல்­லை­தான். தெருக்­க­ளுக்கு நம்­பர்­கள் கூட இல்லை. பெஞ்­ச­மின் வீட்டு வாசல்  முன்னே ஊதாப் பந்து உரு­வம் தீட்­டிய அடை­யா­ளப் பலகை ஒன்று தொங்­கும். ஊதாப் பந்­தின் சின்­னத்­தைக் கண்­ட­தும், அங்கே சோப்­புக்­கட்­டி­க­ளும் மெழு­கு­வர்த்­தி­க­ளும் விலைக்கு வாங்­க­லாம் என்­பதை ஜனங்­கள் தெரிந்து கொள்­வார்­கள். அது மிக­வும் சுறு­சு­றுப்பு நிறைந்த இடம். சின்­னஞ்­சிறு பயல் கூட தனக்­கு­ரிய வீட்டு வேலை­க­ளைச் செய்­வான். பண்­டங்­களை எப்­ப­டித் தயா­ரிப்­பது என்­ப­தும் அவ­னுக்­குத் தெரி­யும்.

 அந்த நாட்­க­ளிலே, போஸ்­டன் நக­ர­வா­சி­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் சுறு­சு­றுப்­பா­யி­ருந்­தார்­கள். அப்­போது அது நம் கணக்­குப்­படி, சின்­னஞ்­சிறு நக­ரா­கவே இருந்­தது. கர­டு­மு­ர­டா­ன­தொரு புதிய தேசத்­திலே அமைந்­தி­ருக்­கும் சிறிய நக­ரமே அது. அங்கே பெரி­ய­வனோ, சின்­ன­வனோ, எந்த நப­ரா­யி­ருந்­தா­லும், தன் பங்­குக்­கு­ரிய வேலையை செய்­தாக வேண்­டும். நீங்­கள் உழைக்­கா­விட்­டால் உண்­ண­வும் முடி­யாது. அப்­போது மாஸாசூ செட்­ஸின் குடி­யேற்ற நாட்டு அர­சாங்­க­மா­னது சோம்­பேறி ஜனங்­களை கண்டு முகம் சுளித்­தது. நீங்­கள் ஏதா­வது வேலை செய்­யா­விட்­டால் உங்­கள் முது­கைத் திறந்து  சவுக்­கால் வெளுத்­துக் கட்­டி­வி­டும்.

 அந்த காலத்­தில் போஸ்­டன் நக­ர­மா­னது குறிப்­பி­டும்­ப­டி­ய­ளவு அழகு ஜொலிக்­கும் அழ­கா­பு­ரி­யு­மல்ல, சுல­ப­மாக பொழுது போக்­கித் திரி­யக்­கூ­டிய உல்­லா­ச­பு­ரி­யு­மல்ல. ஆனால், அது சிறு­வர்­க­ளுக்கோ அதி­யற்­பு­த­மான ஒரு பட்­டி­ணம் ஆகும். கப்­பல் துறை­மு­கத்­தை­யும் பண்­ட­கத்­து­றைக் கல்­ல­ணை­யை­யும்  சுற்றி நக­ரம் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. அங்கே இங்­கி­லாந்­தி­லி­ருந்து கப்­பல்­கள் வந்து உள்ளே தங்­கும். அங்கு குடி­யே­றி­யுள்ள மக்­க­ளுக்கு அவை பரந்து கிடக்­கும் உல­கி­லி­ருந்து பல­வி­த­மான செய்­தி­க­ளை­யும் சரக்­கு­க­ளை­யும் கொண்டு வரும். ஏதா­வ­தொரு கப்­பல் கண் பார்­வைக்­குத் தென்­பட்­டு­விட்­டால், ஜனங்­கள் பண்­ட­கக் கரை மீது மொய்த்­துக்­கொண்டு ஆனந்­தம் தாங்­கா­மல் கோஷ­மி­டு­வார்­கள்.

 துறை­மு­கத்­திற்கு மேலே தாழ்­வான மலை­கள்; அவற்­றின் மீது ஏறிச் செல்­லும் குறு­க­லான தெருக்­கள்; காற்­றுக் கிறீச்­சி­டும் தெருக்­கள்; அந்த தெருக்­க­ளெல்­லாம் பொந்து புடைப்­பு­கள் மய­மா­கக் காணப்­ப­டும். தெருக்­க­ளின் இரு­ம­ருங்­கும் எழும்பி நிற்­கும் சது­ர­மான வீடு­கள். அவ்­வ­ள­வும் சாயம் பூசாத வீடு­கள்; மழை­யி­லும், வெயி­லி­லும், காற்­றி­லும் அவை பழுப்­பே­றிக் காணப்­ப­டும். இவற்­றிற்­கெல்­லாம் அப்­பால் மாபெ­ரும் காடு­கள் உருண்டு செல்­லும். அவை எவ்­வ­ளவு தூரம் செல்­கின்­றன என

எவ­ருக்­கும் தெரி­ய­வ­ராது.

ஆனால், சிறு­வர்­க­ளுக்கோ, அங்கே தொற்றி ஏற நிறைய மரங்­க­ளும், பிடித்து விளை­யாட மீன்­க­ளும், கட­லில் சென்று விளை­யாட பட­கு­க­ளும், தண்டு வலித்து விளை­யாட சிறு பட­கு­க­ளும் இருந்­தன. போஸ்­டன் மக்­க­ளுக்கோ தங்­கள் மாடு­களை மேய்த்து வர, நிறைய மைதா­னங்­க­ளும் சதுப்பு நிலங்­க­ளும், குளம் குட்­டை­க­ளும், ஆறும், கட­லும் இருந்­தன. சிறு­வர்­கள், கோட்டை கொத்­த­ளங்­கள் கட்­டிக் காட்­டு­மி­ராண்டி விளை­யாட்டு விளை­யா­டு­ வார்­கள். பற்­றைக் காடு­க­ளிலே துப்­ப­றிந்து

திரி­வார்­கள். நீல நிறத் தண்­ணீ­ரிலே நீந்தி விளை­யா­டு­வார்­கள்.

 பெஞ்­ச­மின் பிராங்க்­ளின் வழக்­க­மா­கவே ஒரு தண்­ணீர் குழந்­தை­யாக ஆகி­விட நேர்ந்­தது. பெரும் பகு­தி­யான நேரத்தை ஈரக்­கால்­க­ளு­ட­னேயே கழிப்­ப­து­தான் வழக்­கம்.  குழந்தை நடக்­கக் கற்­றுக்­கொண்ட உட­னேயே நீந்­த­வும் கற்­றுக் கொண்டு விட்­டது. கோடைக் காலம் முழு­வ­தும் பெஞ்­ச­மின் பிராங்க்­ளின் சின்­னஞ்­சிறு நீர் நாயைப் போலத் தண்­ணீ­ரில் அடித்­துத் தெறித்து விளை­யா­டு­வ­ துண்டு. நண்­பர்­களோ பெஞ்­ச­மின் மீது தண்­ணீரை அள்­ளித்­தெ­ளிப்­பார்­கள். அந்த பையன்­க­ளின் பெயர்­க­ளெல்­லாம் இப்­போது காலத்­தால் மறக்­கப்­பட்­டு­விட்­டன. ஆனால், அந்த  பெயர்­க­ளின் பட்­டி­ய­லிலே, ஜான்­க­ளும், பீட்­டர்­க­ளும், டேவிட்­க­ளும், கிவி­சி­க­ளும் ஒப­டி­யாக்­க­ளும், ரோக்­கர்­க­ளும் இருந்­தி­ருக்­கு­மென்று நாம் நிச்­ச­யம் நம்­ப­லாம்.

 அந்­தச் சிறு­வர்­க­ளின் கும்­ப­லுக்கு பெஞ்­ச­மின் பிராங்க்­ளின்­தான் படைத்­த­லை­வர்.  ஏனெ­னில், பெஞ்­ச­மின் எந்த இடத்­தில் இருந்­தா­லும் அங்கே நிச்­ச­ய­மாக ஏதோ புதி­தாக ஒன்று நடக்­கும் என்று சகாக்­க­ளுக்­கெல்­லாம் தெரி­யும். புதி­தாக என்ன செய்­ய­லாம் என்று எப்­போ­துமே பெஞ்­ச­மி­னால்­தான் சிந்­திக்க முடி­யும்.

 ஒரு நாள், சிறு­வர்­க­ளுக்­கெல்­லாம் குட்டி மீன்­கள் பிடிக்க உப்­பங்­க­ழ­னி­யில் நின்று கொண்­டி­ருந்­தார்­கள்.  ஈரக்­கால்­க­ளு­டன் நின்று கொண்­டி­ருந்த பெஞ்­ச­மி­னுக்கோ ஏதா­வது ஒரு மீன் தூண்­டி­லைக் கடிக்க வராதா என்று ஒரு ஏக்­கம். அப்­போது ஒரு தொழி­லா­ளர் குழு, கட்­ட­டம் ஒன்று கட்­டத் துவங்­கும் காட்சி தட்­டுப்­பட்­டது. கற்­க­ளின் குவி­ய­லின் மீது அவர்­கள் வேலை செய்து கொண்­டி­ருந்­தார்­கள். உடனே பெஞ்­ச­மி­னுக்கு ஒரு யோசனை தோன்­றி­யது.

 `ஹலோ ! இங்கே நாம் ஏனடா இதன் மீது ஒரு கல்­லணை கட்­டக்­கூ­டாது ?’

 ` எதற்கு ?’ என்று ஜான் தெரிந்து கொள்ள விரும்­பி­னான். அவன்­தான் அந்­தக் கும்­ப­லிலே, மிகச் சின்­னப் பையன். அவன்­தான் எப்­போ­தும் முட்­டாள்­த­ன­மான கேள்­வி­கள் கேட்­ப­வன்.

 ` அத­னாலே, நாம் அதன் மீது நின்று மீன் பிடிக்க முடி­யு­மடா முட்­டாள். அதோடு, நம் பட­கு­க­ளை­யும் அதிலே கட்டி வைக்­க­லா­மடா ‘

 `அது சரி, பெஞ்­ச­மின், இப்­போது எதைக் கொண்டு நாம் கல்­லணை கட்ட முடி­யு­மென்று நினைக்­கி­றாய் ?’ என்று கேட்­டான் ஒப­டியா.  அவன் வெறும்­ப­யல். சுத்த அச­மந்­தம்.

 தலை­வர் பெஞ்­ச­மினோ தன் மீன் தூண்­டிலை எடுத்து, கட்­ட­டத் தள­வ­ரி­சைக் கற்­கு­வி­யலை நோக்­கிச் சுண்டி இழுத்­தார். கட்­டட  வேலைக்­கா­ரர்­க­ளெல்­லாம் கை தூசி­யைத் தட்­டிக்­கொண்டு வீடு­க­ளுக்­குச் சாப்­பிட போய்­விட்­டார்­கள்.

‘அந்த பாறை­கள்’ ‘ என்­றார் அந்த சிறு­வர் படைத் தலை­வர்.

 `அவற்றை இங்கே நகர்த்­திக்­கொண்டு வந்து விட­லாம் என்­கி­றாயா ?’ அது செயல்­ப­டு­வ­தற்கு இல­கு­வா­கத் தோன்­றி­யது.

 `வேறென்­னடா ?’ என்று கேட்ட பெஞ்­ச­மின் தனது மீன் தூண்­டி­லைக் கீழே விட்­டெ­றிந்­து­விட்டு, பாறைக் குவி­யலை நோக்கி ஓடவே, மற்­ற­வர்­க­ளும் பின்­தொ­டர்ந்து ஓடி­னார்­கள். என்ன கார­ணத்­தாலோ, பெஞ்­ச­மின் செய்ய விரும்­பு­வ­தைச் செய்­வ­தி­லே­தான் அந்த பையன்­க­ளுக்­கெல்­லாம் எப்­போ­தும் ஒரு விருப்­பம்.

`இம்’ மென்று ஒரு வார்த்தை சொல்லி வாய்­மூ­டு­முன்னே, அவர்­க­ளெல்­லாம் பெரிய பெரிய கற்­களை உந்தி இழுத்­தார்­கள் வெளியே. வியர்வை சொட்ட சொட்ட, தடு­மா­றித் தள்­ளாடி, வெகு சிர­மப்­பட்டு அந்த கற்­க­ளை­யெல்­லாம் தண்­ணீர்க் குட்­டை­யின் முனைக்கு இழுத்து வந்­தார்­கள். அங்கே பெஞ்­ச­மின் ஒரு கழியை எடுத்து ` பிளான்’ வரைந்து அந்த வேலைக்கு  மேஸ்­தி­ரி­யா­க­வும் இருந்து நடத்தி வைக்­கவே, இருட்­டு­வ­தற்­குள், கற்­க­ளெல்­லாம் ஒறோ­டொன்று இணைக்­கப்­பட்டு, சுத்­த­மா­ன­தொரு மேடை ஆக்­கப்­பட்­டது. பிறகு சிறு­வர்­க­ளெல்­லாம் களைத்து போய், ஆனால், களிப்­பே­ரு­வ­கை­யு­டன் வீட்­டுக்­குப் போனார்­கள்.

 இனி சவு­க­ரி­ய­மாக மீன் பிடிக்க ஆரம்­பிக்­க­லாம் என்­னும் குறு­கு­றுப்­பி­னால் அவர்­க­ளுக்கு மறு­நாள் பொழுது விடி­யும் வரை காத்­தி­ருப்­பது கடி­ன­மா­யி­ருந்­தது.

 மறு­நாள் பொழுது விடிந்­த­தும், கட்­ட­டம் எழுப்­பும் தொழி­லா­ளி­கள் தங்­கள் வேலைக்­குத்

திரும்­பிச் சென்­றார்­கள். ஆனால் அங்கே அவர்­க­ளு­டைய கற்­க­ளைக் காணோம். ஒவ்­வொரு

கல்­லும் தண்­ணீர்க் குட்­டை­யின் முனையை நோக்கி நகர்த்­தப்­பட்­டி­ருந்­தது.

 தொழி­லா­ளி­க­ளெல்­லாம் ஆத்­தி­ர­ம­டைந்த குளவி வண்­டு­களை போல ‘புஸ் புஸ்’ என்று போஸ்­டன் நக­ரெங்­கும் பாய்ந்து சென்­றார்­கள். பையன்­க­ளின் தகப்­ப­னா­ரி­டம்  பெரி­தாக  கூப்­பாடு போட்­டார்­கள். சங்­க­டம் ஆரம்­ப­மா­கி­விட்­டது.

 போஸ்­ட­னி­லுள்ள இளஞ்­சி­றார்­க­ளெல்­லாம் ஓரி­டத்­தில் ஒன்­றாக வர­வ­ழைக்­கப்­பட்­டார்­கள்.

 `பெஞ்­ச­மின், எத­னால் இப்­ப­டிப்­பட்ட காரி­யம் செய்­தாய் ?’ என்று தந்தை கேட்­டார். அவர் மிக­வும் கண்­ணி­ய­மான மனி­தர்.

 `எங்­க­ளுக்கு மீன் பிடிக்க ஒரு கல் மேடை தேவைப்­பட்­டது. எவ்­வ­ளவு அழ­காய் கட்­டி­யி­ருக்­கி­றோம். பாருங்­கள் அப்பா’  என்­றார் பெஞ்­சமி.ன்

  `ஆனால் அது உங்­க­ளு­டை­ய­தல்ல’ என்று குறிப்­பிட்­டுக் காட்­டி­னார் இன்­னொ­ரு­வர்.

 `ஓ’ இந்­தச் சம­யத்­தில் பெஞ்­ச­மி­னும் கூட்­டா­ளி­க­ளும், அந்த கற்­களை எங்­கி­ருந்து கொண்டு


வந்­தார்­களோ அந்த இடத்­திற்கே கொண்டு போக நேர்ந்­தது. அந்­தப் பாறை­களை திருப்பி எடுத்து போகும் போது அவை இரண்டு மடங்கு கன­மா­யி­ருப்­ப­தாக சிறு­வர்­க­ளுக்­கெல்­லாம் உணர்ச்சி தட்­டி­யது. பிறர் விஷ­யங்­க­ளில் தலை­யி­டக் கூடாது என்ற பாடத்­தை­யும் கற்­றுக் கொண்­டார்­கள். எல்­லோ­ருக்­கும் எரிச்­ச­லும் சுமை­யும்.  ஒரு சிறு­வ­னுக்கு கீழே விழுந்து கெண்­டைக்­கா­லின் முன்­பு­றம் தோல் உரிந்­து­விட்­டது.

` நான் அப்­பவே சொன்­னேனே’  என்று பெஞ்­ச­மி­னி­டம் ஒரு­வன் முறை­யிட்­டான்.

 இந்த ஒரு தட­வை­தான் பெஞ்­ச­மி­னுக்கு என்ன பதில் சொல்­வ­தென்று ஒன்­றும் தோன்­ற­வில்லை.

 ஆனால் சிறு­வர்­க­ளில் எவ­ருக்­கும் பெஞ்­ச­மின் மீது அதிக நாள் வரை கோப­மாய் இருக்க முடி­ய­வில்லை. அவர்­க­ளுக்கு ஏதா­வது புதிய வேடிக்கை விளை­யாட்டு கிடைக்­கா­மல் போய்­வி­டுமே? மீனைப் போல சிற­கு­கள் செய்ய பெஞ்­ச­மின் ஒரு வழி கண்டு பிடித்த பிற­கு­தான் அவர்­கள் அந்த வேடிக்கை கிடைத்­தது. சிறு­வர்­கள் நீந்­திச் செல்­லும்­போது, இந்த சிற­கு­களை தங்­கள் கணுக்­கால்­க­ளில்  வாரி­னால் கட்­டிக்­கொண்­டால், தண்­ணீரை வரி வரி­யாய்க் கீறிக்­கொண்டு இரண்டு மடங்கு வேக­மாக நீந்த முடிந்­தது. தங்­க­ளுக்­குப்­பின்­னால்  ஜோரா­கப் பனிப்­ப­ட­லத்­தில் தடம் விட்­டுச் செல்­ல­வும் முடிந்­தது.

 பெஞ்­ச­மி­னின் போக்கே எதிர்­பா­ராத ஆச்­ச­ரி­யங்­கள் மய­மாக இருக்­கும். ஒரு சம­யம் பறக்­கும்

பட்­டம் ஒன்­றைப் பெஞ்­ச­மின் குளத்­தங்­க­ரைப் பக்­கம் இறக்­கிக் கொண்டு வந்­த­போது ஒரு புதுமை நடந்­தது.

 ஒரு நாள் பெஞ்­ச­மின் தன் பட்­டத்தை உய­ரப் பறக்­க­விட்­டுக் கொண்­டி­ருந்­த­போது காற்று அதற்கு எதி­ராக இழுத்­த­டிப்­ப­தா­கத் தோன்­றவே, `காற்று என்­னைக் கூட இழுக்­கும்­படி பல­மாய் இருக்­கி­றதே ?’ என்று நினைப்­புத் தட்­டி­யது. உடனே, நான் தண்­ணீ­ரில் இருந்­தால், நிச்­ச­யம் காற்று என்னை இழுத்­து­வி­டும் எனப் பந்­த­யம் கூடக் கட்­டு­வேன்’ என்ற எண்­ண­மும் உதித்­தது.

 மறு­த­டவை சிறு­வர் குழு­வோடு அதன் தலை­வ­ரா­கப் பெஞ்­ச­மின் குளத்­திற்கு நீந்­தப் போன­போ­தும் கூடவே பட்­டத்தை எடுத்­துச் சென்­றான்.

` தண்­ணீ­ரில் இருந்த வாக்­கில்  உன்­னால் பட்­டம் பறக்க  விட முடி­யாது’ என்­றான் ஒரு­வன்.

 ` அதெப்­ப­டிடா எனக்­குத் தெரி­யும்’  என்­பது பெஞ்­ச­மி­னின் கேள்வி.

 தலை­வர் தம் பட்­டத்தை ஆகா­யத்­தில் பறக்­க­விட்­டது, தன் ஆடை­க­ளை­யெல்­லாம் களைத்­தெ­றி­ரிந்­து­விட்டு, தண்­ணீ­ருக்­குள் குதித்­தார். பட்­டத்­தின் நூல் வடத்­தைக் கெட்­டி­யாய் கையில் பிடித்­துக் கொண்டு, தண்­ணீ­ரில் மிதந்­தார். காற்­றி­னால் உந்­தித் தள்­ளப்­பட்ட பட்­ட­மா­னது அவ­ரைக் குளத்­தில் எதிர்­க­ரைக்கு இழுத்­துச் சென்­றது. அவ­ரு­டைய ஆடை­களை வைத்­துக் கொண்டு கரை­யில் நின்ற சிறு­வர்­கள் உண்­மை­யி­லேயே பிர­மித்­துப் போனார்­கள். அது­போ­லத் தாங்­க­ளும் செய்து பார்க்க ஆசைப்­பட்­டார்­கள்.

(தொட­ரும்)