செட்டிநாடு முட்டை மசாலா சாதம்

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2020 10:00

தேவைப்படும் பொருள்கள்:

முட்டை-8. அரிசி-500 கிராம், நறுக்கிய முட்டைக்கோஸ்-2 கோப்பை, நறுக்கிய முந்திரிப்பருப்பு - 20. உலர்ந்த திராட்சை-2 மேசைக் கரண்டி, நறுக்கிய வெங்காயம்-5 மேசைக் கரண்டி, பச்சை மிளகாய்-6, பிரிஞ்சி இலை-2, நெய்-தேவையான அளவு, இலவங்கம்-4, மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி, மிளகுத்தூள்-1 தேக்கரண்டி, மஞ்சள் தூள்-அரை தேக்கரண்டி, உப்பு-தேவையான அளவு.

தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். அரிசியை வேகவைத்துச் சமைத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு உப்பைப் போட்டு நன்றாகக் கிளறிவிட்டுக் கொள்ளுங்கள். 

அடுப்பில் இருப்புச் சட்டியை வைத்து நெய் ஊற்றி அது காய்ந்ததும் முந்திரிப் பருப்பையும் உலர்ந்த திராட்சையையும் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இலவங்கம் ஆகியவற்றைப் போட்டு வதக்கிக் கொண்டு முட்டைக்கோசைப் போட்டுப் புரட்டி விடுங்கள். எல்லாம் நன்கு வெந்ததும் முட்டைக் கலவையைக் கொட்டி பிரிஞ்சி இலையையும்  போட்டுக் கிளறி விடுங்கள். முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை, சாதம் ஆகியவற்றைக் கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் இளறிச் சுடச்சுடப் பரிமாறுங்கள்.