எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் கலப்படம் – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2020

இந்­தி­யா­வில் உண­வில் நடை­பெ­றும் கலப்­ப­டத்­தில் உத்­த­ர­பி­ர­தே­சம் அடுத்து தமி­ழ­கத்­தில் தான் அதி­க­மாக நடை­பெ­று­கி­றது. குறிப்­பாக சொல்­ல­போ­னால் தண்­ணீர் கலந்த பால், செங்­கல்­தூள் கலந்த மிள­காய்த் தூள், வாச­னை­யற்ற மல்­லித்­தூள் போன்­றவை மட்­டுமே மக்­க­ளுக்கு அதி­கம் தெரிந்த கலப்­ப­டங்­கள். இத­னால், சுவை குறை­யுமே தவிர, பெரிய பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தாது. ஆனால், வணி­கப் போட்டி கார­ண­மா­க­வும் அதிக லாபம் சம்­பா­திக்­கும் நோக்­கி­லும் பாலில் யூரியா, அமோ­னி­யம் சல்­பேட், டிடர்­ஜென்ட் பவு­டர் போன்­றவை கலக்­கப்­பட்டு, அடர்த்­தி­யாக மாற்­றப்­ப­டு­கி­றது. சூடான் டை கலக்­கப்­பட்ட மிள­காய்­தூள், உணவை அழ­காக்கி, குட­லைப் புண்­ணாக்கு ­கிறது. புற்­று­நோய் வரு­வ­தற்­கு­கூட ‘உணவு கலப்­ப­டம்’ கார­ண­மா­கி­றது என்­பதே நம்மை அச்­ச­றுத்­தும் செய்தி. உண­வுப் பொருட்­க­ளில் என்­னென்ன மாதி­ரி­யான கலப்­ப­டங்­கள் நிகழ்­கின்­றன என்­பதை, இங்கே விரி­வா­கச் சொல்­கி­றார் இந்­திய நுகர்­வோர் பாது­காப்பு அமைப்­பின் தொடர்பு அலு­வ­லர் சோம­சுந்­த­ரம்.

காய், கனி­கள் : உண­வுப் பாது­காப்­புத் துறை, பழங்­க­ளைப் பழுக்­க­வைக்க, ‘எத்­தி­லின்’ பயன்­ப­டுத்­தச் சொல்லி அறி­வு­றுத்­தி­னா­லும், பெரும்­பா­லான வணி­கர்­கள் அதை பயன்­ப­டுத்­தா­மல் கார்­பைடு கல்­லைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். தர்­பூ­ச­ணிப் பழம் அடர் சிவப்பு நிறத்­தில் இருப்­ப­தற்கு, பீட்டா எரித்­ரோ­சின் என்ற ரசா­ய­னம் ஊசி மூல­மா­கச் சேர்க்­கப்­ப­டு­கி­றது. மாம்­ப­ழம், தக்­காளி, பப்­பாளி, சப்­போட்டா, வாழைப்­ப­ழம் போன்ற பழுங்­களை பழுக்­க­வைக்க, கார்­பைட் பயன் படுத்­து­கின்­ற­னர்.

விளை­வு­கள்: எலி­களை வைத்து எரித்­ரோ­சின் பரி­சோ­திக்­கப்­பட்­ட­தில், தைராய்டு கட்டி உரு­வா­னது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த எரித்­ரோ­சின் கலக்­கப்­பட்ட பழங்­க­ளைத் தொடர்ந்து சாப்­பிட்­டால், புற்­று­நோய் வரும். கல்­லீ­ரல், சிறு­நீ­ர­கம் பாதிக்­கும். கார்­பைட்­டி­னால் மறதி, மூளை­யில் ரத்த ஓட்­டம் குறை­தல், தலை­வலி, மூளை பாதிப்­பு­கள் ஏற்­ப­ட­லாம்.

கவ­னிக்க: ஒரே மாதிரி பழுத்­துள்ள, பள­ப­ளப்­பான பழங்­க­ளில், இயற்­கை­யான வாசம் இருக்­காது. சீசன்  பழங்­களை, சீசன் இல்­லா­த­போது வாங்­கு­வதை தவிர்க்க வேண்­டும். பழங்­களை உப்பு நீரில் ஊற­வைத்து நன்­றா­கக் கழுவி, தோல் நீக்கி சாப்­பிட வேண்­டும்.

அசை­வம், தந்­தூரி உண­வு­கள் : பார்த்­த­தும் சாப்­பிட தூண்­டும் நிற­மும் வாச­மும் தந்­தூ­ரி­யின் தந்­தி­ரம். முதல் சுவை­யிலே நாவை அடி­மைப்­ப­டுத்த, சுவை­யூட்­டி­கள் சேர்க்­கப்­ப­டு­கின்­றன. சிவப்பு நிறத்­தில் தெரிய ‘ரெட் டை’ பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. கோழி வளர்ப்­பில் பல குற்­றச்­சாட்­டுக்­கள் இருக்­கின்­றன. மேலும், உண­வ­கங்­க­ளில் மீத­மா­கிப்­போன இறைச்­சியை, வினி­க­ரில் கழுவி, புதிது போல விற்­கின்­ற­னர்.

விளை­வு­கள்: சீக்­கி­ரத்­தி­லேயே பூப்­பெய்­து­தல், நெஞ்சு எரிச்­சல், அல்­சர், தைராய்டு கட்­டி­கள், ஹார்­மோன் மாற்­றங்­கள் ஏற்­ப­டு­கின்­றன. தீயால் சுடப்­ப­டும் உண­வு­க­ளால், புற்­று­நோய் வரும் என்று நிரு­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஸ்மோக்கி உண­வு­க­ளைத் தவிர்ப்­பது ஒன்றே இதற்கு வழி.

கவ­னிக்க: சாப்­பிட்ட தந்­தூ­ரி­யின் சிவப்பு நிறம் கையில் ஒட்­டி­யி­ருக்­கும், சோப் போட்­டால் மட்­டுமே போகும். கடை­யில் விற்­கப்­ப­டும் இறைச்சி, சிவப்­பா­கவோ வெளுத்­துப்­போயோ இருக்­கக்­கூ­டாது. இறைச்சி, இளஞ்­சி­வப்பு நிறத்­தில் இருக்க வேண்­டும்.

பால் பொருட்­கள் : பால் அடர்த்­திக்கு அமோ­னி­யம் சல்­பேட், பால் நுரைத்து வரு­வ­தற்கு சோப், நீண்ட நாள் கெடா­மல் இருக்க பார்­ம­லின், யூரியா போன்­றவை சேர்க்­கப்­ப­டு­கின்­றன என, சமீ­பத்­தில் மத்­திய அரசே தெரி­வித்­துள்­ளது. கடை­க­ளில் விற்­கப்­ப­டும் ‘சின்­தட்­டிக்’ மில்க்­கில் வழ­வ­ழப்பு, பள­ப­ளப்­புக்கு வெள்ளை நிற வாட்­டர் பெயின்ட், எண்­ணெய், அல்­கலி மற்­றும் டிடர்­ஜென்ட் பவு­டர் கலக்­கப்­ப­டு­கின்­றன. செம்­மறி ஆடு மற்­றும் பன்­றி­யி­ட­மி­ருந்து பெறப்­ப­டும் ரென்­னட் என்ற பொரு­ளி­லி­ருந்து சீஸ் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. வனஸ்­பதி மற்­றும் நெய்­யில் விலங்­குக் கொழுப்பு, வெண்­ணெ­யில், மாட்­டுக் கொழுப்பு, மைதா­வில் மணிலா (வேர்க்­க­டலை) மாவு போன்­றவை கலக்­கப்­ப­டு­கின்­றன.

விளை­வு­கள்: வயிற்­று­வலி, வயிற்­று­போக்கு, கெட்ட கொழுப்பு சேரு­தல், முக வீக்­கம், இதய பிரச்னை, வயிற்­றுக் கோளாறு, சரும பிரச்­னை­கள், ஆஸ்­துமா போன்­றவை வர­லாம்.

கவ­னிக்க: வீட்­டிலே தேங்­காய், சோயா, பாதாம், எள்ளு, வேர்க்­க­டலை போன்­ற­வற்­றி­லி­ருந்து எடுக்­கப்­ப­டும் பாலை அருந்­த­லாம். இந்த பாலி­லும் தயிர், மோர் தயா­ரிக்­க­லாம். பசும்­பா­லை­விட எள்­ளுப் பாலில் 10 மடங்கு அதிக கால்­சி­யம் கிடைக்­கும். சீசுக்கு பதி­லாக, சோயா டோபு, பாதாம், முந்­தி­ரி­யி­லி­ருந்து தயா­ரிக்­கப்­ப­டும் சீஸைச்சாப்­பி­ட­லாம்.

பன்­னாட்டு உண­வு­கள் : விளம்­ப­ரம், ஆட்­கள் சேர்க்கை மூலம், இந்­தி­யா­வில் பர­வ­லாக விற்­கப்­ப­டு­ கின்­றன பன்­னாட்டு உண­வு­கள். இந்­தி­யா­வில், 100 பொருட்­களை மார்­கெட்­டி­லி­ருந்து திரும்­பப் பெறச் சொல்லி, உண­வுப் பாது­காப்­புத் துறை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. மாத்­திரை, கிரீம், ஹெல்த் டிரிங்ஸ், புரோட்­டீன் பவு­டர் போன்ற சில பன்­னாட்டு உண­வு­க­ளில், நம் சூழல் சார்ந்த உடல் நல­னுக்­குப் பொருத்­தம் இல்­லா­த­தால் அரசு தடை விதித்­துள்­ளது. மேலும், உலோ­கங்­கள், தாவர நச்­சு­கள் இதில் கலந்­தி­ருக்­க­லாம்.

விளை­வு­கள்: சிறு­நீ­ர­கம், கல்­லீ­ரல் பாதிக்­கும்.

வயிற்­றில் உபா­தை­களை ஏற்­ப­டுத்­தும்.

கவ­னிக்க: பன்­னாட்டு உண­வு­க­ளைத் தவிர்ப்­பது ஒன்றே மாற்று வழி.

பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வு­கள் :  ரெடி­மேட் தோசை மாவு சீக்­கி­ரத்­தில் புளிக்­கா­மல் இருக்க, கால்­சி­யம் சிலி­கேட், மிள­காய் தூளில் செங்­கல்­தூள், சூடான் டை, சிட்­ரஸ் ரெட், கான்­கோ­ரைட். மல்லி தூளில் மரத்­தூள், குதிரை சாணம், மால­சைட் பச்சை (வீட்டு வாசல் பச்சை நிற­மாக மாற, சாணத்­துக்­குப் பதி­லா­கப் பயன்­ப­டுத்­தும் நிறமி), மஞ்­சள் தூளில் காரிய கிரோ­மல், அக்­ரி­டைன் மஞ்­சள், கடு­கில் ஆர்­ஜி­மோன் விதை, தூள் உப்பு கட்­டி­யா­கா­மல் இருக்க ஆன்­டி­கேக்­கிங் ஏஜென்ட், டீ தூளில் முந்­திரி தோல் மற்­றும் செயற்கை வண்­ணங்­கள், தேனில் வெல்­லப் பாகு, சர்க்­கரை, சமை­யல் எண்­ணெய்­க­ளில் காட்டு ஆம­ணக்கு எண்­ணெய் ஆகி­யவை கலக்­கப்­ப­டு­கின்­றன.

விளை­வு­கள்: தொடர் தலை­வலி, ஒற்­றைத் தலை­வலி,  உடல்­ப­ரு­மன், சில வகைப் புற்­று­நோய்­கள், சிறு­நீ­ர­கக் கற்­கள், கருச்­சி­தைவு, மலச்­சிக்­கல், வயிற்­றுக் கோளாறு, நெஞ்­சு­வலி, நுரை­யீ­ரல் பாதிப்­பு­கள், குறை­பா­டு­டன் குழந்தை பிறப்­பது, அல்­சர், கல்­லீ­ரல் வீக்­கம், கணைய பாதிப்­பு­கள், குழந்­தை­யின்மை, ரத்­தக் குழாய் மற்­றும் மூளை பாதிப்­பு­கள் ஏற்­ப­ட­லாம்.

கவ­னிக்க: லேபி­ளில், மோனோ­சோ­டி­யம் குளுட்­ட ­மேட் என்ற உப்பு, பதப்­ப­டுத்­தும் ரசா­ய­னங்­கள் மாற்று பெய­ரில் மறைந்­தி­ருக்­கும். ரெடி­மேட் உண­வு­க­ளைத் தவிர்த்து, வீட்­டில் தயா­ரித்த உண­வு­வே பாது­காப்­பா­னது.

சைவ உண­வு­க­ளில் அசைவ உண­வு­கள் :  சிப்ஸ், பாக்­கெட் மற்­றும் டின் உண­வு­க­ளில் விலங்­குக் கொழுப்பு, வெள்ளை சர்க்­க­ரை­யில் கால்­ந­டை­க­ளின் எலும்­புத் தூள், ரெடி­மேட் ஆரஞ்ச் ஜூஸ், சில வகை பானங்­க­ளில் மீன் எண்­ணெய், கம்­ப­ளி­யி­ருந்து எடுக்­கப்­ப­டும் லனோ­லின், பூச்­சி­யி­லி­ருந்து எடுக்­கப்­ப­டும் கார்­மைன் என்ற நிற­மூட்டி ஆகி­யவை மறை­மு­க­மா­கச் சேர்க்­கப்­ப­டு­கின்­றன. பேக்­கரி உண­வு­கள், சூயிங் கம், ஜெல்லி மிட்­டாய், ஜாம், காப்ஸ்­யூல் மாத்­தி­ரை­க­ளில், விலங்­கு­க­ளின் முடி­யி­லி­ருந்து, தயா­ரிக்­கப்­ப­டும் எல்-­­சிஸ்­டீன், விலங்­குத் தோல், கேப்­ரிக் அமி­லம் ஆகி­யவை உள்­ளன. இனிப்­பு­க­ளின் மேல் முடப்­ப­டும் வெள்­ளித்­தாள், மாட்­டுக் கொழுப்­பால் தயா­ரா­கி­றது. கால்­ந­டை­க­ளின் எலும்­புத் தூளான ‘போன் பாஸ்­பேட்’, செயற்கை பான பொடி­க­ளில் சேர்க்­கப்­ப­டு­கி­றது.

விளை­வு­கள்: அலர்ஜி, ஆஸ்­துமா, தொடர் தும்­மல், சரும பிரச்னை, உடல் பரு­மன், வயி­றுத் தொடர்­பான உபா­தை­கள் ஏற்­பட வாய்ப்­பு­கள் அதி­கம். கலப்­ப­டம் இல்­லாத சைவ உண­வு­க­ளைச் சாப்­பிட விரும்­பு­வோர், ‘வீகன் குறி­யீடு’ இருக்­கி­றதா எனப் பார்த்து

வாங்­க­லாம்.

கவ­னிக்க : E என்ற எழுத்­து­க­ளில் வரும் E120, E542, E441, E469, E631, E635, E901, E913, E920, E966, E1105 கோடு எண்­கள், லேபி­ளில் பார்த்­தால் அதில் விலங்­குப் பொருட்­கள் இருப்­ப­தைத் தெரிந்­து­கொள்­ள­லாம்.

யாரி­டம் புகார் செய்­வது?  வாங்­கும் பொருட்­க­ளால், ஏதே­னும் பாதிப்­பு­கள் ஏற்­பட்­டால், அந்­தந்த ஊரில் உள்ள உண­வுப் பாது­காப்பு அலு­வ­ல­ரி­டம் புகார் கொடுக்­க­லாம். அவர் எந்த பொரு­ளால் உடல்­ந­லக் கேடு ஏற்­பட்­டதோ, அந்த இடத்­துக்­குச் சென்று, அந்த உண­வின் சாம்­பிளை பரி­சோ­தனை செய்­வர். ரிப்­போர்ட்­டில் கலப்­ப­டம் என்று தெரிந்­தால், விற்­ற­வர் மற்­றும் தயா­ரித்­த­வர் மேல் கேஸ் போடப்­ப­டும். பாதிக்­கப்­பட்­டோர் நிவா­ர­ண­மும் கேட்­க­லாம்.

தடை செய்­யப்­பட்ட வண்­ணங்­கள்! உண­வுத் தயா­ரிப்­பில் அர­சால் சில வண்­ணங்­கள் மட்­டுமே சேர்க்­கப்­ப­ட­லாம் என சட்­டங்­கள் உள்­ளன. ஆனால், இங்கு சின்­தட்­டிக் வண்­ணங்­கள், தடை­வி­திக்­கப்­பட்ட நிறங்­கள், ரசா­ய­னங்­கள் சேர்க்­கப்­ப­டு­கின்­றன. இதை கண்­டு­பி­டிக்க, அந்­தந்த ஊர்­க­ளில் பரி­சோ­தனை கூடங்­கள் இல்லை. தமிழ்­நாட்­டி­லும் ஆறே பரி­சோ­தனை கூடங்­கள்­தான் உள்­ளன.