எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்பு

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2020 13:05

சென்னை:

கரோனா வைரஸ் தாக்கிவிடும் என்ற அச்சம் காரணமாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு நேற்று அறிவித்த விடுமுறை அறிவிப்பை தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 16-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி விடுமுறை என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டது. .

விடுமுறை நிறுத்தி வைப்பு

நேற்று அரசு அறிவித்த இந்த விடுமுறை அறிவிப்பு இன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், புதிய அறிவிப்பு  விரைவில் வெளிவரும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.