பிசினஸ்: குறுகிய காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்! – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2020

சென்றவார தொடர்ச்சி..

10 முயல்­கள் வளர்க்க சொல்­லும் ஒரு

வரு­டத்­திற்­கான செலவு  வரவு கணக்கு

விவ­ரம்                  செலவு         வரவு

நிரந்­த­ரச் செல­வு­கள் (5 ஆண்­டு­க­ளுக்கு)

தாய் முயல்            10,000

கூண்டு                    8,000

மொத்­தம்                  18,000

நடை­மு­றைச் செல­வு­கள்

அடர் தீவ­னம்            44,900

பசுந்­தீ­வ­னம்             2,600

மருத்­து­வ செலவு    5,300

முயல் விற்­பனை மூலம் வரவு     73,500

மொத்­தம்                52,800      73,500

நிகர லாபம்                          20,700

வீட்­டில் வளர்க்­கப்­ப­டும் ஆடு, மாடு, கோழி வளர்ப்­பது போல முயல் வளர்ப்பு தொழி­லும்­மி­குந்த லாபம் தரக் கூடி­யது. முழு­நே­ர­மா­கவோ, பகுதி நேர­மா­கவோ முயல் வளர்த்­தால்­முன்­னேற்­றம் நிச்­ச­யம். முயல் குட்­டி­யா­னது சுமார் ஒரு மாசம் வரை தாயு­டன்­கட்­டா­யம் இருக்க வேண்­டும்.. அப்­போ­து­தான் நல்ல ஆரோக்­கி­ய­மான முயல்­குட்­டி­கள் ­ந­மக்கு கிடைக்­கும்.

நன்­றாக வளர்ந்த முயல்­களை கிலோ ஒன்­றிற்கு தரத்­திற்கு தகுந்­தாற்­போன்று 300முதல் 350, 400, 500, 600 என ரூபாய் வரைக்­கும் விற்­க­லாம்.. இதற்கு தேவை­யா­ன­மு­த­லீடு சுமார் 30,000 மட்­டும் போது­மென்­கி­றார்­கள் முயல் வளர்ப்­பில் ­ஈ­டு­பட்­டுள்­ள­வர்­கள்.. ஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்­கள். கூண்டு, உணவு தானி­யம் என மொத்த முத­லீடு ரூ.25 ஆயி­ரம். வீட்டு முற்­றம், மொட்டை மாடி, தோட்­டம், காலி­யி­டத்­தில் வளர்க்­க­லாம்.  காற்­றோட்­ட­மான இடம் தேவை. கூண்டு முறை­யில் வளர்க்க 50 செ.மீ. உய­ரம், 60செ.மீ. அக­லத்­து­டன் கூண்டு இருக்க வேண்­டும். கூண்­டின் நீளம் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்­ள­லாம். கூண்­டின் அடிப்­பா­கம் எலி, பாம்­பு­கள் நுழை­யா­த­வாறு 90 செ.மீ.உய­ரத்­தில் இருக்க வேண்­டும். உற்­பத்தி 5வது மாதம் முதல், பெண் முயல்­கள் இனப்­பெ­ருக்­கத்தை துவங்­கும். ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்­துக்­கொ­ரு­முறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்­தில் இருந்து இறைச்­சிக்கு பயன்­ப­டுத்­த­லாம்.ரோமம், தோலை­யும் விற்­க­லாம்.

வகை­கள் :  இமா­ல­யன், சோவி­யத் சின்­சில்லா, டச்சு, ஆல்­பினோ வகை இனங்­கள் 2 முதல் 3கிலோ எடை வரை வள­ரும். இறைச்­சிக்­காக பயன்­ப­டுத்­த­லாம். நியூ­சி­லாந்து வெள்ளை, நியூ­சி­லாந்து சிவப்பு, கலி­போர்­னியா வகை

3  முதல் 4 கிலோ  எடை வரை வள­ரும். முயல்­க­ளில் வெள்ளை ஜெயின்ட், சாம்­பல்   நிற ஜெயின்ட்,  பிள­மிஸ் ஜெயின்ட்­இ­னங்­கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வள­ரும்.

ரோமம் விற்­றால் காசு :  சிறந்த ரக முடி 9 மாதத்­தில் இருந்து கிடைக்­கும். ஆண்­டுக்கு பெண் முயல் 1 கிலோ­மு­டி­யும், ஆண் முயல் 750 கிராம் முடி­யும் கொடுக்­கும். முயல் தோலை பத­னிட்டு நல்ல விலைக்கு விற்­க­லாம். முயல் தோலில் பர்ஸ், கையுறை, குல்லா, பொம்­மை­செய்­ய­லாம். முயல் இறைச்­சியை பிரி­யாணி, சில்லி, ரோஸ்ட், சூப், ஊறு­காய் தயா­ரிக்­க­ப­யன்­ப­டுத்­த­லாம். சந்தை வாய்ப்பு ஒரு கிலோ முயல் கறி ரூ.500க்கு விற்­க­லாம்.நட­மா­டும் ஊர்­தி­கள், முயல்­கறி ஸ்டால், மொத்­தக் கொள்­மு­தல் விற்­ப­னை­நி­லை­யங்­கள், விடு­தி­கள், ஓட்­டல்­க­ளுக்கு சப்ளை செய்­ய­லாம்.

கறி­யில் மருத்­துவ குணம் : முயல் இறைச்­சி­யில் அதிக எலும்­பு­கள் இருக்­காது. குறைந்த அளவு கொழுப்பு, அதி­க­பு­ர­தம், உயிர்­சத்­துக்­கள் மற்­றும் தாதுக்­கள் உள்­ளன. உடல் ஆரோக்­கி­யத்­துக்கு உகந்­தது. முயல் இறைச்சி சாப்­பிட்­டால் குடல்­புண், ஜீரண பிரச்னை வராது. வாதம் குறை­யும்.உடல் பித்­தம், காச­நோய், இரு­மல், வாயு தொல்லை, மலச்­சிக்­கல் ஏற்­ப­டாது. இத­ய­நோய் உள்­ள­வர்­கள் கூட முயல் கறி சாப்­பி­ட­லாம். ஆடு, கோழி இறைச்­சி­யை­விட இதில்­கொ­ழுப்பு குறைவு.

தின­மும் 2 மணி நேரம் போதும் : முய­லுக்கு பச்சை தாவ­ரங்­கள், காய்­கள், பழங்­கள், குதிரை மசால், வேலி மசால்,முட்­டை­கோஸ், கேரட், முள்­ளங்கி, பீட்­ரூட், புற்­கள், பலா இலை, முள் முருங்கை போன்­ற­வற்றை கொடுக்­க­லாம். இளம் முயல்­கள் வேக­மாக வளர்ச்சி அடைய சத்­து­மி­குந்த கலப்பு தீவ­னம் அவ­சி­யம். கலப்பு தீவ­னத்­தில் உடைத்த மக்­காச்­சோ­ளம்,உடைத்த கம்பு, கடலை புண்­ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு கலவை ஆகி­ய­வற்றை கலந்து கொடுக்­க­லாம். ஒரு நாளைக்கு ஒரு முய­லுக்கு 200 கிராம் முதல்500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்­டும். வீட்­டில் வீணா­கும் காய்­க­றி­க­ளை­கொ­டுக்­க­லாம். முயல் வளர்க்க தின­மும் 2 மணி நேரம் செல­வ­ழித்­தால் போதும். நல்­ல­ லா­பம் பார்க்­க­லாம்.

ரோமத்­திற்­காக வளர்க்­கப்­ப­டும்  அங்­கோரா இனங்­க­ளை­ த­னித்­த­னி­யாக கூண்­டி­லிட்டு வளர்க்க வேண்­டும். கூண்­டில் வைக்­கோல் படுக்கை இட்­டு ­வ­ளர்ப்­ப­தால் முயல்­க­ளுக்கு புண்­கள் ஏற்­ப­டு­வதை தடுக்­க­லாம். அதோடு 25 சத­வீ­தம்  ­அ­திக ரோமம் கிடைக்­கும். 3 மாதத்­திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்­க­லாம். பெண் முயல் அமை­தி­யில்­லா­மல், வாயை தரை­யிலோ அல்­லது கூண்­டிலோ அடிக்­க­டி­தேய்த்­தால் சினை அறி­கு­றி­யா­கும். சினை அறி­குறி தெரிந்­த­வு­டன் பெண் முயலை ஆண் முயல் இருக்­கும் கூண்­டுக்கு எடுத்து சென்று இனச்­சேர்க்­கைக்கு விட வேண்­டும்.கரு­வுற்ற நாளில் இருந்து 29 நாட்­க­ளுக்­குள் பெண் முயல் குட்­டி­களை ஈனும்.

குட்டி ஈனு­தல் : பொது­வாக முயல்­கள் இர­வில் தான் குட்டி ஈனு­கின்­றன. அவை குட்டி ஈனும் போது எந்த ஒரு தொந்­த­ர­வை­யும் விரும்­பு­வ­தில்லை. 30 நிமி­டத்­திற்­குள் குட்டி ஈனு­தல்­ந­டை­பெற்று முடிந்து விடும். சில சம­யம் எல்­லாக் குட்­டி­க­ளும் தொடர்ந்து வெளி­வ­ரா­மல், சில குட்­டி­கள் பல மணி நேரம் கழித்­தும் வெளி­வ­ர­லாம். அச்­ச­ம­யத்­தில் ஆக்­ஸி­டோ­சின் ஊசி போடப்­பட்டு குட்­டி­கள் வெளிக்­கொ­ண­ரப்­ப­டும். குட்டி போட்­ட­வு­டன் தாய் முயல் குட்­டி­களை நக்கி சினைக்­கொ­டியை உண்டு விடும். பிறந்த

குட்­டி­கள் தாயி­டம் பாலூட்ட முய­லும். அவ்­வாறு பாலூட்ட இய­லாத குட்­டி­கள் உடல் நலம் குன்றி குட்­டி­யி­லேயே இறந்து விடும். தாய் முய­லா­னது வேண்­டு­ம­ளவு அதன் விருப்­பத்­திற்­கு­உ­ணவு எடுத்­துக் கொள்ள அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்­டும். அப்­போது தான் குட்­டி­க­ளுக்­குத்­தே­வை­யான அளவு பால் கிடைக்­கும். தாய் முயல் இர­வில் தான் குட்­டி­கள் பால் குடிக்­க­அ­னு­ம­திக்­கும். ஒரு ஈற்­றில் 6 முதல் -12 குட்­டி­கள் வரை ஈன­லாம்.

வளர்ப்பு முயல்­கள் எங்கு கிடைக்­கும்? முயல் பண்ணை அமைக்க விரும்­பு­வோர் நாமக்­கல் கால்­நடை மருத்­துவ கல்­லூ­ரி­யில்  உள்ள முயல் பண்­ணை­யில் மொத்­த­மாக முயல் வாங்­க­லாம். ஊட்டி சாந்தி நல்­லா­வில் உள்ள செம்­மறி ஆடு ஆராய்ச்சி நிலை­யத்­தி­லும் கிடைக்­கும். முயல்­களை 2 கிலோ­உ­டல் எடை உள்­ள­போது வாங்க வேண்­டும். பெண் முய­லுக்கு குறைந்த பட்­சம் 8 பால்­காம்­பு­கள் இருக்க வேண்­டும். பெண், ஆண் முயல்­களை தனித்­த­னியே வெவ்­வேறு பண்­ணை­க­ளில் இருந்து வாங்க வேண்­டும். அல்­லது முயல் வளர்ப்­போ­ரி­ட­மும் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

பல்­க­லை­யில் பயிற்சி : குறைந்த செலவு, இடம், முத­லீடு, குறு­கிய காலத்­தில் கணி­ச­மான வரு­வாய் ஈட்­டும்­தொ­ழி­லாக முயல் வளர்ப்பு உள்­ளது. சாதா­ரண தீவ­னத்தை தின்று சிறந்த இறைச்­சி­யா­க­மாற்­றும் தன்மை முய­லுக்கு உண்டு. முயலை இறைச்­சிக்­கா­க­வும், தோல் மற்­றும் ரோமத்­திற்­கா­க­வும் வளர்க்­க­லாம். முயல் வளர்க்க கால்­நடை பல்­க­லைக்­க­ழக பயிற்­சி­மை­யம் பயிற்சி அளித்து வரு­கி­றது. முயலை காதைப்­பி­டித்து தூக்­கக்­கூ­டாது. முது­கு­ப­கு­தியை பிடித்து தூக்க வேண்­டும். வளர்ந்த முயல்­களை முதுகு பகு­தியை ஒரு­கை­யா­லும், அதன் வயிற்று பகு­தியை ஒரு கையா­லும் தாங்­கிப் பிடித்து தூக்­க­வேண்­டும்.

நோய்­கள் :  முய­லுக்கு தோல் சிரங்கு, ரத்த கழிச்­சல், சுவாச நோய், குடல் அழற்சி போன்ற நோய்­கள் ஏற்­ப­டும். அப்­படி வந்­தால் கால்­நடை மருத்­து­வரை அணுக வேண்­டும். முயல்­களை வீட்­டில் வளர்க்­கக் கூடாது என்ற தவ­றான கருத்து மக்­க­ளி­டையே நில­வு­கி­றது.  முயல் வளர்த்­தால் வீட்­டில் சண்டை சச்­ச­ர­வு­கள் வரும் என்ற தவ­றான கருத்து. முய­லினை இறைச்­சிக்­காக வெட்ட அஞ்­சு­வது / பரி­தா­பப்­ப­டு­வது. முயல் பண்­ணைத் தொடங்­கிட போது­மான உத­வி­கள் கிட்­டாமை.  விற்­பனை வச­தி­கள் திறம்­பட இல்­லாத நிலை. மானி­யத் திட்­டங்­கள் எது­வும் இல்­லாத நிலை. மேற்­கூ­றிய கார­ணங்­கள் களை­யப்­பட்­டால் சிறப்­பம்­சங்­கள் நிறைந்த முயல் வளர்ப்­பு­ வெகுவிரை­வாக பிர­ப­லம் அடை­யும்.

முயல் இனங்­கள் மற்­றும் சாத­க­மான சூழ்­நிலை : ஐம்­ப­திற்­கும் மேற்­பட்ட முயல் இனங்­கள் இருக்­கின்­றன. குறிப்­பிட்டு சொல்­லக்­கூ­டிய இனங்­கள் வெள்ளை  ஜெயண்ட், சாம்­பல் ஜெயண்ட், நியூ­சி­லாந்து வெள்ளை

மற்­றும் அங்­கோரா இனங்­கள். இவற்­றில் அங்­கோரா இன முயல்­களை உயர்­தர  உரோ­மத்­திற்­காக குளிர்ந்த மற்­றும் மலைப் பிர­தே­சங்­க­ளில் வளர்க்­க­லாம். இறைச்சி முயல்­களை மலைப்பிர­தே­சங்­க­ளி­லும், சம­வெ­ளிப் பகு­தி­க­ளி­லும்  வளர்க்­க­லாம். தட்­ப­வெப்­ப­நிலை 36 டிகிரி வரைக்­கும் இருக்­க­லாம். ஈரப்­ப­தம் காற்­றில்  70 சத­வீ­தக்­கும் மேல் இருக்­கக்­கூ­டாது. அங்­கோரா இன முயல்­களை வெப்­பம் குறைந்த (15-,20 சி) மலைப் பிர­தே­சங்­க­ளில் மட்­டும் வளர்க்­கச் சிறந்­தது.

முயல் இருப்­பி­டம் மற்­றும் வளர்ப்பு : முயல்­களை கூண்­டு­க­ளில் வளர்ப்­பதே சிறந்­தது. மூல­த­னம் குறை­வான மரக்­கூண்­டு­க­ளி­லும் வளர்க்­க­லாம். வளர்ந்த ஆண் முய­லுக்கு (1.5,  1.5, 1.5ச) அள­வுள்ள கூண்­டும், பெண் முய­லுக்கு (2.0, 2.5, 3.0ச) அள­வுள்ள கூண்­டும் ஏற்­றது. இதில் தீவ­னம் மற்­றும் தண்­ணீர் கொடுப்­ப­தற்கு சிறிய பாத்­தி­ரம் அல்­லது கொள்­க­லன்­களை கட்­டி­விட வேண்­டும். கூண்­டு­களை தினந்­தோ­றும் பிரஷ்­கொண்டு சுத்­தம் செய்ய வேண்­டும். இரண்டு மாதத்­திற்கு ஒரு முறை தீ உமி­ழி­கொண்டு சுத்­தம் செய்­ய­லாம்.

முயல் சாணம் கூண்­டு­க­ளில் தங்­கா­வண்­ணம்­பார்த்­துக்­கொள்ள வேண்­டும். முயல் மிக­வும் சாது­வான பிரா­ணி­யா­த­லால், பள்ளி சிறு­வர்­கள், பெண்­கள், வய­தா­ன­வர்­கள் மற்­றும் அனைத்து தரப்­பி­ன­ரும் வளர்க்க ஏது­வா­னது. முயல் வளர்க்க ஆரம்­பிப்­போர் முத­லில் ஓர் ஆண் மற்­றும் மூன்று பெண் முயல்­கள் கொண்ட சிறு­கு­ழு­வாக ஆரம்­பிக்­க­லாம். முயல் வளர்ப்­பில் உள்ள தொழில்­நுட்­பங்­களை அறிந்த பின்­னரே அதிக அள­வில் முயல் வளர்க்க எண்ண வேண்­டும். கொல்­லைப் புறத்­தில் வளர்க்க ஒரு ஆண் மற்­றும் 3 பெண் முயல்­கள் போதும். இதி­லி­ரு­நது வாரந்­தோ­றும் ஒரு­கிலோ இறைச்சி கிடைக்­கும். இது குடும்ப தேவைக்கு போது­மா­னது. கொல்­லைப்­பு­றத்­தில் முயல் வளர்க்­கும் சமை­ய­ல­றைக் கழி­வு­கள் மற்­றும் பசுந்­தீ­வ­னம் கொண்­டே­ப­ரா­ம­ரிக்­க­லாம்.

முயல் வளர்ப்­பின் சிறப்­பம்­சம் : பசுந்­தீ­வ­னத்தை சிறந்­த­தொரு இறைச்­சி­யாக மாற்­று­வ­தில் முய­லுக்கு நிகர் வேறெ­தும்­இல்லை. முயல் இறைச்சி மருத்­துவ குணங்­கள் கொண்­டது. கொலஸ்ட்­ரால் மிக மிகக்­கு­றைவு. இரு­தய நோயா­ளி­க­ளும், முதி­யோர்­க­ளும் ஏற்­கக் கூடிய இறைச்சி. முயல்­க­ளுக்கு தடுப்­பூ­சி­கள் ஏதும் தேவை­யில்லை. குறைந்த சினைக்­கா­லம், அதி­க­குட்­டி­கள் ஈனும் திறன், துரித வளர்ச்சி அதிக தீவன மாற்­றுத்­தி­றன் ஆகிய குணங்­கள் குறிப்­பி­டத்­தக்க சிறப்­பம்­சங்­கள். நிச்­ச­யம் லாப­க­ர­மான பண்­ணைத் தொழில். ஆரம்­பத்­தில் சிறிய அள­வில் பண்ணை அமைத்து, நல்ல அனு­ப­வம் பெற்ற பின்­னர் பெரிய அள­வில்­தொ­டங்­க­லாம். ஒரு நபர் 500 முயல்­கள் வரைக்­கும் பரா­ம­ரிக்க முடி­யும். முன்­னேற்­றம் தரும் சிறந்­த­தொரு பண்­ணைத் தொழில் முயல் வளர்ப்பு.

கிடைக்­கு­மி­டம் : கொடைக்­கா­னல் தாலுக்கா, மன்­ன­வ­னூ­ரில் இயங்­கி­வ­ரும் மத்­திய அர­சுப் பண்­ணை­யில் இன­வி­ருத்­திக்­கான முயல்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. முன்­ப­தி­வின் பேரில்­பெற்­றுக் கொள்­ள­லாம். இறைச்­சி­யின முயல்­கள் வெள்ளை ஜெயண்ட், சோவி­யத்­சின்­சில்லா மற்­றும் உரோம இன முயல் அங்­கோரா ஆகி­யன உள்­ளன. முயல்­வ­ளர்ப்­ப­தற்­கான பயிற்­சி­யும், தொழில்­நுட்ப உத­வி­க­ளும் வழங்­கப்­ப­டு­கின்­றன. நீல­கி­ரி­மா­வட்­டம், சாண்­டி­நல்லா என்ற இடத்­தில் இயங்­கி­வ­ரும் ஆட்­டின இன­வி­ருத்­தி­ஆ­ராய்ச்சி நிலை­யத்­தி­லி­ருந்­தும், காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், காட்­டுப்­பாக்­கம் என்ற இடத்­தில் செயல்­பட்டு வரும் கால்­நடை ஆராய்ச்சி நிலை­யத்­தி­லி­ருந்­தும் கூட முயல்­களை இன­வி­ருத்­திக்­காக வாங்­க­லாம்.

வங்­கி­யில் கடன் உதவி : அனைத்து தேசி­ய­ம­ய­மாக்­கப்­பட்ட வங்­கி­க­ளி­லும் முயல் வளர்க்க கடன் உத­வி­பெ­ற­லாம். கடன் பெறு­வ­தற்கு முன், வளர்ப்­ப­தற்­கான செல­வு­கள் மற்­றும் நிகர லாபம்­அ­டங்­கிய திட்­டத்தை சமர்ப்­பித்து கடன் பெற­லாம். ஆயுள் காப்­பீடு வச­தி­யும்­மு­யல்­க­ளுக்கு உள்­ளது.

விற்­பனை வாய்ப்­பு­கள் : முயல்­களை இன­வி­ருத்­திக்­காக விற்­பனை செய்­ய­லாம். உப­ரி­யான முயல்­களை இறைச்­சிக்­குப் பயன்­ப­டுத்­த­லாம். முயல் தோலை பதப்­ப­டுத்தி, கைவி­னைப் பொருட்­கள் செய்­ய­லாம். இதில் தொப்பி, மேலா­டை­கள், பர்ஸ், சாவிக் கொத்து, கவர் முக்­கி­ய­மா­னவை. முயல் எரு சிறந்த எரு­வாக கரு­தப்­ப­டு­கி­றது. இதி­லி­ருந்து மண்­புழு உரம் தயா­ரிக்­க­லாம். சொந்­த­நி­லம், தண்­ணீர் வசதி, பசுந்­தீ­வன வச­தி­யு­டைய விவ­சா­யி­கள், முயல் வளர்ப்பை ஆரம்­பித்­தால் நிச்­ச­யம் கூடு­தல் வரு­வாய் கிடைக்­கும். நமது நாட்­டின் இன்­றைய இறைச்­சித் தேவையை பூர்த்தி செய்­ய­லாம்.

அனு­மா­னங்­கள் : · கூண்­டு­க­ளில் அடைக்­கப்­பட்ட முயல்­கள் 500 எண்­ணிக்கை வரை­யில் ஒரே நபர்­அன்­றா­டம் பரா­ம­ரிக்க முடி­யும் என்­ப­தால் கூலிக்கு தனி­யாக ஆள் தேவை­யில்லை.  ஒவ்­வொரு பெண் முய­லி­ட­மி­ருந்து வரு­டத்­திற்கு 30 குட்­டி­கள் பெற­லாம்.  இரண்டு ஆண் முயல்­கள் மற்­றும் பத்து பெண் முயல்­க­ள­டங்­கி­யது ஒரு குழு­வா­கும்.  சரா­ச­ரி­யாக பத்து பெண் முயல்­களை இனச்­சேர்க்கை செய்­தால் எட்டு முயல்­கள்­ஒவ்­வொரு முறை­யும் சினை­யா­கும்.

குறிப்பு :ஒரு நப­ரின் முழு நேர வேலை வாய்ப்­பிற்கு குறைந்­த­பட்­சம் 20 ஆண் முயல்­கள் +100 பெண் முயல்­கள் வளர்க்­கும் பொழுது ஒரு ஆண்­டிற்கு நிகர லாபம் ரூ. ஒரு லட்­சத்து 50 ஆயி­ரம் கிடைக்­கும்.