கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 12–3–2020

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2020

வாட் ஹேப்பென்ட்? என்ன நடந்தது?

‘d திஸ் வாஸ் ஹேப்­பென்dட் யெஸ்­டர்dடே’    (This was happened yesterday) என்று ஒரு­வர் எழு­தி­னார்.

‘இது நேற்று நடந்­தது’ என்­ப­து­தான் அவர் தெரி­விக்க நினைத்த கருத்து.

ஆனால் அவர் எழு­தி­ய­தில் இலக்­க­ணப் பிழை இருக்­கி­றது. என்ன பிழை?

‘ dதிஸ் ஹேப்­பென்dட் யெஸ்­டெர்dடே’  என்­ப­து­தான் சரி­யான வாக்­கி­யம்.

dதிஸ் This = இது

ஹேப்­பென்dட் happened = நடந்­தது (நிகழ்ந்­தது)

யெஸ்­டர்டே = நேற்று.

கடந்த காலத்தை குறிக்­கப் பயன்­ப­டும் இணைப்பு வினைச் சொல் ‘வாஸ்’ (was).  

 ‘ dதிஸ் ஹேப்­பென்dட் யெஸ்­டெர்dடே’  என்ற வாக்­கி­யத்­தில்  ‘ வாஸ் ‘  (was)  என்­ப­தற்கு இடம் இல்லை.

  ‘ dதிஸ் ‘  என்­பது இந்த வாக்­கி­யத்­தில், ஒரு சம்­ப­வத்தை, ஒரு விபத்தை, ஒரு நிகழ்ச்­சி­யைக் குறிக்­க­லாம்.

‘ dதிஸ் ஆக்­ஸிd­­டென்ட் ஹேப்­பென்dட் யெஸ்­டர்dடே’. This accident happened yesterday. இந்த விபத்து நேற்று நடந்­தது.

‘dதிஸ் ஈவென்ட் ஹேப்­பென்dட் யெஸ்­டர்dடே’. This event happened yesterday. இந்த ஈவென்ட் (நிகழ்ச்சி) நேற்று நடந்­தது.

‘வாட் ஹேப்­பென்dட் டு ஹிம்? ‘ What happened to him? அவ­னுக்கு என்ன நடந்­தது? அதா­வது அவ­னுக்கு என்ன ஆச்சு?

‘dதிஸ் இஸ் வாட் ஹேப்­பென்dட்’ This is what happened.  இது­தான் நடந்­தது.

‘இட் ஹேப்­பென்ட் ஹியர்’. It happened here. அது இங்கு நடந்­தது.

‘வாட் ஹேப்­பென்dட்? ‘ What happened? என்ன நடந்­தது? (வாட் வாஸ் ஹேப்­பென்dட் என்­பது தவறு).

‘நத்­திங்  ஹேப்­பென்dட்’. Nothing happened. ஒன்­றும் நடக்­க­வில்லை.

‘சம்­திங் ஹேப்­பென்dட்’ . Something happened. ஏதோ நடந்­தது.

‘வென் ஹீ வென்ட் dதேர் யெஸ்­டர்dடே, சம்­திங் ஹேப்­பென்dட்’. When he went there yesterday, something happened. அவன் நேற்று அங்கு சென்­ற­போது, ஏதோ நடந்­தது.

‘வாட் எல்ஸ் ஹேப்­பென்dட்? ‘ What else happened? வேறு என்ன நடந்­தது?

‘சம்­திங் dதேட் ஷுdட் நாட் ஹேவ் ஹேப்­பென்dட், ஹேப்­பென்dட்’. Something that should not have happened, happened.

‘சம்­திங் தேட் ஷுட் நாட் ஹேவ் ஹேப்­பென்dட்’ Something that should not have happened = நடக்­கக் கூடாத ஒன்று

‘ஹேப்­பென்dட்’ happened = நடந்­தது.

‘ஐ ஸா வாட் ஹேப்­பென்dட்’ I saw what happened. ‘என்ன நடந்­தது என்று நான் பார்த்­தேன்’, அதா­வது ‘நடந்­ததை நான் பார்த்­தேன்’.

ஸீ ‘see’ என்­பது நிகழ்­கால வினை.

அதன் கடந்த கால வடி­வம் ‘saw’ (‘saw’ என்­ப­தற்கு ‘ரம்­பம்’ என்­கிற இன்­னொரு பொரு­ளும் உள்­ளது).

‘ஐ ஸா dத ஆக்­ஸிd­­டென்ட் வென் இட் ஹேப்­பென்dட்’…I saw the accident when it happened. விபத்து நடந்­த­போது நான் அதைப் பார்த்­தேன்.

‘டெல் மீ வாட் ஹேப்­பென்dட்’ Tell me what happened = என்ன நடந்­தது என்று என்­னி­டம் கூறு.

‘வீ நோ வாட் ஹேப்­பென்dட்’ We know what happened. என்ன நடந்­தது என்று எங்­க­ளுக்­குத் தெரி­யும்.

‘ஃபைன்dட் அவுட் வாட் ஹேப்­பென்dட்’ Find out what happened -- என்ன நடந்­தது என்று கண்­டு­பிடி.

‘வாட் ஆக்­சு­வெல்லி ஹேப்­பென்dட்?’ What actually happened? வாஸ்­த­வத்­தில் என்ன நடந்­தது?

‘வாட் ஹேப்­பென்dட் டு யூ? யூ டோன்ட் கம் டு மீட் மீ ஆட் ஆல்? ‘ What happened to you? You don’t come to meet me at all. உனக்கு என்ன ஆச்சு?  நீ என்­னைப் பார்க்க வரு­வதே இல்லை!

‘ஐ ஆம் ஸாரி dதிஸ் ஹேப்­பென்dட்’ I am sorry this happened. இது நடந்­த­தற்கு நான் வருத்­தப்­ப­டு­கி­றேன்.

‘வாட் ஹேப்­பென்dட் dதேர் dதிஸ் டைம்?’. What happened there this time? இந்த முறை அங்கு என்ன நடந்­தது?

‘வாட் ஹேப்­பென்dட் ஹேப்­பென்dட், லெட் அஸ்  மூவ் ஃபார்­வர்ட்’ What happened, happened. Let us move forward. என்ன நடந்­ததோ நடந்­து­மு­டிந்து விட்­டது, நாம் அடுத்த விஷ­யத்­திற்கு முன்­னே­று­வோம்.

‘வாட் ஹேப்­பென்dட் டு யுவர் ஐ? இட் இஸ் ஸோ ரெdட்’. What happened to your eye? It is so read! உன்­னு­டைய கண்­ணுக்கு என்ன ஆச்சு? இவ்­வ­ளவு சிவப்பா இருக்கு!

‘வாட் ஹேப்­பென்dட் டு யுவர் லெgக்? வொய் ஆர் யூ லிம்­பிங்? ‘ What happened to your leg? Why are you limping? உன்­னு­டைய காலுக்கு என்ன ஆச்சு? ஏன் நொண்­டு­கி­றாய்?

‘ஐ dடோன்ட் லைக் வாட் ஹேப்­பென்dட்’ நடந்­தது எனக்­குப் பிடிக்­க­வில்லை.

‘அவன் ஏன் இப்­படி வருத்­த­மாக இருக்­கி­றான். ஏதோ நடந்­தி­ருக்­க­வேண்­டும்’. வொய் இஸ் ஹீ ஸோ ஸாdட்? சம்­திங் மஸ்ட் ஹேவ் ஹேப்­பென்dட். Why is he so sad? Something must have happened.

‘வாட் dடிdட் dதே ஸே ஹேப்­பென்dட்? வாட் dடூ திங்க் ஹேப்­பென்dட்? What did they say happened? What do you think happened?


என்ன நடந்­தது என்று அவர்­கள் கூறி­னார்­கள்? என்ன நடந்­தது என்று நீ நினைக்­கி­றாய்?  

‘நடந்­தைப் பற்றி நான் கேள்­விப்­பட்­டேன்’. ஐ ஹ்ர்dட் அபவ்ட் வாட் ஹேப்­பென்dட் I heard about what happened.

‘நாங்­கள் சென்ற பிறகு என்ன நடந்­தது? ‘ வாட் ஹேப்­பென்dட் ஆஃப்­டர் வீ லெப்ட்?  What happened after we left?

இத்­தனை வாக்­கி­யங்­களை அவற்­றின் பொரு­ளு­டன் படித்­தீர்­கள். அவற்­றைப் பழ­குங்­கள்…­­ப­ழ­கப்­ப­ழக ஆங்­கி­லம் உங்­கள் வச­மா­கும். பழக்­கம் தான் மொழி.  

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in