ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 11–3–2020

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2020

நகைச்சுவை உணர்வு!

அந்த அன்பு தாய், கடைசி காலத்­தில் நோயில் கிடந்து துடித்­த­போது, துடித்­துப்­போன ராஜா நான்கு டாக்­டர்­கள், இரண்டு நர்­சு­களை ஏற்­பாடு செய்து, தொடர்ந்து தனது தாயா­ரைக் கவ­னிக்­கச் செய்­தார்.

ஆனா­லும், மர­ணம் அந்த அன்பு அன்­னையை அழைத்­துக் கொண்­டது.

அப்­போது உறைந்து போன ராஜா­வின் கண்­ணீர், இப்­போ­தும் தனி­மை­யில் ஈர­மா­கக் கசி­கி­றது.

‘என் தாய் என்­னும் கோவிலை

காக்க மறந்­துட்ட பாவி­யடி கிளியே'

என்று தான் பாடிய பாட­லில் அன்­னை­யின் அரு­மையை, பிரிவை, எழுதி பாடி­னார் ராஜா. இது போன்று தாம் எழுதி பாடிய பல பாடல்­க­ளின் தாய்­மை­யின் மகத்­து­வத்தை எடுத்­து­ரைத்­துள்­ளார்.

ராஜா­வி­னால் 'அம்மா' என்ற தெய்­வீக உரு­வத்தை பாடல்­க­ளாக பெற்­றது தமிழ்த் திரை­யு­ல­கம்.

ராஜா­வின் நகைச்­சுவை உணர்வு!

 இளை­ய­ரா­ஜா­வுக்கு, நல்ல நகைச்­சுவை உணர்வு உண்டு. ஒரு முறை ராஜா­வும் அம­ர­னும் திருச்­சிக்­குப் பக்­கத்­தில் காரில் சென்று கொண்­டி­ருந்­த­னர்.

"அமர்! பக்­கத்­துல குண­சீ­லம்ங்­கிற ஊரில் உள்ள கோயில் இருக்கு. அங்கே பைத்­தி­யம் குண­மா­கி­ற­துக்கு பிர­சித்தி பெற்­றது. நீ அவ­சி­யம் போக­ணும்” என்­றார் ராஜா. “என்ன விசே­ஷம்?” - கங்கை அம­ரன் கேட்­டார்.

“அங்கே போனா தீராத பைத்­தி­யம் கூட குண­மா­யி­டு­மாம்” - என்­றார் ராஜா. “எனக்கு நம்­பிக்கை இல்லை ” – அம­ரன்

 “ஏன்?” - ராஜா.

"ஏற்­க­னவே போயிட்டு வந்த உனக்கே இன்­னும் குண­மா­க­லையே?” - சிரிக்­கா­மல் சொன்­னார் அம­ரன். அதைக் கேட்டு சத்­தம் போட்டு சிரித்­தார் ராஜா.

நட்­பில் விரி­சல் ஏன்?

அவ­ருக்கு இசை­யில் அதிக நாட்­டம் உண்டு. சரி அந்த டைரக்­ட­ருக்கு யாரு­டைய பாடல்­கள் பிடிக்­கும்?

"பொது­வாக எல்லா இசை­யும் பிடிக்­கும் என்­றா­லும் என் இளை­ய­ரா­ஜா­வின் இசை பிடிப்­ப­து­போல் வேறு எந்த இசை­யும், எந்த நிலை­யி­லும் என் இத­யம் கவர்ந்­த­தில்லை ” என்று உணர்ச்சி பொங்க பேசும் அவர் இயக்­கு­நர் இம­யம் பார­தி­ரா­ஜா­தான்.

இத்­தனை பாசம் கொண்ட இவ­ருக்­கும் ராஜா­வுக்­கும் இடை­யில் ஏன் இடை­வெளி? வறு­மை­யில் வாடும்­போது இருந்த நெருக்­க­மான நட்­பும் வச­தி­யும் புக­ழும் வந்த பிறகு இயல்­பாக இணைய முடி­ய­வில்லை . அது ஏன்? - வேதனை கலந்த புதிர்!

தைரி­யம் இழக்­காதே!

ஒரு சம­யம் சிவா விஷ்ணு கோயி­லில் உட்­கார்ந்து கஷ்ட காலம் எப்போ முடி­யும் என மன­சுல நெனச்­சுட்டே ஒரு பெரு­மூச்சு விட்­டேன். அரு­கில் ஒரு பெரி­ய­வர் அந்­தப் பெரு­மூச்­சி­லி­ருந்தே என் நிலை­மை­யைப் புரிந்து கொண்­ட­வ­ராக என் பக்­கம் திரும்பி அமர்ந்­தார்.

‘‘தம்பி!  நாம் எல்­லா­வற்­றை­யும் இழந்­து­விட்­டா­லும் தைரி­யத்தை மட்­டும் விட்­டு­வி­டக்­கூ­டாது, தைரி­யத்தை மட்­டும் நாம் கொண்­டு­விட்­டால் எல்­லாமே கைகூ­டி­வி­டும்” என்று கூறி­னார்.

தைரி­ய­லட்­சு­மி­யைக் கைவி­டா­தி­ருந்­த­தால் எப்­படி ஒரு இள­வ­ர­சன் தோல்வி நிலை­யி­லி­ருந்து வெற்றி வீர­னாக மாறி­னான் என்ற கதை­யை­யும் சொன்­னார்.

அதைக் கேட்டு புது நம்­பிக்­கை­யு­டன் அறைக்­குத் திரும்­பு­கி­றேன். இளை­ய­ராஜா, கங்கை அம­ரன், பார­தி­ராஜா ஆகி­யோர் என்­னைப் பத்து ஆச்­ச­ரி­யப்­ப­டு­கி­றார்­கள். கையில் காசு இல்­லா­மல் எப்­படி இந்த பாஸ்­கர் உற்­சா­க­மாக இருக்­கி­றான் என நினைப்­ப­து­போல் தெரிந்­தது.

அப்­போது வெளி­யி­லி­ருந்து ஒரு குரல் வரு­கி­றது.

இங்கே ஹார்­மோ­னி­யம், தபேலா, கிடார் வாசிக்­கிற பையன்க இருக்­கி­றாங்­க­ளாமே? அவங்க ரூம் எது?” என்று வாட்ச்­மேனி டம் சோ விசா­ரிக்கி றார்!